என் கதை ஆசிரியர்:நாமக்கல் கவிஞர்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:68

தேதி:02-10-2022

புத்தகம் எண்ணிக்கை:68

புத்தகத்தலைப்பு: என் கதை

ஆசிரியர்:நாமக்கல் கவிஞர்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின்என் கதையும் ஒன்று. இராஜாஜி, .வெ.ரா. பாரதியார், திரு.வி. போன்ற சான்றோர் பலரின் நட்பைப் பெற்றிருந்த கவிஞர் அரசவைக் கவிஞராகவும், சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

            

**தந்தை வெங்கட்ராமப் பிள்ளை, தாய் அம்மணி அம்மாள் ஆகிய இருவருக்கும் 19.10.1888 இல், நாமக்கல்லில் பிறந்தார்

 

**நாமக்கல் கவிஞர் பிறப்பதற்கு முன்னரே அவருடைய தாயார் பலராலும் புகழப்பட்டார். பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என்று பலர் வாழ்த்தினர். ‘சிறந்த அறிவாளியாகவும் நிறைந்த ஆயுள் உடையவராகவும் விரிந்த புகழுடையவராகவும் உம் மகன் விளங்குவான்என்று அந்தணர் ஒருவர் பாராட்டியது அனைத்தும் கவிஞர் வாழ்வில் உண்மையாயிற்று.

 

**நாமக்கல் கவிஞர் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்மாழ்வார் என்ற ஆசிரியர் ஒரு கணக்குக் கொடுத்திருந்தார். எல்லா மாணவர்களும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இராமலிங்கம் மட்டும் அன்றைய நாடக விளம்பரத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த கமலஇந்திரசபா நாடகப் படத்தைப் பார்த்து, பார்த்துத் தம் பலகையில் எழுதிக் கொண்டிருந்தார். ஆசிரியர் கணக்கைக் காட்டச் சொன்னார். இராமலிங்கம் ஓவியத்தைக் காட்ட பளீர் என அடி விழுந்தது. உயர்நிலைப் பள்ளியிலும் இது தொடர்ந்தது.

 

**இனி, கவிஞரின் படைப்புகள்

 

கவிதை

 

1)தேசபக்திப் பாடல்கள், 1938.

2)பிரார்த்தனை, 1938.

3)தமிழன் இதயம், 1942.

4)காந்தி அஞ்சலி, 1951.

5)சங்கொலி, 1953.

6)கவிதாஞ்சலி, 1953.

7)மலர்ந்த பூக்கள், 1953.

8)தமிழ்மணம், 1953.

9)தமிழ்த்தேன், 1953.

10)நாமக்கல் கவிஞர் பாடல்கள், 1960.

11)அவனும் அவளும்

 

**உரைநடைக் கட்டுரைகள்

 

1)தமிழ்மொழியும் தமிழரசும், 1956.

2)இசைத்தமிழ், 1965.

3)கவிஞன் குரல், 1953.

4)ஆரியராவது திராவிடராவது, 1947.

5)பார்ப்பனச் சூழ்ச்சியா, 1948.

6)திருக்குறள்உரை

7)கம்பன் கவிதை இன்பக் குவியல்

 

**புதினம்

 

1) மலைக்கள்ளன், 1942.

2)தாமரைக்கண்ணி, 1966.

3)கற்பகவல்லி. 1962.

4)மரகதவல்லி, 1962.

5)காதல் திருமணம், 1962.

6)மாமன் மகள்

 

**”கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது

சத்தி யத்தின் நித்தி யத்தை

நம்பும் யாரும் சேருவீர்

மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தனது அற்புதத் தமிழால் இவ்வாறு விளக்கி எண்ணற்ற இளைஞர்களை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வைத்தவர் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை .

 

**“தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா

என்பது அவரின் புகழ் பெற்றதமிழன்என்ற பாடலில் வரும் பல்லவியே. பல அருமையான எளிமையான தமிழ்க் கவிகளைப் புனைந்து தமிழுக்குத் தொண்டாற்றியதோடு மட்டுமல்லாமல் மக்களை எழுச்சியுறச் செய்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட வைத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர் நாமக்கல் கவிஞர்.

 

**முதலில் பாலகங்காதர திலகர் போன்றோரின் தீவிரவாதக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், நாமக்கல் கவிஞர் நாளடைவில் ஒரு காந்தியவாதியாக மாறினார். மகாத்மாவின் மிதவாதக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு வளர்த்துக் கொண்ட அவர் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

** மகாகவி பாரதியாரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றார். அவரிடம் தானியற்றிய பாடல் ஒன்றைப் பாடிக் காட்டி பாராட்டும், “புலவன்என்ற பெயரையும் பெற்றாராம் நாமக்கல் கவிஞர்.

 

**சீரிய விடுதலைப் போராட்ட வீரர் என்பதுடன் சந்தம் சற்றும் தப்பாமல், எளிமையான மொழியில் அமிழ்தினும் இனிமையான தமிழ்க் கவிதைகளைத் தந்தவர் என்பதே அவரைப் பற்றிய குறிப்பைதமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடாபகுதியில் எழுதுவதற்கு முழுமுதற் காரணம். கடவுள் என்னும் கருத்துக் குறித்து மிக அதிகமான அளவு அற்புதக் கவிதைகள் புனைந்துள்ளார் கவிஞர்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments