*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்* - உன்னோடு ஒரு நிமிசம்

 




*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:63

தேதி:27-09-2022

புத்தகம் எண்ணிக்கை:63

புத்தகத்தலைப்பு: உன்னோடு ஒரு நிமிசம்

ஆசிரியர்:வெ.இறையன்பு


**இந்நூல், சிறுவர்களுக்குகானது மட்டுமல்ல பெரியவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய கருத்துக்கள் உள்ளடக்கிய அறிவுப்பெட்டகம் .


**57 கட்டுரைகள் உள்ளடக்கியது. ஒவ்வொரு கட்டுரையும் நம் மனதைத் தொடக்கூடியவை.


** கட்டுரைகளின் மையங்கள்


*ஆங்கிலத்தின் முக்கியத்துவம்


*சோர்வுக்கான காரணிகள்


*பேசிப்பழகுவது 


*எப்படிதேர்வு பயம் போக்குவது


*சின்ன சின்ன பயணங்கள் அது தரும் அனுபவங்கள்


*நற்செயலும் மகிழ்ச்சியும்


*கலைகள் கற்போம்


 *சரித்திரம் அறிவோம்


*பேசுவது மட்டுமல்ல, கேட்பதும் ஒரு கலைதான்


*தோல்வியின் அனுபவம்


*நட்பின் மேன்மை


 *துணிவின் தூய்மை


*முடிவெடுக்கும் திறன்


*நேர மேலாண்மை


*கையெழுத்தின் முக்கியத்துவம்


*தாய்மொழியின் மேன்மை


*நகைச்சுவயும் உற்சாகமும்


**ஆங்கிலமொழியை நுனி நாக்கில் பேசுவதாலேயே நமக்கு அந்த மொழி அத்துபடி என்று சொல்லிவிடமுடியாது. ஆங்கிலம் என்ற மூக்குக்கண்ணாடி நமக்கு அவசியமாகிறது. அது மூக்குக்கண்ணாடிதான்... கண்களல்ல என்பது புரிகிறபோது நம் கற்கும் திறன் மேலும் அதிகமாகிறது,தாய்மொழியின் மேன்மை புரிகிறது.


** உள்ளத்தின் மொழி தமிழ்...!

உதடுகளின் மொழி ஆங்கிலம்...!


**கல்வி அறிவுக்காக மட்டுமல்ல; வாழ்வுக்காக என்று சொன்ன முதல் நூல் திருக்குறள்.


** முன்னேற்றம் எப்போதும் நேர்வழியில் நிகழவேண்டுமென முதலில் முன்மொழிந்தது திருக்குறள்.


**தேர்வு நெருங்கிவிட்டது என்கிற போது பதற்றம் வரும்கிறது பயம் வந்துவிடுகிறது. நடுக்கம் வருகிறபோதே நினைவு தடுமாறிவிடுகிறது.தேர்வை உள்ளப்பூர்வமாக சந்திப்போம். உள்வாங்கிக் கொண்டு படிப்போம். உறுதியாக வெற்றிபெறுவோம்.


**உலகைத் தெரிந்து கொள்ளாமல் புத்தக அறிவை மட்டும் போதாது அனுபவ அறிவும் வேண்டும். 


** கருணையில்லாத அறிவும், அன்பில்லாத செறிவும் அனுபவமில்லாத பரிவும் பயனற்றவை என்பதால் வாரம் ஒருமுறை பள்ளியைத் தாண்டி பயணிக்க வேண்டும். பல நிகழ்வுகளையும் கவனிக்க வேண்டும்.

இயற்கையை வாசிக்கவும், கிராமங்களை நேசிக்கவும், மனிதர்களை சந்திக்கவும் இந்த விடுமறையை நாம் பயன்படுத்திக் கொள்வோம். நடந்தவற்றை நினைப்பதும் அவற்றை ஆவணபடுத்துவதும் நம்மை நாமே திரும்பிப் பார்க்க உதவிடும் காலக்கண்ணாடிகள்.


**நாம் பிறருக்கு செய்யும் நற்செயல் அது நமக்கே திரும்ப வந்து சேருகிறது. நாம் செல்கிற இடங்களைக் கண்களால் ரசிப்போம். அவற்றைச் சேதப்படுத்தாமல் பாதுகாப்போம். நம் நாட்டின் பெருமைகளைத் தொடர்ந்து பேணிக் காப்போம்.


**எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும்; எவ்வளவு நேரத்தில் அதை செய்து முடிக்க வேண்டும் என்கிற சூட்சமம்தான் நேர மேலாண்மை!.


**நொடிகளை வீணடிப்பவர்கள் நொடிந்து போவார்கள் அவற்றை பயன்படுத்துபவர்கள் செல்வந்தர்களாக ஆவார்கள்.

நம் பெற்றோர்கள் அவர்கள் வருமானத்துக்கு ஏற்ப சிறந்த வசதியை நமக்காக செய்து கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் சிந்தும் கண்ணீரும், வியர்வையும், ரத்தமுமே நம் கைகளில் பாடப் புத்தகங்களாக திகழ்கின்றன என்ற அடிப்படை உணர்வு இருந்தால் நாம் அடுத்தவர்களை பார்த்து ஏங்கவேண்டியது இல்லை.

 

** மனதைக் கவர்ந்த வரிகள்


**யார் ஒவ்வொரு நாளையும் அதற்கு முந்தைய நாளிலிருந்து வேறுபடுத்தி வாழ்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள்


**நடந்தவற்றை நினைப்பதும் அவற்றை ஆவணப்படுத்துவதும் நம்மை நாமே திரும்பிப் பார்க்க உதவிடும் காலக் கண்ணாடிகள்


**பொறுமை வளர, வெறுப்பு குறையும்

பெருந்தன்மை உயர, பொறாமை குறையும்

மகிழ்ச்சி பெருக, வருத்தம் குறையும்

நல்லவைக் கற்போம், அல்லவை மறப்போம்


** பதற்றப்பாடாமல் இருப்பது வேறு, அலட்சியத்துடன் இருப்பது வேறு


** கல்வியின் குறிக்கோளே மதிப்பெண்களுக்காக என்பது போன்ற மாயத்தோற்றத்தை மாணவர்களிடம் நாம் உருவாக்கி இருக்கிறோம்


**இந்நூலாசிரியரின் பெயர் வெ. இறையன்பு. இவர் 1998-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தார்.நாகப்பட்டினம் சார் ஆட்சியர், கடலூர் கூடுதல் ஆட்சியர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் போன்ற பனிகளை வகித்தவர்.இதுவரை 30 நூல்களை எழுதியிருக்கிறார். சிறந்த பேச்சாளரான இவர், தொலைகாட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு இருக்கிறார்.


*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301


 🌏🌏 Join Us Social Media:

Bootstrap demo




Post a Comment

0 Comments