ஆலவாயன் ஆசிரியர்: பெருமாள் முருகன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:126

தேதி:29-11-2022

புத்தகம் எண்ணிக்கை:126

புத்தகம்:  ஆலவாயன்

ஆசிரியர்: பெருமாள் முருகன்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்

** மாதொரு பாகன் நாவலின் தொடர்ச்சியாக இருவேறு தளங்களில் எழுதப்பட்டது இருநாவல்கள்

 

** ஒன்று கதையின் நாயகன் இறந்தால் எப்படியிருக்கும் மற்றொன்று உயிரோடு இருந்தால் எப்படியிருக்கும்

 

** கதையின் நாயகன் இறந்ததால் நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி எழுதப்பட்ட  நாவல் ஆலவாயன்

 

** கதையின் நாயகன் தன் மனைவி மற்றும் குடும்பத்தார் செயல்பாடுகளால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்கிறான்

 

** நிகழ்வுகள் எல்லாம் உளவியல் ரீதியான அணுகுமுறை

 

**காளி பாசமாக வளர்த்த பூவரச மரத்தின் விழுதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான்

 

** காளி உயிராய் உணர்வாய் உடலாய் நேசித்த மனைவி மற்றவனோடு என்பதால் மிகுந்த  மனவேதனையின் உச்சத்தால் தற்கொலை செய்து கொள்கிறான்

 

** கணவன் இறந்த பிறகு பூவர மரத்தைக் கூட அவன் மீது கொண்ட பாசத்தால் பொன்னா வெட்ட விடவில்லை

 

**கணவனை இழந்த சோகம்,கணவன் இறப்பால் ஊர் மக்களால் பேசப்படும் புரளிகள் வசவுகள் அன்புக்கணவனின் நினைவுகள் இவற்றாலே நாவல் நகர்கிறது

 

** தன்மகன் இறந்த பிறகு மருமகளை மகளாக பேணிப்பாதுகாக்கும் சீராயி தாய்மையின்  சிகரம்

 

** சீராயி,வல்லாயி,பொன்னா என பெண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரப்படைப்பு

 

**தனக்கு பிறந்த குழந்தையின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் தன் கணவனின் செயல்பாடுகளோடு  ஒப்பிட்டு குழந்தையை ஆலவாயன் என அன்போடு அழைப்பதில் நாவல் நிறைவடைகிறது.

 

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

 

Post a Comment

0 Comments