பனிக்கால ஊஞ்சல் ஆசிரியர்:கலாப்பிரியா

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:98

தேதி:01-11-2022

புத்தகம் எண்ணிக்கை:98 தலைப்பு: பனிக்கால ஊஞ்சல்

ஆசிரியர்:கலாப்பிரியா


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

 

**கலாப்ரியா தமிழின்நவீன கவிஞர்களில்  குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர்.

 

**கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். 

 

**அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதியவர் சோமசுந்தரம். 

 

**வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். 

 

**கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். 

 

*கசடதபறவிற்குபின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்

 

** மனதைக் கவர்ந்த கவிதைகள்

 

**விதையை

மண்ணில் ஒளித்து

வைக்கும்

வெள்ளந்திக்குப் பெயர்

விவசாயி

 

**ஆசையைத்

துறக்கப் போகும்

சித்தார்த்தனுக்கெதற்கு

அரச மர நிழல்

 

** விலா எலும்பிலிருந்து

அல்ல

ஒரு வேரிலிருந்துதான்

செய்திருக்க வேண்டும்

பெண்ணை

 

** உன் நினைவின்

போர்வைகளைப்

போர்த்திக்கொண்டால்

இன்னும் குளிர்கிறது

 

** தவம் என்பது

கேள்விகளை யோசிப்பதா

பதில்களை யோசிப்பதா

 

**உன்

காகிதக்கப்பல்

மிதப்பதும் மகிழ்ச்சி

என்

காகிதக்கப்பல்

மூழ்குவதும் மகிழ்ச்சி

உனக்கு

 

**மேலே வந்தால்

நீயே

பறித்துக் கொள்ளலாமே

ஏன் கல்லெறிகிறாய்

கீழே நின்று

 

**நீ மேல் படிக்கு

வந்தவுடன் என்னைக்

கீழே தள்ளு

கீழ்ப்படியிலிருந்துகொண்டே

காலை இழுக்காதே

 

**சிறகொடுக்கித்

தூங்குகிறது பறவை

யாரும் ஆடாத

தோட்டத்துப்

பனிக்கால

ஊஞ்சலெனோ.

 

**தவறாக

ஆயிரங்கால் மண்டபத்தினுள்

புகுந்துவிட்ட நாய்

திகைத்து நிற்கிறது

 

**நீ கொஞ்சம்

மெதுவாகப் போயிருக்கலாம்

உன்னைமுத்தமிட

நினைத்து உதிர்ந்த

மழைத் துளி

என் இமையை நனைக்கிறது

 

** வித்தியாசமான கவிதைகள் நம் மனதை கவர்கிறது

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Bootstrap demo




 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments