பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டல் கால அட்டவணை ஒதுக்கீடு

 




தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்

            பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டல் கால அட்டவணை ஒதுக்கீடு செய்தல் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகளில் குறிப்பிட்ட உள்ளவாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் குறித்து ஒவ்வொரு பள்ளியிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதன்மை கருத்தாளர்கள் மற்றும் நான்முகன் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அவர்களுக்கு தரப்பட்டுள்ள பயிற்சி கேட்ப மாணவர்களுக்கு தேவையான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தகவல்களை வழங்கவும்.


 


மேலும் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

 1. கீழுள்ள உத்தேச அட்டவணைப்படி 11 , 12 ஆம் வகுப்புகளுக்கு பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.


 2. உயர்கல்வி வேலைவாய்ப்பு சிறப்பு வகுப்புகளுக்கான புத்தகங்கள் மாணவர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன இந்நிலையில் வரும் செப்டம்பர் 7 2021 முதல் வகுப்புகள் ஒதுக்கீடு செய்து தினசரி பள்ளி கால அட்டவணையில் இணைத்து ஆசிரியர்களுக்கு கீழ் காணும் மாறு வழங்க வேண்டும்.

 

 3. இணைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகத்தின் பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

 

 4. உயர்கல்விற்கான வழிகாட்டுதல்களை வழங்க இணையவளியே துறை சார் வல்லுநர்கள் வழங்க இருக்கின்றனர் அந்த ஆலோசனையை நிகழ்ச்சிகளை வழங்கப்பட்டுள்ள பாட வேலைகளில் மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும்.

 

5.  உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்புகள் பள்ளியின் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் {HI - TECH LAB } அல்லது திறன் வகுப்பறை (Smart class ) அல்லது ஒளிப்பட வீழ்த்தி (Projector) அரை ஏதேனும் இருப்பின் அங்கு நடத்தப்பட வேண்டும்


           இதற்கான முழு விவரங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள Table லில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


 பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும்   மாணவர்களுக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டல் கால 

அட்டவணை   ஒதுக்கீடு PDF LINK GIVEN BELOW :-


S.NO TOPIC FILE TYPE [PDF]
1 11TH & 12TH std students உயர்கல்வி வேலைவாய்ப்பு DOWNLOAD HERE

Post a Comment

0 Comments