என் சிவப்புப் பால்பயிண்ட் பேனா ஆசிரியர்: பேராசிரியர் ச.மாடசாமி

 



*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்

நாள்: 44

தேதி:08-09-2022

புத்தகம்:44

புத்தகத்தின்

தலைப்பு: என் சிவப்புப் பால்பயிண்ட் பேனா

ஆசிரியர்: பேராசிரியர் .மாடசாமி


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.           



 

**பேராசிரியர் மாடசாமி ஐயா அவர்களின் கற்றல் கற்பித்தல் அனுபவங்களை எட்டுகட்டுரைகளாக வடிவமைத்துள்ளார்.

 

**கண்டீப்பாக இந்தப் புத்தகத்தை ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டிய நடைமுறைப்படுத்த வேண்டிய புத்தகம்

 

**சிறுசிறு அவமதிப்புகளும் மாணவர்களுக்கு மிகுந்த மன வேதனைகளை தரக்கூடியது.

 

**சிறுசிறு பாராட்டுகளும்

மாணவர்களிடையே மிகப்பெரிய நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும்.

 

**புதிதாக ஒன்றை அறிந்து கொள்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் தேவையானது எது ? திறந்த மனமும் புதிய முகமும்தானே முதல் தேவை.

 

**கல்விப்பரிசோதனை என்பது இப்போது        புதிய அறிவியல் கருவிகளை வகுப்பறைக்குக் கொண்டு வருவது என்றாகி விட்டது. வரவேற்போம்ஆனால் ஆசிரியரின் கற்பனையும் மாணவரின் ஈடுபாடும் கைகோர்க்கும் போது உண்டாகும் அர்த்தத்தையும் ஆனந்தத்தையும்       கருவிகளால் தரவியலாது.

 

**மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் போது விடைத்தாள்களை கரும்பலகையாக மாற்றி தேடித்தேடி நல்லவைகளை அருமை, பிரமாதம், நுட்பானகருத்து, இனியகற்பனை, தெளிந்தநடை என ஆசிரியரின் சிவப்பு மை பாராட்டினால் மாணவர்கள் விடைத்தாள்களை பெற பசியோடு ஆர்வத்தோடு காத்திருப்பார்கள்.

 

** மாணவர்களிடம் ஆசிரியர் என்ற நிலையில் இருந்து இறங்கி அவர்களின் உணவர்களை புரிந்து கொள்ளும் தோழன் நிலைக்கு வரும் போது எதுவுமே சாத்தியம்.

 

**இந்த புத்தகத்தை படிக்கும் போது என் கணிதத்துறையின் பேராசிரியர்கள் மாடசாமி ஐயா வடிவில் நினைவுக்கு வருகிறார்.

 

**எப்போதும் மெல்லிய புன்னகையோடு கற்பிக்கும் கதம்பவாணர் ஐயா,மிகவும் நுட்பமாக ஆழ்ந்து கற்பிக்கும் HOD ஐயா.வரிசையாக கற்பிக்கும் K.P.K ஐயா,கடிமானவற்றையும் மிக மெல்லிய புன்னகையோடு மிக எளிதாக கோபமே படாமல் கற்பிக்கும் E.M.P ஐயா, எப்போதும் சுறுசுறுப்பாக வே கற்பிக்கும் K.R ஐயா,மிக எளிமையாக தோழமையோடு கற்பிக்கும் P.M ஐயா,கண்டீப்போடு கவனம் எங்கும் சிதறவிடாமல் கற்பிக்கும் K.G.S ஐயா, அலட்டிக்கொள்ளமால் எதையுமே பார்க்காமல் கற்பிக்கும் A.M ஐயா,புன்னகையோடு மகிழ்ச்சியாகவே கற்பிக்கும் கோகுலசந்தான கிருஷ்ணர் ஐயா ,பாச உணர்வோடு கற்பிக்கும் P.C.K அக்கா கௌரி அக்கா போன்றவர்களின் வகுப்பறை நினைவுகள் வருகிறது.

 

** என் கல்லூரி ,பள்ளி ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டவைகள்  ஒவ்வொரு படிநிலையிலம் என்னை செதுக்குகிறது.

 

** ஆசிரியர்களின் சிவப்பு பால்பயிண்ட் பேனா பல மாணவர்களின் தேர்வுத்தாள்களை விட வாழ்க்கைகளை திருத்துகிறது என்பதற்கு இந்த நால் நல்ல உதாரணம்.

 

**இந்த புத்தகத்தினை படிக்கும் போது ஒவ்வொருவரும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களின்  அருமையும் பணியையும் தொண்டினையும் உணர்ந்துகொள்ளலாம்

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து    தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🌏🌏 Join Us Social Media:-

Bootstrap demo




Post a Comment

0 Comments