*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்* - உலகை உலுக்கிய வாசகங்கள்

 




*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:62

தேதி:26-09-2022

புத்தகம் எண்ணிக்கை:62

தலைப்பு: உலகை உலுக்கிய வாசகங்கள்

ஆசிரியர்:வெ.இறையன்பு

 

**பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியரை சந்தித்து தன்னம்பிக்கை விதை விதைத்து வரும் சிறந்த பேச்சாளர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர், பன்முக ஆற்றலாளர், முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ. இறையன்பு ... அவர்கள், தினத்தந்தி நாளிதழில், ஞாயிறு தோறும் எழுதி வந்த, ‘உலகை உலுக்கிய வாசகங்கள்தொடர் தந்தி பதிப்பின் மூலம் அழகிய நூலாக வந்துள்ளது.

 

** நேர்த்தியான அச்சு, அழகிய வடிவமைப்பு, பொருத்தமான ஓவியங்கள் என படிக்க சுவை கூட்டுவதாக உள்ளது

 

**102 வாசகங்களை தலைப்பிட்டு கட்டுரை எழுதியுள்ளார்

 

** இப்புத்தகம் உலகை உலுக்கிய வாசகங்களை உள்ளடக்கியது அல்ல.நம் மனதையும் உலுக்கிய வாசகங்களும் தான்

 

** ஒவ்வொரு வாசகத்திற்கும் உகந்த நிகழ்வுகளை அழகாய் கட்டுரைப்படுத்தியுள்ளார்

 

** ஒவ்வொரு கட்டுரைக்கும் பல நூல்களை ஆராய்ந்து வாசித்து எழுதியுள்ளார்.

 

**புத்தகத்தில் படித்ததில் மனதைக்கவர்ந்த வாசகங்கள்

 

** மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அப்படி நாம் அவர்களை நடத்த வேண்டும்

 

** ஆழமாக வாசிப்பது அறிவை அகலமாக்கும்

 

** மக்கள் நலனே மன்னன் நலன்

 

** யாதும் ஊரே யாவருங்கேளிர்

 

** நீ மண்ணாக இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்

 

** மகத்தான அறிவு பெருந்தன்மையுடன் திகழ்கிறது,மலிவான அறிவு திருப்தியடைந்து விடுகிறது

 

** கல்வி அடக்கத்தை கொடுக்கிறது

 

** நிலையாமை ஒன்று தான் நிலையானது

 

** உண்மை என்பது பாதையற்ற பிரதேசம்

 

** பாலுணர்வு என்பது கண்டித்து அடக்க வேண்டியதல்ல புரிந்து கடக்க வேண்டியது

 

** எனக்கு ஒரு கனவு இருக்கிறது

 

** புதியதோர் உலகம் செய்வோம்

 

**எழுமின்,விழுமின்,கருதிய கருமம் கைக்கூடும் வரை அயராது உழைமின் 

 

** கற்பதை மறந்துபோகும்போது எஞ்சி இருப்பதே கல்வி

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 


 🌏🌏 Join Us Social Media:

Bootstrap demo




Post a Comment

0 Comments