தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை_ விவாதத்திற்கான குறிப்புகள்

 



*...தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு, I.A.S., அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு*

 

*02.10.2022  அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.*

 

*01.) கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி  மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் .* 

 

*2.) 2020 - 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.*

 

*3.) 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு  உரிமை உண்டு*

 

*4.)18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் கிராமத்தின் வளர்ச்சிக்கு  ஆக்கப்பூர்வ தீர்மானம் ஏற்றவும்.*

 

 *5.)உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல்  தெரியவில்லை என்றாலும் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை  என்றால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்கள்க்கு  உரிமை உண்டு.*

 

*6.) கிராம சபை கூட்டத்தில்  மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.* 

 

*6.)ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும்  ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.* 

 

*7.) ஏழு நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.*  

 

*8.) தமிழக அரசு  கிராம சபை கூட்டம் தெரிவித்தும் நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர்  மீது புகார்  அளிக்க  வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட  ஆட்சியரிடம்  புகார் தெரிவிக்கவும்.*

 

*9.)மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை புகார் பொதுமக்கள் தெரிவிக்க பட்டால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர்  அதிகாரம் பறிக்கப்படும்.*

 

*10.)கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது   தீர்மானம் சரி அல்லது தவறு  முடிவெடுக்கும் அதிகாரம்   நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டுகிறேன்.*

 

*கிராம சபை கூட்டம் இல்லை என்றால்*....

 

 *உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.*

*உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.*

 

*முதலமைச்சர் தனி பிரிவு - எண்*

 044 25672345, 044 25672283

 

*முதலமைச்சர் - எண்*

+91 9443146857

 

*தொலைநகல் - எண்*

044 25670930, 044 25671441

தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை_ விவாதத்திற்கான குறிப்புகள்:

 

     தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான குழு நியமிக்கப்பட்டு அக்குழு தனது பணிகளை துவங்கியுள்ளது.

 

 பொதுவாக இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்படும்போது அக்குழு கூடி வரைவுக் கொள்கையை உருவாக்கிய பின்னர் அதனைச் சுற்றுக்கு விட்டு அதன்மீதான பின்னூட்டங்களை, உள்ளீடுகளைக் கேட்டு செழுமைப்படுத்தும் பணி நடைபெறும்

 

சமச்சீர் கல்வி கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவை உருவாக்கத்தின் போதிலிருந்து இந்த ஆரோக்கியமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

 


இன்றைய மின்னணு யுகம் இதனை மேலும் ஜனநாயகப்படுத்த உதவியாக உள்ளது

 

இந்த வாய்ப்பினைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

 

இந்நிலையில் எந்த எந்த கூறுகளைப் பற்றியெல்லாம் நாம் நமது குழுக்களில் விவாதிக்கலாம் என்பதற்கான குறிப்பு கீழே பகிரப்படுகிறது

 

இவை ஆலோசனைகளுக்காக மட்டுமே இதில் குறிப்பிடப்படாத அந்தந்த பகுதிகளின் தனிப்பட்ட சூழல்களையும் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டுகிறோம்

 

1. முன்பருவக்கல்வி:

 

முன் பருவக்கல்வியை அதன் முழுமையான பொருளில் செயல்படுத்துதல்.

 

குழந்தைகளுக்கு தேவையான உடலியல், உளவியல் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கான ஏற்பாடு

 

மாண்டிசோரி முறையிலான செயல்பாடுகளை ஊக்குவித்தல்

 

முன் பருவக்கல்வியை பள்ளிக்கல்வியுடன் பொருள் பொதிந்த வகையில் இணைப்பதற்கான ஏற்பாடுகள்.

 

அங்கன்வாடி மையங்களிலுள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் முறையான ஊதியத்தில் நியமித்தல்.

 

முன்பருவக்கல்வி சுகாதாரத்துறையுடனான இணைச் செயல்பாடுகளில் கூடுதல் இணைப்பை உறுதி செய்தல்

 

2. பள்ளிக்கல்வி:

 

பள்ளி வசதி (Access to schooling)

கட்டமைப்பு, கழிப்பறை, தூய்மை, கழிப்பறை பயன்பாட்டில் பெண் குழந்தைகளுக்கான, இயலாக் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்.

 

உள்ளடங்கிய கல்வியை அதன் உண்மையான பொருளில் நடைமுறைப்படுத்துதல்.

 

கலைத்திட்டம்: பாடத்திட்டம்,

கலைத்திட்டம், பாடத்திட்டத்தில் உள்ளூர் சூழலுக்கேற்ற நெகிழ்வுத்தன்மை,

பாடப்புத்தகம், குறிப்பேடு, வரைபடம், உள்ளிட்ட கற்றல் பொருட்கள்,

நெகிழ்வான பள்ளிக்கூட நடைமுறைகள்.

 

கற்பித்தல் முறை:

 

துவக்கக் கல்வி-பள்ளிக்கல்வி

 

மதிப்பீட்டு முறைகள்-

 

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை அதில் தேவையான சீர்திருத்தங்கள்

 

துணைக் கற்றல் செயல்பாடுகள்

 

பொதுமக்கள் பங்கேற்பு:

 

 பள்ளி மேலாண்மைக்குழுக்களை வலுப்படுத்துதல்.

 

குழந்தைகள் உரிமைகள் மற்றும் அதன் மீறல்களை கண்காணிக்கும் வசதிகள்.

 

மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்க உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துதல்.

சான்றிதழ் வழங்குவதில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள்.

 

தொழில்நுட்பம் (கற்றல் கற்பித்தலில், பள்ளி மேலாண்மை செய்வதில் )

ஆசிரியர்களின் பெரும்பான்மையான நேரத்தை கற்றல் கற்பித்தலில் ஈடுபடச் செய்ய ஏதுவான வசதிகள்

பள்ளிய நடைமுறைகளில் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துவதை அதிகரிக்கும் ஏற்பாடுகள்.

 

அனைத்து மாணவர்களுக்கும் இணைய உரிமை.

ஆசிரியர்களுக்கு சம வேலைக்கான சம ஊதிய உரிமை.

 

தொகுப்பூதிய முறைமைகளை முற்றிலும் அகற்றி, சுயமரியாதையுடன் கூடிய மதிப்பான ஊதியம் வழங்குதல்.

 

3. உயர்கல்வி :

கல்லூரி வசதி (Access to colleges) செயல்படக்கூடிய மேநிலைப்பள்ளிகளை படிப்படியாக கல்லூரிகளாக பரிணாமம் அடையச் செய்தல்.

 

ஒன்றிய அரசின் உயர்கல்விக்கான (யுஜிசி ,ரூசா) போன்ற அமைப்புகள் வழிகாட்டும் நெறிமுறைகளை மட்டும் அளித்தல், பல்கலைக்கழகங்கள் ஜனநாயக முறைப்படி செயல்பட ஊக்குவித்தல்.

 

அனைவருக்கும் கல்லூரிக்கல்வி உரிமை.

 

அனைத்து மாணவர்களுக்கும் இணைய உரிமை.

 

கல்லூரிப் பாடத்திட்டங்களில் வேலைவாய்ப்புக்கான கூறுகளை இணைத்தல்

 

கல்லூரிக் கல்வியின்போதே அறிவுபூர்வமான செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள ஊக்க ஊதிய நடைமுறைகள்

 

கல்லூரிகள் பாடத்திட்டம், கற்பித்தல் முறை, சான்றிதழ்கள் அளிக்கும் உரிமைகளில் ஜனநாயகத் தன்மை.

 

மாணவர்களிடையே ஜனநாயகத் தன்மையினை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை உறுதி செய்தல்.

 

மாணவர்களிடையே பாலின சமத்துவத்தினை, அறிவியல் மனப்பான்மையினை உண்டாக்குவதற்கான வாய்ப்புகளை உறுதிசெய்தல்.

 

கெளரவ விரிவுரையாளர் நடைமுறையை அகற்றி நியாயமான முறையான ஊதியம் வழங்குவதை நடைமுறைபடுத்துதல்.

 

4. கொள்கை அடிப்படையில் : 

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல்.

 

நுழைவுத் தேர்வுகளை அறவே ஒழித்தல்

 

பள்ளி மேலாண்மையை பொதுமக்கள் பங்கேற்புடன் நடைமுறைப்படுத்துதல்.

 

பெற்றோர் ஆசிரியர்கள் நல்லுறவை மேம்படுத்துதல்

 

உயர் கல்வியில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டை முற்றிலும் தளர்த்தி அந்தந்த மாநிலங்கள் சுதந்திரமாக செயல்படவும், மாநிலங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் சுதந்திரமாக இயங்க வழிவகை செய்தல்.

 

தங்கள் மாவட்ட தன்மைக்கு ஏற்ப இன்னும் சில பகுதிகளையும் இணைத்து, விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளை பரிந்துரைகளை தொகுத்து எழுத்துப்பூர்வமாக மாநிலத்திற்கு வழங்கு வேண்டும்.

 

மாவட்டம் தோறும் தரப்படும் பரிந்துரைகளை மண்டல வாரியாக இன்னும் கூடுதல் தகவல்களோடு விவாதித்து மாநில அளவில் இறுதி செய்து அரசுக்கு பரிந்துரையாக தரலாம்.


அனைவருக்கும் வணக்கம் மேற்பார்வையாளர் பொறுப்பு மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு.

 

          மாநில கல்விக் கொள்கை கருத்துக்கள் ஆலோசனைகள் 

கூகுள் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பு அவற்றை ஒரு முறை நன்றாக படித்து கேட்கப்பட்ட கேள்விகளை நன்றாக புரிந்து கொண்டு பின்பு கூட்டம் நடைபெறும் தருணத்தில் பொதுமக்களின் கருத்துக்களை தெளிவாக பதிவிட வேண்டும்.

 

                 கிராமசபா நடைபெறும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் இந்த கூகுள் படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.


 கூகுள் படிவத்தில் கேட்கப்படும் கேள்விகள் :

1. ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை எவ்வாறு மேம்படுத்தலாம்?

2. பள்ளிகளில் கற்றல் எப்படி இருக்க வேண்டும்? பொருத்தமான மற்றும் வளர்ச்சிக்கான கூறுகள் என நீங்கள் எதை நினைக்கிறீர்கள் ?

3. கற்றலில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல்ஆங்கிலத்தில் புலமை(திறமை), அறிவியல் கல்வியை மேம்படுத்துதல்கல்வியில் கலை மற்றும் பண்பாட்டுக் கல்வியை (ஒருங்கிணைத்தல்) அறிமுகப்படுத்துதல் போன்றவை பற்றிய கருத்துகள்

4. 100% சேர்க்கை மற்றும் தக்கவைத்தலை எவ்வாறு உறுதி செய்வது?  (போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் பள்ளி வசதியை ஏற்படுத்த கவனம் செலுத்துதல்).

 

5. பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்திறன்களை மேம்படுத்துதல் .

6. ஆசிரியர்களுக்கு எவ்வாறு உதவிகரமாக(ஆதரவாக) இருப்பது  ?

7. உட்கட்டமைப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் பராமரிக்கலாம் ?

8. பள்ளி மேம்பாட்டிற்கு கிராம ஊராட்சிகள் எவ்வாறு உதவலாம்?

9. தொழில் வழிகாட்டுதல் மற்றும் உயர்க்கல்விக்கான ஆதரவு சார்ந்த கருத்துகள்

10. பிற கருத்துகள் மற்றும் ஆலோசனைகள்.


மாநில கல்விக் கொள்கை கருத்துக்கள் ஆலோசனைகள் PDF Link :-

S.NO TOPIC
1 மாநில கல்விக் கொள்கை CLICK HERE



    பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு வேண்டுகோள்

நேற்று 30/9/22 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற .மே.கு. கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் கற்றல் கற்பித்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை 2/10/22 நடைபெறும் சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் சமர்பித்துஅதனை கூட்டத்தில் ஆலோசித்து அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் நகலைப்பெற்று பள்ளியில் .மே.கு. கோப்பில் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 *பள்ளியில் இடை நின்ற மாணவர்கள்* பள்ளியில் சேராத மாணவர்கள் வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சவால்கள் பள்ளிக்கும் சமூகத்துக்குமான தொடர்பு சார்ந்து கூட்டங்களில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

பள்ளியில் இடை நின்ற மாணவர்களை அவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொணடு பள்ளியில் உடனடியாக சேர வேண்டுமென இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்

 

கிராம சபை கூட்டத்தில் மாநில கல்விக் கொள்கை தொடர்பான பொதுமக்கள் பார்வை மற்றும் அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அதன் நகலை பெற்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க கேட்டுக்கொ ள்கிறோம், மேலும் மாநில திட்ட அலுவலகம் மூலம் வழங்கபட்ட Google form ல் பதிவு செய்திடவும்,

கிராம சபை நடைபெறும் பஞ்சாயத்துகளுடன் தொடர்புடைய அனைத்து தலைமையாசிரியர்களும் தவறாமல் கிராம சபைக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

இப்படிக்கு

மு. . . சேலம்.

Post a Comment

0 Comments