*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - பகல் கனவு

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:7

தேதி:2-8-2022

புத்தகம் எண்ணிக்கை:7

  புத்தகத்தின் தலைப்பு: பகல் கனவு

ஆசிரியர்:ஜிஜிபாய் பதேக்கா

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


**பகல் கனவு என்னும் புத்தகம். ‘திவசப்னாஎன்ற பெயரில் 1931ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்டது.

 

**குஜராத்தைச் சேர்ந்த ஜிஜூபாய் பதேக்கா(1855 – 1939) என்பவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,கல்வியாளர், ஆசிரியர். இவருடைய மகனை வளர்ப்பதற்காக இத்தாலியக் கல்வியாளரான மாண்டிசோரியின் கல்விமுறையை ஆழமாக ஆய்வு செய்தார்.

 

** 1916ஆம் ஆண்டு குஜராத்தின் பவநகரில் இருந்த தக்ஷிணாமூர்த்தி பால மந்திரில் கல்விப் பரிசோதனைகளை மேற்கொண்டார்.  

 

** கல்வித்துறை அதிகாரியின் சிறப்பு அனுமதியின் பேரில் இந்தப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மாண்டிசோரி கல்விமுறையின் அடிப்படை அம்சங்களை எடுத்துக் கொண்டு அதை உள்ளூர் அடிப்படையில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டார்.

 

   **இவர் ஆசிரியர் பெயரை லக்ஷ்மிராம் என்று மாற்றியும் கொஞ்சம் கற்பனை கலந்தும் எழுதிய சுய அனுபவப் பதிவுதான் இந்தப் பகல் கனவு புத்தகம். இந்த லக்ஷ்மிராம் ஆசிரியர்

 

** காலம்காலமாக கல்வித்துறையில் பின்பற்றிவரும் மனப்பாடக்கல்வி முறையை மாற்ற விரும்பும் ஒரு புதுமை விரும்பி. இவர் மாணவர்களின் உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர வழக்கமான பாடத்திட்டங்களை விட்டு வெளியேறி புதிய செயல்திட்டங்களுடன் மாணவர்களை அணுகுகிறார். இந்த அணுகுமுறையே பகல் கனவு என்னும் இப்புத்தகமாக விரிகிறது.

 

** பகல் கனவில்நான்கு தலைப்புகளில் நூலாசிரியர் விவரித்துள்ளார்.

 

முதல் தலைப்பு : பரிசோதனை தொடங்குகிறது

**வகுப்பிற்கு சென்றதும் விளையாட்டை ஆரம்பிக்கிறார் சத்தமும் கூச்சலும் ஏற்படுகிறது.

பிறகு கதை மூலம் மாணவர்களை கவருகிறார்.

 

** தன்சுத்தம் முதலில் தொடங்குகிறார் மாணவர்கள் சுத்தமாக இருக்க வழிப்படுத்துகிறார்

 

** வழக்கமான புத்தகத்தை தவிர்த்து வகுப்பறை நூலகம் அமைத்து படிக்கும் பழக்கத்தை கொண்டு வருகிறார். இதிலே இரண்டு மாதங்கள் சென்று விடுகிறது

 

இரண்டாம் தலைப்பு : பரிசோதனையில் வெற்றி

 

** மாணவர்கள் தன் சுத்தம் சிறப்பாக செயல்பாட்டுக்கு வருகிறது.கதைகள் மூலம் வரலாறு கற்பிக்கிறார் கல்வி அதிகாரி பரிசோதித்து விட்டு பாராட்டி உற்சாகப்படுத்துகிறார்.

 

மூன்றாம் பகுதி: பருவத்தின் முடிவில்

 

ஆண்டுவிழாவிற்கு அனைவரும் தயாராகும் போது லட்சுமிராமின் குழந்தைகள் தயாராகவில்லை கல்வி அதிகாரி கேட்டதற்கு ஆண்டு விழா ஏமாற்று வேலை என்கிறார்

 

** நன்றாக படிக்கும் சில மாணவர்களை முன்னிலைப்படுத்துவதாகவும் தன்தரப்பு நியாயங்களை முன்வைக்கிறார் ஆசிரியர் லட்சுமிராம். இந்த விளக்கத்தை கல்வி அதிகாரி ஏற்றுக்கொள்ள மறுக்க, தான் ஒரு எளிய நிகழ்வை தயாரிப்பதாக ஆசிரியர் லட்சுமிராம் வாக்களிக்க அரைமனதுடன் சம்மதிக்கிறார் கல்வி அதிகாரி. ஆண்டு விழா அன்று மற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் அரைமனதுடன் ரசிக்கும் கல்வி ஆணையர், ஆசிரியர் லட்சுமிராமின் நான்காம் வகுப்பு மாணவர்கள் மிக எளிய பொருட்களைக் கொண்டு எலியாக , தையல்காரனாக, அரசனாக மிக இயல்பாக, எதார்த்தமாக  நடித்துக்காட்டிய நாடகங்களைக் கண்டு மனம் மகிழ்வு கொண்டு மாணவர்களையும் ஆசிரியர் லட்சுமிராமையும் மனதார வெகுவாகப் பாராட்டுகிறார். இதனால் கல்வி அதிகாரி மட்டுமல்ல பள்ளியே மகிழ்கிறது. இதுவரை ஆசிரியர் லட்சுமிராமின் பரிசோதனைகளையெல்லாம் வேண்டாத வேலை என்று விலகிச் சென்ற, கேலி செய்த ஆசிரியர்களெல்லாம் இப்போது அவரை உற்று கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். பாராட்டுகிறார்கள்

 

நான்காம் தலைப்புகடைசிக் கூட்டம்

 

  தொடர் முயற்சியின் காரணமாக தான் கொண்ட நோக்கத்தில் வெற்றியை நோக்கி பயணிக்க, அதே பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் லட்சுமி ராமின் முயற்சியைப் பாராட்டுகிறார்கள். பிறகு தனது பயிற்சியில் விடுபட்டுப் போன புவியியல், அறிவியல், கணக்கு போன்றவற்றையும் தனது வழக்கமான சிறப்பான, எளிமையான பயிற்சிகள் மூலம் கற்பித்து மாணவர்களை முழு ஆண்டுத் தேர்வுக்குத் தயார் செய்கிறார். ஆனால் கல்வி அதிகாரியோ உன்வகுப்புக்குத் தேர்வே தேவையில்லை என்கிறார். மனப்பாடக் கல்விமுறையை எதிர்த்து புரிதலுடன் கூடிய மாணவர்களின் வெற்றி மிகச் சிறப்பானது. இதைச் சாத்தியமாக்கிய ஆசிரியர் லட்சுமிராம் போன்றோர் தற்போதும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதே பிரச்சினை.

 

** ஆசிரியர் மட்டும் முழுமையாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டால் எதுவுமே சாத்தியம்*

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here   

Post a Comment

0 Comments