தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம் - குழந்தைகளின் உலகம் உள்ளே வெளியே

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:61

தேதி:25-09-2022

புத்தகம் எண்ணிக்கை:61

 புத்தகத்தலைப்பு: குழந்தைகளின் உலகம் உள்ளே வெளியே

ஆசிரியர்:மு.முருகேசு

 

** குழந்தைகளின் அறியப்படாத உலகம் பற்றி பேசப்படுகிறது. விவாதிக்கப்படுகிறது.

 

** குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறோம்

குழந்தைகளை கொண்டாடுகிறோமா? என்ற கேள்வியே பல சிந்தனைகளை தூண்டுகிறது

 

** உங்கள் குழந்தைகள் உங்களுக்கு மட்டும் உரியவர் அல்ல உங்கள் வழியாக இப்பூமிக்கு வந்தவர்கள் அவ்வளவே என்ற முன்னுரையின் முதல் வரியே வாசிப்பு ஆர்வத்தை தூண்டுகிறது

 

** குழந்தைகள் தினம் பற்றிய புரிதலிலிருந்து பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு, பாடச்சுமைக் குறைப்பு, பள்ளியில் ஆசிரியர் கற்க வேண்டியது, குழந்தைகள் விளையாட்டு, வாசிப்பின் அரசியல், கல்விமுறை மீதான விமர்சனம், சொந்த ஊரைத் தெரிந்து கொள்ளுதல், குழந்தைகளின் உரிமைகள், இயற்கையும் குழந்தையும், கோடை விடுமுறைக் கொண்டாட்டம், கனவுப்பள்ளி,என்று ஏராளமான சிந்தனைச் சிதறல்களை அழகாக எழுதியிருக்கிறார்

 

 ** குழந்தைகளைப்பற்றி, பள்ளிக்கூடம் பற்றி, கல்விமுறை பற்றி, எழுதியுள்ள மரியா மாண்டிசோரி, ஜான் ஹோல்ட், பாவ்லோ பிரேயர், டோட்டோ சான், போன்ற பல சிந்தனையாளர்களின் சிந்தனைத் துளிகளை ஒரே புத்தகத்தில் வாசிக்கக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு.

 

** மிக அழகான நம்மை ஈர்க்கும் எளிய நடை

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 🌏🌏 Join Us Social Media:

Bootstrap demo




Post a Comment

0 Comments