பி.வி.சி பாட்டில்களிலிருந்து 100 பயன்பாடுகள் ஆசிரியர்:ஆத்மா கே.ரவி

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:71

தேதி:05-10-2022

புத்தகம் எண்ணிக்கை:71

புத்தகத்தலைப்பு: பி.வி.சி பாட்டில்களிலிருந்து 100 பயன்பாடுகள்

ஆசிரியர்:ஆத்மா கே.ரவி

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**படைப்பாற்றல் அல்லது ஆக்கதிறன் என்பது புதிய கருத்துக்கள் அல்லது புதிய வித்தியாசமான பொருட்களை ஆக்கக் கூடிய சிந்தனையையும் அதைச் செயற்படுத்த வல்ல ஆற்றலையும் குறிக்கிறது.

 

** படைப்பாற்றலை உருவாக்குவதில் கல்விக்கும் ஒரு முக்கியப் பங்குண்டு.

 

**படைப்பாற்றலை உருவாக்குவதில் அனுபவ அறிவுக்கும் பெரும்பங்குண்டு.

 

* *படைப்பாற்றல் பற்றி பலதுறைகளில் பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் ஒரு தெளிவான அறிவியல் வரையறை இன்னும் வரையறுக்கப்படவில்லை

 

**பொதுவாகப் படைப்பாற்றல் கலைகளுடனும் இலக்கியத்துடனும் இணைத்துப் பார்க்கப்பட்டாலும் பொறியியல், அறிவியல், கட்டிடக்கலை, நகைச்சுவை, வணிகம் என பல துறைகளிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

 

** படைப்பாற்றல் சிலருக்கு இயல்பாக அமைந்தாலும், பெரும்பான்மையானோர் இதைப் படிப்பறிவாலும் பட்டறிவாலும் பெறுகின்றனர்

 

** நாம் தூக்கி எறியும் பி.வி.சி பாட்டில்களையும் பயன்படுத்தி 100 பயனுள்ள பொருட்களை தயாரிப்பது எப்படி என்று படத்துடன் செய்முறை விளக்கம் தந்துள்ளார் ஆசிரியர்

 

** பள்ளி மாணவர்களுக்கு ஒய்வு நேரத்தில் செய்து காட்டலாம் அவர்களையும் செய்யச்சொல்லலாம்

 

** நாமும் நம்முடைய இல்லத்தில் தண்ணீர், குளிர்பான பாட்டில்களை பயன்படுத்தி பயனுள்ள பொருட்களை செய்யலாம்

 

** நம்முடைய குழந்தைகளை மிகவும் சுறுசுறுப்பாக இந்த பொருட்களை செய்ய வைக்கலாம்.

 

** நம் குழந்தைகளின் செய்முறை அறிவை வளர்க்கலாம்

 

** விமரிசனத்தை காட்டிலும் இந்தப்புத்தகத்தை படங்களுடன் பார்த்தால் போதும் நிறைய கற்றுக்கொள்ளலாம்

 

** படைப்பாற்றல் கலையை வளர்க்க பயனுள்ள பயிற்சி நூல்

 

 

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments