தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:87
தேதி:21-10-2022
புத்தகம் எண்ணிக்கை:87
தலைப்பு: ஒரு கிராமத்துப்பறவையும் சில கடல்களும்
ஆசிரியர்: வைரமுத்து
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
** கவியரசு வைரமுத்து பயணம் செய்த இரு வெளிநாடுகளைப்பற்றிய கட்டுரைகள்
** லண்டன் பயணம் அவரது கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்குப் பாராட்டு விழா
** ஜப்பான் பயணம் தன் நண்பர் கவிதைத் தொகுப்பு மற்றும் கலைஞரின் தொல்காப்பிய பூங்கா வெளியீட்டு விழாவிற்கு செல்கிறார்.
** வேர்ட்ஸ் வேர்த் நினைவு இல்லம் அவர் பயணித்த இடங்களில் எல்லாம் பயணம் செய்து மகிழ்கிறார்
**புகழ்வதால் தோள்கள் விரிந்து விடாமலும் இகழ்வதால் நெஞ்சுக்கூடு உடைந்து விடாமலும் பதறாமல் பயணம் போகிறவனே நீண்ட தூரம் கடக்கிறான்.
** அரசியல்,மதம்,சினிமா இம்மூன்றும் இந்தியாவை ஆட்டுவிக்கும் சக்திகள்
** நாடு,உழைப்பு, ஒழுங்கு,குடும்பம் இவைகளே ஜப்பானிய மக்களின் முன்னுரிமைகள்
** நேரத்தை விரயம் செய்கிறவன் வாழ்க்கையை இழக்கிறான். நேரத்தை சேமிக்கிறவன் வாழ்க்கையை வாங்குகிறான்
** போர் விமானங்களே
போய் விடுங்கள்
எங்கள் வானம்
வெள்ளைப் புறாக்களின் வீதி
**தொழில் நுட்பப் பெருக்கத்தால் புயல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் புத்துலகத்திற்கு நம் பங்களிப்பு என்ன?
**உலகம் இந்தியாவை நினைவுவைத்துக் கொள்வதற்குச் சில பழைய அடையாளங்கள் இருப்பதுபோல் தமிழர் களை நினைவு வைத்துக்கொள்வதற்குள்ள பொது அடையாளங்கள் என்ன?
**என் பயணங்களால் விளைந்த இந்தக் கேள்விகளைத் தமிழர்களின் ஓவ்வொரு வீட்டு வாசலிலும் விட்டுவிட்டு விடைபெறுகிறேன்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments