தமிழர் உறவு முறைகளும் சமய வழிபாடுகளும் ஆசிரியர்: தொ. பரமசிவன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:176

தேதி:18-01-2023

புத்தகம் எண்ணிக்கை:176

புத்தகத்தின் பெயர் : தமிழர் உறவு முறைகளும் சமய வழிபாடுகளும்

 ஆசிரியர்: தொ. பரமசிவன் 

பக்கங்கள் : 116 

விலை : ரூ 135 

பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*தமிழ் சமூகப்பண்பாட்டு ஆய்வாளர்களின் முக்கியமானவராக பேராசிரியர் பரமசிவன் அவர்கள் கருதப்படுகிறார் 

 

*தமிழர்கள் தம் சமயம் வழிபாடு உறவு முறைகள் குறித்து வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன 

 

*இத்தொகுப்பின் சிறப்பு கூடுதலாக பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் பற்றியும் சிசு. மணி அவர்களை பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன 

 

*இந்த நூலில் தொ.பரமசிவம் அவர்கள் எழுதிய நூல் அறிமுகங்களும் நூல் மதிப்புரைகளும் குறிப்பிடத்தகுந்தவை 

 

*இந்தநூலில் மொத்தம் 27 கட்டுரைகள் உள்ளன.எனக்குப் பிடித்த கட்டுரை " குல தெய்வம் : இது எங்க சாமி" என்பதாகும்.

 

*தமிழர்களின் வீர வழிபாட்டுக்கான அடையாளம் தான் குலதெய்வங்கள் கால்நடைகளை கண்மாய் நீரை பெண்களை விளைந்த பயிர்களை காக்கின்ற சண்டைகளில் உயிர் நீத்த மனிதர்கள் தான் வீர வழிபாட்டில்  குலதெய்வங்களாக ஆனார்கள் 

 

*ஆண் தெய்வங்களை விட பெண் தெய்வங்கள் தான் இன்னும் உக்கிரதோடு இருக்கும்

 

* சில பெண் தெய்வங்களுக்கு பலி தரும் முறை அச்சமூட்டுவதாக அமைந்திருக்கும் 

 

*எளிய மக்கள் எந்த மதத்தையும் சகித்துக் கொண்டிருக்கவில்லை எல்லா மதங்களின் இருப்பையும் வாழ்வையும் தன் இயல்பாக அல்லது இயற்கையாகவே அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் 

 

*தொழுகைக்குரிய சிறப்பு நாளாக வெள்ளிக்கிழமையினை இஸ்லாமியர்களும் ஞாயிற்றுக்கிழமையினை கிறிஸ்தவர்களும் கருதுவது போல பௌத்தர்கள் வெள்ளிக்கிழமையினை புனித நாளாக கருதுவார்கள் வீட்டினை தூய்மை செய்வதற்கும் கோயில் வழிபாட்டுக்கு உகந்த நாளாக பெண்கள் வெள்ளிக்கிழமையே கருதுகிறார்கள் இது பௌத்த நெறியின் எச்சம் ஆகும் 

 

"ஆழ்வார்களில் பெண்ணாகப் பிறந்த ஆண்டாளின் பாடல்கள் அனைத்தும் கண்ணனை நோக்கிய காதல் பாடல்களே 

 

*ஆழ்வார்களில் கடைக்குட்டி ஆழ்வார் மதுரகவியாழ்வார் தன்னுடைய குருவான நம்மாழ்வாரை மட்டுமே பாடினார் நாராயணனை பற்றி பாடவில்லை 

 

*தமிழில் புழங்கும் உறவு முறை சொற்களில் பண்பாட்டு அளவில் குறிப்பிடத் தகுந்தவை பேரன் பேத்தி ஆகிய சொற்களாகும் இவற்றின் சரியான வடிவம் பெயரன், பெயர்த்தி என்பதாகும் 

 

*பெயரன் என்ற சொல்லுக்கு மீண்டும் வந்தவன் என்பதே பொருள் இறந்து போன பாட்டனை மீண்டும் பெயரனாகவும் பாட்டியே பெயர்த்தியாகவும் பிறந்து இருக்கிறார் என்பது நம்பிக்கை 

 

*பண்பாட்டுக் கூறுகள் பெற்றோரிடமிருந்து பெறப்படுவதை விட தாத்தா பாட்டியிடமிருந்து அதிகம் பெறப்படுகின்றன நிகழ் காலத்தில் தாத்தா பாட்டியிடம் இருந்து அந்நியப்பட்டு விட்டதால் குழந்தைகளின் கதை உலகமும் கற்பனையும் திரும்பிப் போய்விட்டன என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்

 

* ஒப்பாரி என்பது தமிழ் சமூகத்தில் குடும்ப அமைப்புக்குள் பெண்கள் பட்ட துயரங்களையும் அவர்களின் கவித்துவ ஆற்றலோடு ஒருசேர புலப்படுத்தும் இலக்கிய வடிவமாகும்.

 

*நமது உறவுமுறைகளின் சிறப்புகளை பற்றியும் நமது சமய வழிபாடுகளையும் பற்றி அறிந்துக்கொள்ள கண்டீப்பாக படிக்க வேண்டிய நூல்கள் ஆகும்.

     

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments