மாமனிதர் அப்துல் கலாம் கருத்துரைகள் ஆசிரியர் :ஆர் .சி .சம்பத்

 

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:153

தேதி:26-12-2022

புத்தகம் எண்ணிக்கை:153

புத்தகத்தின் பெயர்: மாமனிதர் அப்துல் கலாம் கருத்துரைகள் 

ஆசிரியர் :ஆர் .சி .சம்பத் 

விலை :30           

பக்கங்கள் :96      

பதிப்பகம்: அருணா பதிப்பகம்           

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளும் வாழ்வியல் சிந்தனைகளும் நல்ல கருத்துக்களும் எழுதப்பட்ட நூல் இது ஆகும்                      

 

*நூலின் முதல் பகுதியில் அப்துல் கலாமுக்கு பிடித்த திருக்குறளாக அவர் கூறுவது "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" இந்தக் குரல் தான் எனக்கு வழிகாட்டி எனக்கு அச்சாணி என் வளர்ச்சிக்கும் இந்த குரல் தான் காரணம் என்கிறார்       

 

*தோல்வியை தோற்கடி 

 

*வெற்றி பெறும் தலைவர்கள் தோல்வி அடைவதில்லை தடைகளை உடைக்கிறார்கள் வெற்றி பெற வேண்டும் எனில் வெல்ல முடியும் என்ற உணர்வுடன் சிந்தியுங்கள் செயல்படுங்கள்            

*எது நடந்ததோஅது 

          நன்றாகவே நடந்தது 

எது நடக்கிறதோ அது

          நன்றாகவே நடக்கிறது 

எது நடக்குமோ அது 

          நன்றாகவே நடக்கும் 

 

*கனவு காணுங்கள் 

 கனவு காணுங்கள்

 கனவு காணுங்கள் 

  அந்த கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள் பின்னர் எண்ணங்களை செயல்களாக உருமாற்றுங்கள்           

 

*தன் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு தனக்கு வழிகாட்டியாக ஐந்தாம் வகுப்பு விஞ்ஞான பாட ஆசிரியர் ,மகாத்மா காந்தி ,விக்ரம் சாராபாய் ஆகிய மூவர்களை அப்துல் கலாம் குறிப்பிடுகிறார்       

 

*மூன்று முக்கிய காரணங்களால் இந்திய மக்களுக்கு மாரடைப்பு வருகிறது என்கிறார் கவலை, உடற்பயிற்சியின்மை ,உணவு பழக்க வழக்கம் ஆகிய தான் அவை குறிப்பாக மனக்கவலை தான் மாரடைப்புக்கு முக்கிய காரணம் என்கிறார்                  

 

*கல்வி என்பது ஒருவரின் கண்களை திறப்பதாகும் இது வியாபாரம் அல்ல      

 

*இந்த பூமியில் பூமிக்கு மேலே பூமிக்கு உள்ளே இருக்கிற எல்லா வளங்களையும் விட சக்தி மிக்கது மனித மூளை                

 

*மிகச்சிறிய புத்தகம் தான் ஆனால் படிக்க படிக்க வியப்பு ஒவ்வொரு ஒவ்வொரு அறிவுரைகளும் நம் வாழ்விற்கு வழி காட்டுபவை

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments