*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - குழந்தைமையைக் கொண்டாடுவோம்

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:8

தேதி:3-8-2022

புத்தகம் எண்ணிக்கை:8

புத்தகத்தலைப்பு: குழந்தைமையைக் கொண்டாடுவோம்

ஆசிரியர்முனைவர் என்.மாதவன்


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


** குழந்தைகளின் பல்வேறு  உளவியலைப் பற்றி விளக்கும் பத்துக் கட்டுரைகள் உள்ளன. பத்தும் எளிய மொழியில் மிக இயல்பாக, அனைவரின் மனதை கவரும் வீதம் உள்ளது

 

** குழந்தை வளர்ப்பு ஒரு கலை இதில் ஒருவரின் அனுபவம் அடுத்தவருக்குப் பொருந்தாது அதேபோல் ஒரே விஷயம் ஒரு குழந்தைக்கு ஒருவிதமாகவும்,மற்றோரு குழந்தைக்கு இன்னொரு விதமாகவும் இருப்பதையும்  மாம்பழம் உதாரணம் கொண்டு விளக்குகிறார்

 

**குழந்தைகளுக்கான இலக்குகளை நாம் நிர்ணயிக்கும்போது அவர்களைத் தவிர்க்க இயலாத தோல்வியிலும் ஏமாற்றத்திலும் தள்ளுகிறோம்  

 

** மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்ட தற்போதையக் கல்வியின் அபத்தங்களை விட்டுவிட்டு, மாணவர்கள் மதிப்பெண்ணோடு சேர்த்து பல்வேறு வகையான நண்பர்கள் வழியே பலவிதமான நல்ல அனுபவங்களைப் பெற வேண்டும் என இக்கட்டுரை வலியுறுத்துகிறார் 

 

ஒரு குழந்தை வெற்றியாளனாவதோ, வெறியாளனாவதோ அடிப்படையில் பெற்றோரின் மனநிலையில்தான் உள்ளது. தவறுகளும் தோல்விகளும் கற்றலில் தவிர்க்க இயலாதவை

 

 ** தொடர் முயற்சிகளின் மூலமாகவே நல்வழிப்படுத்த வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகளால் அல்ல என்கிறார் டெரன்ஸ் 

 

** பொறாமை என்பன நமது கண்களிலிருந்து யதார்த்தத்தை மறைக்கின்றன. இதனாலேயே பெற்றோரும், குழந்தைகளும் அடுத்தவர்களுடன் தம்மை ஒப்பிட்டு வேதனை அடைகின்றனர் 

 

 **குழந்தைகளின் கற்பனாசக்தியை வளர்த்தெடுக்க பணத்தைவிட, நாம் அவர்களுடன் செலவிடும் நேரமே மிக முக்கியமானது என்கிறார்.

 

**போட்டி போட்டி…. வேகம் வேகம்…. என குழந்தைகளை விரட்டி விரட்டி நாமும் மூச்சிரைத்து அவர்களையும் மூச்சிரைக்க வைக்கிறோம். பெரியவர்களுக்குத்தான் எதிர்காலம், நல்ல வாழ்க்கை என்பதெல்லாம்குழந்தைகளுக்கு நிகழ்காலம்தான். போட்டி நிறைந்த உலகம் இது. நாம் வேக வேகமாக ஓடவேண்டும் என விரட்டி வெற்றி பெற்றால் கொண்டாடுவதும், தோல்வி அடைந்தால் தண்டிப்பதும் எவ்வளவு மோசமானது என்பதை அழகாக விளக்குகிறார்

 

** குழந்தைகளின் நடத்தையை நம் நடத்தைகளே தீர்மானிக்கின்றன என்பதைஇன்றைய தேவை என்ன? “ என்ற  கட்டுரையில் விளக்குகிறார்.

 

சமூகம் குழந்தைகளையும், இளைஞர்களையும் நடத்துவதில் தேவையான கூடுதல் புரிதல்களை அடைய வேண்டும்முடிவுரையாச் சொல்லி இந்த மனித சமூகத்தின் மீதான தமது அன்பை நேசத்தை வெளிப்படுத்துகிறார்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here   

Post a Comment

0 Comments