உலகை குலுக்கிய பத்து நாட்கள் ஆசிரியர்:ஜான் ரீடு

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:69

தேதி:03-10-2022

புத்தகம் எண்ணிக்கை:69

புத்தகத்தலைப்பு: உலகை குலுக்கிய பத்து நாட்கள்

ஆசிரியர்:ஜான் ரீடு

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்பது சோசலிசவாதியும், அமெரிக்கப் பத்திரிகையாளருமான ஜான் ரீடு என்பவர் எழுதிய டென் டேய்ஸ் தட் சூக் வேர்ல்ட்  என்னும் புகழ் பெற்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு ஆகும்.

 

 ** உருசியாவில் 1917 அக்டோபரில் இடம்பெற்ற சோசலிசப் புரட்சியின் இறுதிப் பத்து நாட்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன

 

**ரீட் பல போல்செவிக் தலைவர்களோடு நெருக்கமாகத் தொடர்பில் இருந்தவர். இந்நூலில் உள்ள பெரும்பாலான வி சயங்கள் ரீடின் நேரடி அனுபவங்களின் வாயிலாகப் பெறப்பட்டவை.

 

** இந்நூலை எழுதிமுடித்த சிலநாட்களிலேயே ரீடு விசக் காய்ச்சலினால் இறந்துவிட்டார்

 

**போல்ஷ்விக் கட்சியின் மத்திய கமிட்டியின் வழிகாட்டுதலின் கீழ், மாமேதை லெனினின் போர்த்தந்திரத்தின் வழி நடத்தி முடிக்கப்பெற்ற உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசமைந்த மாபெரும் ரஷ்யப் புரட்சியின் நிகழ்வுகளை நேரில் கண்டெழுதிய நூல்தான் உலகை குலுக்கிய பத்து நாட்கள்.

 

**அமெரிக்க சோஷலிச எழுத்தாளர் ஜான் ரீட் எழுதிய இந்த வரலாற்று பொக்கிஷ ஆவணமானது, 1917 இல் ரஷ்யாவில், முதலாளித்துவ வர்க்க ஆட்சியை உழைக்கும் வர்க்கம் தகர்ப்பதையும் புதிய மக்கள் ஆட்சியை கட்டியெழுப்பியது குறித்தும் ஆழ்ந்த ஆய்வுணர்வோடு எழுதப்பட்டு 1919 இல் வெளிவந்தது.

 

**ஒருபுறம் முதலாளித்துவ அரசுசிடம் சோரம் போன, மக்கள் எழுச்சியில் நம்பிக்கையற்ற பிறக் கட்சிகள், மறுப்பக்கம் அரச சதிகாரர்கள், ஜெர்மன் ஏகாதிபத்திய போர் முனைத் தாக்குதல்கள், இதற்கிடையில் கட்சிக்குள் புரட்சி எழுச்சி கட்டத்தையும், பாட்டாளி வர்க்க அரச கட்டமைப்பையும் புரிந்து கொள்ளாத மத்திய கமிட்டியின் தோல்வி மனப்பாங்குகள் என பலதடைகளை கடந்துதான் இந்த புரட்சி வெற்றி பெற்றது.   

**மூன்று நாட்கள் கூட நீடிக்காது என ஆருடம் சொல்லப்பட்ட மாபெரும் மக்கள் திரள் புரட்சியான நவம்பர் புரட்சி பல தசாப்தம் நீடித்து நிலைத்தது. இந்த மாபெரும் நவம்பர் புரட்சி வெற்றி பெற்றதன் அடிப்படைகள் முறையே மாபெரும் மக்கள் திரள் எழுச்சி,மக்களின் ஜீவ சக்திமிக்க புரட்சிகர உணர்வுகள் இந்த மக்கள் எழுச்சிக்கு சரியான தலைமை வகித்து வழி நடத்திய போல்ஷ்விக்குகளின் போர்த்தந்திரம்

குறிப்பாக லெனினின் மகத்தான மேதமை மிக்க ஒருங்கிணைந்த செயல்பாடுகள்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments