STD - 9 TM NOTES OF LESSON OCTOBER 4TH WEEK

 

26 கணினியின் பாகங்கள்

நாள்              : OCTOBER 4th  WEEK

வகுப்பு          : 9

பாடம்           : அறிவியல்

பாடப்பகுதி   : பாடம் 26  கணினியின் பாகங்கள்



 







அறிமுகம் :

1.    Smart என்ற சொல் உணர்த்தும் பொருள் யாது?

2.    Smart Phone என்னென்னப் பணிகளைச் செய்யக் கூடியது?

3.    தற்போதைய வாழ்க்கை எளிமைப் படுத்தப் பட்டுள்ளதா? ஆம் எனில் எப்படி?

4.    தொடுதிரை என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?

5.    உலகத்தை உங்களது கைக்குள் அடக்கமுடியுமா?

6.    பள்ளியில் உள்ள கணினியைக் காண்பித்து உள்ளீட்டுக் கருவி,வெளியீட்டுக் கருவி போன்றவற்றைக் காண்பித்து ஆர்வம் ஏற்படுத்தி,மாணவச்செல்வங்கள்  அளிக்கும் விடைகள் மூலமாகவும் இப்பாடப்பகுதி அறிமுகம் செய்யப்படும்.

 


கற்றல் விளைவுகள் : வாசித்தல், புதிய சொற்களை அடையாளம் கண்டு, அடிக்கோடிடுதல், பொருளறிதல், கருத்து வரைபடம் வரைதல்,தொகுத்தல்,எழுதுதல், உயர்சிந்தனை வினாக்களை உருவாக்குதல், உயர் சிந்தனை வினாக்களுக்கு விடையளித்தல்.

வாசித்தல்: பக்க எண் குறிப்பிட்டு வாசிக்கச் சொல்ல வேண்டும். இப்பகுதியில் உள்ள புதிய சொற்களை  அடிக்கோடிட்டு  படிக்கவேண்டும்.  கலந்துரையாடல் மூலம் அதற்கு இணையான பொருளை அறிந்து கொள்ள வேண்டும்.

 

கருத்து வரைபடம்

 

கணினியின் பாகங்கள் :

1.உள்ளீட்டகம் (Input Unit)  2. மையச்செயலகம் (CPU)   3. வெளியீட்டகம்

(Output Unit)

உள்ளீட்டகம் (Input Unit) : தரவுகளை கட்டளைகளை - உள்ளீடு செய்தல்விசைப்பலகை, சுட்டி, வருடி, பட்டைக் குறியீடு படிப்பான்,ஒலி வாங்கி,இணையப் படக்கருவி, ஒளிப் பேனா

விசைப்பலகை : இரண்டு வித பொத்தான்கள்   1.  எண்விசை  2. எழுத்து விசை

சுட்டி : இரண்டு வித பொத்தான்கள்   அதன் நடுவில் நகர்த்தும் உருளை - கணினியில் குறிமுள்ளை இயக்குவது.

மையச்செயலகம்  

1. கட்டுப்பாட்டகம் (Control Unit)  

2. கணிதத்தருக்கச் செயலகம் (ALU)  

3. நினைவகம் (Memory Unit)

 

 

வெளியீட்டகம் :

கணினித்திரை (Monitor), அச்சுப்பொறி (Printer), ஒலிபெருக்கி (Speaker), வரைவி (Plotter)

கணினியின் வகைகள்

பெருமுகக்கணினி (Mainframe Computer)  , 

 குறுமுகக்கணினி (Mini Computer)

நுண்கணினி அல்லது

தனியாள் கணினி (Micro or personal computer)

மீக்கணினி (Super computer)

தனியாள் கணினியின் வகைகள் :

1.மேசைக்கணினி (Desktop)     

 2. மடிக்கணினி (Laptop)  

3. பலகைக் கணினி (வரைப்பட்டிகை) (Tablet)

கணினியை இணைத்தல் :

விஜிஏ. ( VGA – Video Graphics Array),   

 யுஎஸ்பி (USB – Universal Serial Bus)

தரவுக்கம்பி (Data cable)

தொகுத்தலும் வழங்குதலும்

 மாணவச் செல்வங்கள் தாங்கள் தொகுத்தவற்றை ஒவ்வொரு குழுவிலிருந்தும் அதன் தலைவர் வழங்குவார் .

கணினியின் பாகங்கள் :

1.உள்ளீட்டகம் (Input Unit)  

2. மையச்செயலகம் (CPU)

3. வெளியீட்டகம் (Output Unit)

மையச்செயலகம்  

1. கட்டுப்பாட்டகம் (Control Unit)  

2. கணிதத்தருக்கச் செயலகம் (ALU)  

3. நினைவகம் (Memory Unit)

கணினியின் வகைகள்  ----> தனியாள் கணினியின் வகைகள் ---->கணினியை இணைத்தல்  

 மதிப்பீடு

1.சுட்டியில் கணினியின் கோப்புக்களைத் திறக்க .....  பொத்தான் பயன்படுகிறது

  ) வலது   ) இடது   ) நடுவில் உள்ள   ) உருளை

2. உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

    ) சுட்டி

 ) விசைப்பலகை    

 ) ஒலிபெருக்கி   

) விரலி

3. கணினியின் முதன்மையானப் பாகங்களைக் கூறுக?

4. USB விரிவாக்கம் ..............

எழுதுதல்:

சில உயர்வகைச் சிந்தனை வினாக்களுக்கு விடைகளைக் காணச் செய்து அதுபோல புதிய வினாக்களை உருவாக்கச் செய்து அதனை வழங்கி எழுதி வரச்சொல்லப்படும்.

குறைதீர் கற்றல்:

மதிப்பீட்டுப் பகுதியின் மூலம் கடினப் பகுதிகளை அடையாளம் கண்டு ICT மூலம் எளிமைப்படுத்தி விளக்கப்படும்.நேரடியாக கணினியைக் கையாளச் செய்யப்படும்.

தொடர்பணி :  

    கணினியின் உள்ளீட்டுக் கருவிகளை சரியான இடங்களில் பொருத்துக. VGA கம்பி வடத்தைக் கொண்டு LCD இணைத்திடுக.


STD : 1 TO 12TH , COMPETATIVE EXAM STUDY MATERIAL & TEACHER DETAILS KANI MATHS WEBSITE MAIN LINK : CLICK HERE


📕📕 Kanimaths Website இல் Study material பயிற்சிக் கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள் அனைத்தும் எப்படி Search செய்வதற்கான வீடியோ





கீழே கொடுக்கப்பட்டுள்ள      click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி ஒன்றாம் வகுப்பு முதல்   ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் குறிப்பேடு pdf மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

CLICK HERE

 


அன்புடன்       இரா.சக்திவேல்

                       பட்டதாரி ஆசிரியர்

                       அரசு உயர்நிலைப் பள்ளி

                       மணக்கால் அய்யம்பேட்டை

                       திருவாரூர் மாவட்டம் 610104

                          

Bootstrap demo




Post a Comment

0 Comments