*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - வன்முறையில்லா வகுப்பறை

 




*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:10

தேதி:5-8-2022

புத்தகம் எண்ணிக்கை:10

புத்தகம்: வன்முறையில்லா வகுப்பறை

ஆசிரியர்: ஆயிஷா நடராசன்.


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


  **ஆசிரியருக்கு அடிப்படை குணம் அன்பு இருக்கவேண்டும் .

உடல் ரீதியான துன்புறுத்தல்களும், உள ரீதியான துன்புறுத்தல்  சம்பவங்களும்  நடைபெறாமல் இருக்க ஆசிரியராக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்நூலிலுள்ள 25 கட்டுரைகளின் வழியே விளக்கியிருக்கிறார் கல்வியாளர் ஆயிஷா நடராசன்.

 

**குழந்தைகள் மீது அன்பு, பிரியம், பாசம் கொண்ட மிகப் பெரிய கலகக் காரராக தன் யாருடைய வகுப்பறை?, ஆயிஷா, ரோஸ், வன்முறையில்லா வகுப்பறை போன்ற தன் புத்தகங்களின் வழியே தெரிகிறார்.

 

**வன்முறையில்லா வகுப்பறை என்னும் இந்நூல் ஒவ்வொரு ஆசிரியரின் கையிலும் இருக்க வேண்டும். ஏனெனில் இந்நூல் குழந்தை உளவியலாளரான கரோலின்   டிவிக்கின் மேற்கோளான, “ஒரு மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப்போல ஒரு ஆசிரியராக நீங்கள் எதை எல்லாம் செய்தால் தனக்குப் பிடிக்கும் என கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது.” என்பதிலிருந்துதான் இந்நூலே தொடங்குகிறது.

 

**அவமதிப்பு,ஒப்பீடு,மன உளைச்சல்,போன்றவைகள் இல்லையெனில் குழந்தைகள் பள்ளிச்செல்ல விரும்புவார் என்கிறார் நூல் ஆசிரியர்.

 

** கல்விகற்பிப்பதற்கு ஆதாரமே குழந்தைகள் எனவே குழந்தைகளின் உணவுர்கள் மதிக்கப்படும் போது கற்றல் எளிதாகிறது. கற்பித்தல் இனிதாகிறது.

 

**குழந்தைகளின் சிறு சிறு செயல்பாட்டை பாராட்டும்போது அவர்கள் தவறான செயல்கள் குறையத்தொடங்குகிறது.

 

** தண்டணை,கண்டிப்பு விட்டுவிட்டு பரிசு,பாராட்டல் மூலம் நடத்தை மாற்றம் கொண்டுவரலாம்.

 

    **இன்றைய கல்வியே ஒழுக்கம் மற்றும் தரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு ஒரு மாணவனால் பங்கம் ஏற்படும்போது பள்ளி எடுக்கும் தவறான நடவடிக்கைகளால் எத்தனை அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன. குழந்தை தரப்பு நியாயத்தை கேட்க எவருமில்லை.

 

**எப்போது பள்ளிக்கு விடுமுறை என அறிவித்தால் குழந்தைகள் மனம் வருந்துகிறார்களோ, பள்ளி வேண்டும் என அடம் பிடிக்கிறார்களோ, அப்போதுதான் உண்மையான கல்வி நடக்கிறது என்று அர்த்தம்… “ என்ற ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறியதற்குஉற்சாகமான வகுப்பறையே வன்முறையில்லா வகுப்பறைகள் என்ற கட்டுரை மூலம் வலு சேர்க்கிறார் நூலாசிரியர்.

 

**காலையிலும் மாலையிலும் அதே மணிதான் ஒலிக்கிறது. காலையில் கசக்கும் அது, பள்ளி முடியும்போது மட்டும் ஏன் இனிக்கிறது?” என்கிறார் ஆர்.கே.நாராயணன். இதைமாற்றி காலையில் ஒலிக்கும் மணியையும் இனிப்பானதாக மாற்ற ஒரு ஆசிரியர் தன்னையும் மாணவனாக மாற்றிக்கொள்ளவேண்டும்

 

** ஆசிரியர் கற்பிப்பவராக இல்லாமல் கற்றுக்கொள்பவராக குழந்தைவளின் உள்ளங்களை படிப்பவராக இருந்தால் வன்முறையில்லா வகுப்பறை சாத்தியமே என உணர்ந்து கொண்டேன்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments