STD - 10 TAMIL LESSON PLAN AUGUST 2nd week 2022-23



                     2022 – 2023 ஆம் கல்வியாண்டில்  10  ஆம்  வகுப்பிற்கு தமிழ் பாடத்திற்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு  August மாதம்  2 வாரத்திற்கான Lesson plan   நமது www.kanimaths.com இல் subject wise தொகுக்கப்பட்டு pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

             மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான 

          

   இணைந்து கொள்ளலாம்.


வகுப்பு : 10

பாடம்   : தமிழ்

நாள்      : 08.08.2022 - 12..08.2022

தலைப்பு :

v  செயற்கை  நுண்ணறிவு

v  பெருமாள் திருமொழி

துணைக்கருவிகள் :

v  விளக்கப்படம்,

v  மடிக்கணினி

 நோக்கம் :

v  வளர்ந்து வருகின்ற தொழில் நுட்பங்கள் நம் மொழியில் திறம்படச் சொல்லப்படும் பாங்கறிந்து மொழித்திறனையும் தொழில்சார் கருத்துகளையும் புதுப்பித்தல்.

v  அறிவியல் கருத்துகள் பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத்திறனை அறிதல்.

கற்றல் திறன்கள் :

v  குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி மூலம் மருத்துவம் சார்ந்த அறிவியலை அறிதல்.

ஊக்கமூட்டுதல்:

v  செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களைப் பார்த்துள்ளீர்களாஎன மாணவர்களிடம் கேட்டல்.

v  பக்தி இலக்கியமான பெருமாள் திருமொழியில் அறிவியல் கருத்து நிறைந்துள்ள பாடலை அறிதல்.

 பாட அறிமுகம் :

v  தமிழ் மருத்துவம் என்றால் என்ன?” என மாணவர்களிடம் கேட்டல்.

v   செயற்கை நுண்ணறிவுஎன்னும் பாடப்பகுதியை விளக்கிக் கூறுதல்.

தொகுத்தல் :

v   செயற்கை நுண்ணறிவுபாடத்தினை வாசிக்கச் செய்தல். ‘செயற்கை நுண்ணறிவுதொடர்பான காணொலிகளைக் காட்டல். திறன்பேசியில் உள்ள மென்பொருள் தன்மைகளை எடுத்துரைத்தல். விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல். உடலில் ஏற்பட்ட புண்ணை மருத்துவர் வாளால் அறுத்துச் சுட்டாலும் ஆக நன்மைக்கே என்று நோயுற்றவர் உணர்வார். வித்துவக்கோட்டில் உள்ள அன்னையே! எத்தகைய துன்பம் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்எனப் பாடலின் கருத்தை விளக்குதல்,

 

மனவரைபடம் :

 செயற்கை நுண்ணறிவு

 

மனவரைபடம் :

பெருமாள் திருமொழி

 

விளக்குதல் :

 செயற்கை நுண்ணறிவு

v  எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் ஒரேநாளில் வந்து விடுவதில்லை. படிப்படியான வளர்ச்சியே ஆகும்.

v  செயற்கை நுண்ணறிவைக் கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது; கண் அறுவை மருத்துவம் செய்கிறது; சில புள்ளிகளை வைத்துப் படம் வரைகிறது.

v  2016 இல் .பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன், நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

v  ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர். இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ. வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன.

v  இந்தியாவின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ‘இலாஎன்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கி இருக்கின்றது.

விளக்குதல் :

பெருமாள் திருமொழி

v  பக்தி இலக்கியத்தில் பொதிந்துள்ள அறிவியல் கருத்துகளைத் தொகுத்துணரத்தல்.

மதிப்பீடு :

v  செயற்கை நுண்ணறிவின் பயன்களைக் குறிப்பிடுக ?

v  வாட்சன் குறிப்பு வரைக ?

v  உனதருளே பார்ப்பள் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

 கற்றல் விளைவுகள் :

v  வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நம் மொழியில் திறம்பட சொல்லப்படும் பாங்கறிந்து மொழியைக் கையாளுதல், தொழில்சார் கருத்துக்களைப் புதுப்பித்தல்

v  அறிவியல் கருத்துக்கள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத் திறனைப் படித்துணர்ந்து, எதிர்வினையாற்றுதல்

தொடர்பணி :

v  இன்றைய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைச் செய்தித்தாளிலோ இணையத்திலோ கண்டு அட்டவணையாகத் தருக.

v  தமிழர் மருத்துவமுறைக்கும் நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொப்பு குறித்து ஒப்படைவு உருவாக்குக.





2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


               கீழே கொடுக்கப்பட்டுள்ள  click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி ஒன்றாம் வகுப்பு முதல்   ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் குறிப்பேடு pdf மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 


                                                                            CLICK HERE


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here


Join as Facebook Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 10 : Click here                 

Post a Comment

0 Comments