நட்புக்காலம் ஆசிரியர்:அறிவுமதி

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:127

தேதி:30-11-2022

புத்தகம் எண்ணிக்கை:127

புத்தகத்தலைப்பு: நட்புக்காலம்

ஆசிரியர்:அறிவுமதி

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.  

** அழகிய ஓவியத்தில் ஆண் பெண் நட்பின் மேன்மையினை உணர்த்தும் உயிர்ப்புள்ள கவிதைகளின் தொகுப்பு

 

** நட்பு என்பது மனித உயிரின் உயிர்த்துடிப்பு என்பதை உணர்த்தும் கவிதை வரிகள்

 

** ஆண் பெண் நட்பு என்பதை தாய்மையோடு ஒப்பிடும் கவிதை வரிகள்

 

** மனதைக்கவர்ந்த கவிதைகள்

 

**உன்

பிறந்தநாளுக்கான

வாழ்த்து அட்டைகளில்

நல்ல வரிகள்

தேடித்தேடி

ஏமாந்த சலிப்பில்

தொடங்கிற்று 

உனக்கான

என் கவிதை

 

** எல்லாவற்றிலும்

எனக்குப்பிடித்ததையே

நீ

தேர்ந்தெடுத்தாய்

 

உனக்குப்பிடித்ததையே

நான்

தேர்ந்தெடுத்தேன்

 

அதனால்தான்

நட்பு

நம்மைத்

தேர்ந்தெடுத்திருக்கிறது

 

** தாய்ப்பாலுக்கான

விதை

காதலில் இருக்கிறது

 

தாய்மைக்கான

விதை

நட்பில் இருக்கிறது

 

** பேருந்து

நிறுத்தத்திற்குச்

சற்றுத்தள்ளி நின்று

பேசுகிறவர்கள்

காதலர்கள்

 

நிறுத்தத்திலே

நின்று

பேசுகிறவர்கள்

நண்பர்கள்

 

** பால் வாசனையில்

அம்மா

 

அக்குள்

வாசனையில்

மனைவி

 

இதயத்தின்

வாசனையில்

நட்பு

 

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

 

Post a Comment

0 Comments