மரத்தொகை ஆசிரியர் :இரா பூபதி

 

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:152

தேதி:25-12-2022

புத்தகம் எண்ணிக்கை:152

புத்தகத்தின் பெயர்:மரத்தொகை 

ஆசிரியர் :இரா பூபதி 

பக்கங்கள்: 96           

விலை :120          

பதிப்பகம் :மகிழினி பதிப்பகம், சேலம்  

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

    *வலசையூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஆங்கிலப் பாட பட்டதாரி ஆசிரியர் இரா பூபதி அவர்களின் முதல் கவிதை தொகுப்பு 

 

*பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் கவியரங்க கவிஞர் மற்றும் தமிழ் பேச்சாளராகவும் விளங்குகிறார் 

 

*தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவராக விளங்குகிறார் 

 

*புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ கவிதைகள் கொண்ட தொகுப்பு ஆகும்

 

* "இளைஞர்களே காதல் செய்யுங்கள் வாழ்க்கைக்கு வரங்களைத் தரும் மரங்களை" என்று கூறுவதில் இருந்து இவரின் மரம் மீதான தீராத காதல் புலப்படுகிறது 

 

*மரம் என்னும் இயற்கை அன்னை மீது கொண்ட நேசத்தால் மரத்தொகை என்று தனது புத்தகத்திற்கு பெயர் வைத்துள்ளார் 

 

*நூலகம் சென்று புத்தகம் படித்தவர்கள் என்றும் சும்மா இருந்தது இல்லை என்பதற்கு இவரின் மரத்தொகையை சாட்சி 

 

*என்மனதை வையமிட்ட சிலகவிதைகள்* 

 

*காதலியின் நினைவுகளை சுகமாக்கும் அழகியல் கவிதை 

 

      நான்கு பக்கமும் 

      உன் நினைவுகள் 

      தீவாக நான் .....!

 

*வாழ்க்கை எனும் பயணத்தில் தேடலே வாழ்க்கை என்பதை உணர்த்தும் வாழ்வியல் கவிதை 

 

      தேங்குவதில் இல்லை 

      தேடலில் இருக்கிறது 

      வாழ்க்கை ......!

 

*வெளியே செல்ல வேண்டும் தயாராகவில்லை முகமூடி என்கிறது புதுக்கவிதை இதையே விளம்பரம் மூலம் அழகிய விளக்கம் தந்து மனதை வருடுகூறும்

 

     விளம்பரங்களில் 

     நடிப்பவர்களை விட           விளம்பரத்திற்காக 

    நடிப்பவர்களை அதிகம் ...!

 

*பிரிவு என்னும் கொடிய துயரத்தை உணர்த்தும் கவிதை 

 

      நீ 

      இல்லா வாழ்க்கை 

      நீரில்லா உலகு 

      இரண்டுமே ஒன்றுதான் எனக்கு ....!

 

*மழலைப் பேச்சு ரசிக்கும் குழந்தை மனது 

       பிழைகளும் 

       அழகாகின்றது 

       மழலைப் பேச்சு ....!

 

*வாழ்க்கையில் பல நேரங்களில் அடித்தளங்கள் அஸ்திவாரங்களின் அருமை யாருக்கும் தெரிவதில்லை என்பதை உணர்த்தும் நகைச்சுவை உணர்வு கொண்ட கவிதை வரிகள்  

 

சமைத்தவர்களை விட                  பரிமாறுபவர்களே அதிகம் 'கவனி'க்கப்படுகிறார்கள் 

 டிப்ஸ் ...!

 

*தந்தையைப் பற்றிய கவிதையை படிக்கும் போது கண்டிப்பாக அனைவருக்கும் அவரவர் தந்தை நினைவுக்கு வந்துவிடுவார்கள்.

 

      வார்த்தைக்குள் 

     அடக்க முடியா 

     பெரும் கவிதை அப்பா .....!

 

*மரம் பற்றி ஒரு கவிதையே போதும் இவரின் அன்பை உணர 

 

      ஒரு 

      மரம் போதும் 

      எல்லாவற்றையும் ஈர்க்க...!

 

* இப்படியே எழுதிக் கொண்டே போகலாம் இவரின் கவிதையின் அழகியல் நயத்தை ,பொருளை,சமூக சிந்தனைகளை,இயற்கை நேசிப்பை.

 

*ஒவ்வொரு கவிதையை படிக்கும் போது கவிதையின் களத்திற்கே நம்மை கொண்டு சேர்த்து விடுகிறது அத்தனையும் அருமை

 

*கண்டிப்பாக இயற்கையையும் இந்த சமூகத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய கவிதை தொகுப்பு மரத்தொகை ஆகும் 

 

*இயற்கை நேசர் ,சமுதாயப் பற்றாளர் ,தமிழ்க்கவிஞர் இரா பூபதி மேலும் பல நூல்களை அழகுத்தமிழில் தந்து உயர வாழ்த்துக்கள்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments