மசால் தோசை முப்பத்துஎட்டு ரூபாய் ஆசிரியர்:வா.மணிகண்டன்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:99

தேதி:02-11-2022

புத்தகம் எண்ணிக்கை:99

தலைப்பு: மசால் தோசை முப்பத்துஎட்டு ரூபாய்

ஆசிரியர்:வா.மணிகண்டன்

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.       

** வா.மணிகண்டன் தன்னோடு பயணித்த சக மனிதர்களையும் எப்படி நேசித்துள்ளார் என்பதை இக்கட்டுரைகளை படிக்கும் போது தெரிகிறது.

 

** சில நேரல்களில் நாம் சந்தித்த சில மனிதர்கள் ஏற்படுத்தும் தாக்கங்களும் அதிர்வுகளும் அற்புதமானவை அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

 

** பள்ளிப்பருவ நிகழ்வுகளை படிக்கும்போது என் பள்ளி நாட்கள் மனதில் பசுமையாக துளிர்விடுகிறது.இதுதான் கட்டுரையாளரின் வெற்றியோ

 

**மற்றவர்கள் பார்வையில்

சாதாரணமானவர்களும்

பலநேரங்களில் 

சாதனையாளர்கள் தான் என்பதை சிலக்கட்டுரைகளில் உணர முடிகிறது

 

** கட்டிட தொழிலாளி முதல் அலுவலக மேலாளர் வரை தன்னைப்பாதித்தவர்களை அழகாய் பதிவுசெய்துள்ளார்

 

** மசால்தோசை முப்பது ரூபாய் என புத்தகத்திற்கு பெயரிட்டு அனுமந்தாவை சிறப்பித்துள்ளார்

 

** கட்டுரைகள் மொத்தம் 25 இப்புத்தகத்தில் உள்ளது .மனதைக்கவரும் அழகிய எழுத்துநடை

 

**சிலநேரங்களில் உண்மையைச் சொல்லும் நல்லவர்களையும் சிலர் கூறுவதற்காக தவறாக நினைத்துவிடுகிறோம்

 

** நிறைய சல்மான்கான்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம் பலநேரங்களில்

 

** அன்பென்றால் அப்பாத்தா என்று சொல்லிவிடலாம்.அம்மாவும் அப்பாத்தாவும் எப்போதுமே நம்மை உயிராய் நேசிப்பவர்கள்தான்.அப்பாத்தா பற்றிய கட்டுரை கண்ணில் கண்ணீர் வரவழைக்கிறது

 

** தர்மஅடி கட்டுரை என் முதல்நாள் ஆசிரியர் பணி நினைவுக்கு வருகிறது.

பாடம் நடத்திவிட்டு ஒரு மாணவனிடம் தண்ணீர் வாங்கி குடித்தேன் குடிக்கும் போது கப்பி குடித்தாயா எனக்கேட்டேன் இல்லை என்றான் தண்ணீர் குடித்தேன் வகுப்பில் அனைவருமே சிரித்தார்கள் ஏன் என்றேன் சார் கப்பி குடிக்கமாட்டான் உறிஞ்சி குடிப்பான் என்றார்கள்

நான் நிசப்தமாகிவிட்டேன்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments