வீரம் விளைந்தது ஆசிரியர்: இராமகிருஷ்ணன் ( மொழி பெயர்ப்பு)



*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:73

தேதி:07-10-2022

புத்தகம் எண்ணிக்கை:73

புத்தகத்தலைப்பு: வீரம் விளைந்தது

ஆசிரியர்: இராமகிருஷ்ணன் ( மொழி பெயர்ப்பு)

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் சோவியத் நாவலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர். எளிய போல்ஷ்விக்காக அறிமுகமாகும். பாவெல் கர்ச்சாகின் தனது பங்களிப்பின் மூலம் தனக்களிக்கப்பட்ட கிராமத்தைப் பெரும் போராட்டங்களுக்கு இடையே முன்னேற வைக்கும் கதை. தனது கடந்த கால காதலை கைவிடும் இடம் நம் நெஞ்சில் ஆணியாய் அறைகிறது.

 

**இந்த நாவல் புரட்சி இயக்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு மட்டுமல்ல, புரட்சி இயக்கம் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும் ஓர் அருமையான நாவலாகும்.

 

**இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே வாசகர்களின் குணநலனின் தன்மைக்கேற்ப அவர்களுடன் ஒன்றிவிடுவார்கள் என்பது திண்ணம்.

 

**தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் எப்படித் திருக்குறளின் பாதிப்பு இருக்குமோ அதேபோன்று, சோவியத் இலக்கியங்கள் அனைத்திலும், வீரம் விளைந்தது நாவலின் பாதிப்பு நிச்சயமாக இருக்கும்.

 

**உண்மை மனிதனின் கதை நாவலின் கதாநாயகன், செஞ்சேனையில் விமானப் படைவீரனாக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தவன், போரில் எதிரிகளின் விமானத்தால் ஏற்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டுத் தன் இரு கால்களையும் இழந்துவிடுவான். அவனுக்குத் தைரியம் ஊட்டுவதற்கு அக்கதையில் வரும் மேஜர் வீரம் விளைந்தது நாவலின் பாவல் கர்ச்சாகினைத்தான் உதாரணம் காட்டுவார்.

 

**அதிகாலையின் அமைதியின் வரும் மங்கையர்களில் ஒருத்தி பயந்த சுபாவத்துடன் இருப்பாள். அவளுக்குத் தைரியம் ஊட்டுவதற்காக அக்கதையின் நாயகன், அவளிடம் பாவல் கர்ச்சாகினைத்தான் உதாரணம் காட்டுவான்.

 

**இப்படிப் புரட்சி இயக்கத்தில் ஈடுபடும் ஊழியர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக இந்த நாவல் இருந்தது, இருந்திடும்.

 

**ஒரு புரட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகப் பாவெல் வாழ்ந்தான்.

 

**‘‘பாவெல் இடைவிடாமல் உழைத்தான். அவன் நிம்மதியாக வாழ்வதில் நாட்டம் கொண்டவன் அல்ல; ஆர அமரக்கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்திருப்பதையும், மணி பத்து அடித்தவுடன் நித்திரையின் அணைப்பை நாடுவதையும் அவன் விரும்பியவனல்ல. தானோ, பிறரோ, ஒரு வினாடியைக் கூட விரயம் செய்யக்கூடாது என்பது அவன் கருத்து.’’

 

**How the steel was tempered? என்பது இதன் ஆங்கில மொழியாக்கத்தின் பெயராகும். இருப்புப்பாதை அமைத்துக் கொண்டிருந்த பாவெல் போன்று அர்ப்பணிப்பு மிகுந்த இளம் தோழர்களைக் குறித்த சொற்றொடர்தான் அது.

 

**‘‘தோக்கரெவ், இந்த இளைஞர்கள் பத்தரை மாற்றுத் தங்கமென்று நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைதான். இங்குதான் எஃகு பதம் பெறுகிறது.!’’

 

**நாவலைப் படிப்பவர் எவராக இருந்தாலும் அவர்கள் இன்புறுவதற்கும் அதே சமயத்தில் தங்களைச் சரிப்படுத்திக் கொள்வதற்கும், தங்களை உருக்கு போன்று பதப்படுத்திக் கொள்வதற்கும் இந்நாவல் துணை நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments