*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - ஜன்னலில் சின்னஞ்சிறுமி

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:26

தேதி :21-08-2022

புத்தகம்:26

புத்தகம்: ஜன்னலில் சின்னஞ்சிறுமி

ஆசிரியர்:டெட்சுகோ குரோயாநாகி


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


**டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி பல இலட்சம் பிரதிகளுக்கு மேல்  விற்பனையான அற்புதமான புத்தகம். குழந்தைகள் மையக்கற்றலை வலியுறுத்தும் புத்தகம்.

 

**டெட்சுகோ குரோயாநாகி ஒரு ஜப்பான் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினி தனது சிறுவயதில் தான் பயின்ற தனக்குப்பிடித்த தன்னை உருவாக்கிய டோமாயி பள்ளியை பற்றியும் தனது தலைமையாசிரியர் கோபாஷியை பற்றியும் இந்நூலில் எழுதியுள்ளார்

 

**முதல் வகுப்பைத் தாண்டுவதற்குள் வழக்கமான  இரண்டு பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் டோட்டோ-சான் என்னும் செல்லப்பெயர் கொண்ட இந்நூலாசிரியரான டெட்சுகோ குரோயாநாகி என்னும் பெண்மணிதான் அடுத்து பயின்ற டோமாயி பள்ளியைப் பற்றிய தன் இளமைக்கால அனுபவங்களை இந்நூலில் விவரித்துள்ளார்

 

**தான் வாழ்க்கையில் வெற்றி பெற எவ்வாறு  டோமாயி பள்ளி தன்னைத் தயார் செய்தது என விளக்கியிருப்பதே இப்புத்தகத்தின்  மையக்கருத்துஆகும்.

 

**டோட்டோ -சான் எப்போதும் துறுதுறுவென இருக்கும் ஒரு மாணவி அவள் வகுப்பில் செய்யும் குறும்புகளுக்காகவும் கேட்கும் கேள்விகளுக்காகவும் வகுப்பறைக்கு வெளியே அதிக நேரம் நிற்கவைக்கப்படுகிறாள் தண்டிக்கப்படுகிறாள் பல பள்ளிகளுக்கு மாற்றப்படுகிறாள்.

 

**இரண்டு  பள்ளிகளுக்கு பிறகு புதிய பள்ளியான டோமாயிக்கு தனது தாயுடன் செல்கிறாள்அங்கு ரயில் பெட்டிகளே வகுப்பறைகளாக இருந்தது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது ஆர்வத்தை தூண்டியது

 

** தலைமையாசிரியர் கோபாயாஷியை சந்தித்த போது அவர் அவள் கூறியதை மதிய இடைவேளை வரை பொறுமையாக கேட்டது.அவளுக்கு வியப்பாகவும் இருந்தது மிகவும் பிடித்தும் இருந்தது.

 

**குழந்தைகளின்

குரலுக்கு செவிகொடுக்கும் போதுதான் அவர்களின்

சிந்தனைகள் வளர்கிறது..!

 

** அம்மா பள்ளிக்கு போகிறேன் என்று மகிழ்ச்சியோடு போகும் குழந்தைகளை விட இன்னைக்கு மட்டும் லீவு போட்டுக்கிறேன்.நான்   போகவில்லை என்று கூறும் குழந்தைகளே அதிகம்.ஆனால்  டோமாயி பள்ளிக்கு குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியோடு வருகிறார்கள்.பள்ளி விட்டபின்பு கவலையோடு செல்கிறார்கள் 

 

*ஜப்பானில் வெறும் ஐம்பது குழந்தைகளோடு இயங்கிய இந்த டோமோயி பள்ளியானது சுதந்திரம்,மகிழ்ச்சி,வாழ்வோடு இணைந்தக் கற்றல் ,இயற்கையோடு கற்றல் என்பதோடு கற்பவர்,கற்பிப்பவர் இணைந்து கற்பது என்பதுதான் அதன் சிறப்பம்சம்.

 

** பழைய இரயில் பெட்டிகள்தான் பள்ளியின் வகுப்பறை என்று படிக்கும் போது ஆச்சர்யமும்  அதிசயமும் நம் கண் முன்னே தெரிகிறது.

 

**டோமோயி பள்ளியை கோபாயாஷி அவர்கள் குழந்தைகளின் கனவு இல்லம் போலவே அமைத்திருந்தார்.அங்கு படிக்கும் குழந்தைகள் தாங்கள் படிக்கும் நேரத்தையும்,பாடத்தையும் தேர்வு செய்தனர்.அவர்களுக்கு அங்கு எப்படி இருக்க விருப்பமாய் இருக்கிறதோ அப்படியே அங்கு இருக்கலாம்.எந்தவித கடுமையான விதிமுறைகளையும் அங்கு அவர்கள் பின்பற்ற வேண்டியதில்லை. குழந்தைகளாகவே குழந்தைகள் வாழ அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

 

**எல்லாவற்றிலுமே அங்கு சுதந்திரம்தான்.எனவே அங்குள்ள குழந்தைகள் பள்ளியின் நடைமுறைகளில் தங்களை முழுவதுமாய் அற்பணித்துக்கொண்டனர்.

 

**ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருந்தன.

 

** மண்ணில் சுதந்திரம்

    விண்ணில் சுதந்திரம்

    மனது தெளிந்தால்

    எதுவுமே சுதந்திரம்..!

 

**பள்ளியில் குழந்தைகளின் மதிய உணவில்கூட கவனம் கொண்டிருந்தது டோமோயி.தங்களது உணவில் குறைவில்லாத சத்துகளை கொண்டிருக்க பெற்றோர்களிடம் கடலிலிருந்து கொஞ்சம், மலைகளிலிருந்து கொஞ்சம் என்று அறிவுறுத்தப்பட்டது.இதில் ஒன்று குறைவாய் குழந்தைகள் உணவை எடுத்து வந்தாலும் பள்ளியே அத்தகைய உணவுகளை வழங்கி சரிசெய்துகொண்டது. உணவில்கூட ஏற்றத்தாழ்வை கோபாயாஷி விரும்பவில்லை.

 

** குழந்தைகளின் கனவு பள்ளியனது ஒரு கொடூரமான குண்டுவெடிப்பு ஒன்றில் 1945 இல் தகர்க்கப்பட்டது. மீண்டும் அதுபோன்ற பள்ளியை தலைமையாசிரியர் கோபாயாஷி துவங்க ஆசைப்பட்டும் அது நிறைவேறாமல்போனது பெரும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்று. மீண்டும் அது போன்ற பள்ளி உருவாகவில்லை.

 

** வீழ்ந்தது ஒரு பள்ளி மட்டுமல்ல பல குழந்தைகளின் மகிழ்ச்சி..!

 

** இடிந்து நொறுங்கியது வகுப்பறை மட்டுமல்ல பல எதிர்காலத்தூண்களின் அடித்தளங்கள்..!

 

** உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் கல்வி ஆர்வலர்கள் குழந்தைகள் நேயர்களால் கல்வியின் முன்னோடியாக கருதப்பட்ட பள்ளி

 

** கண்டிப்பாக ஆசிரியர்கள் குழந்தைகளை விரும்பும்  பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

 

** மதிப்பெண்கள்,போட்டிகள் நிறைந்த  உலகில் குழந்தைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பள்ளி பற்றிய   நூல்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments