மானுட வாசிப்பு ஆசிரியர் : சண்முகானந்தம்




*தினம் ஒரு புத்தகம்*

நாள்:178

தேதி:20-01-2023

புத்தகம் எண்ணிக்கை:178

புத்தகத்தின் பெயர்:மானுட வாசிப்பு 

ஆசிரியர் : சண்முகானந்தம்

விலை :120 

பக்கங்கள் :118 

பதிப்பகம் :தடாகம் வெளியீடு 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*தமிழகப்பண்பாட்டு ஆய்வாளர்களில் முதன்மையானவர் தொ.பரமசிவன்

 

*நாட்டார் மக்களின் வாய்மொழி வழக்காறுகள் ,சடங்குகள் ,உரையாடல்களிலிருந்து ஆய்வை முன் தொடுத்தவர் தொ.பரமசிவன் 

 

*சிறு தெய்வ வழிபாடுகள் குறித்து இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தது 

 

*சிறு தெய்வங்கள் பற்றி ஆதாரப்பூர்வமான தகவல்கள் பல தந்துள்ளார் 

 

*இந்த நூலில் 18 தலைப்புகளின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் 

 

*எனக்குப்பிடித்த கேள்வி பதில் பகுதி கல்வி மற்றும் அழகர் கோயில் என்ற இரு தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகள் ஆகும் 

 

*ஒரு அற்புதமான ஆளுமையோடு நிகழ்த்துகின்ற நேர்காணல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இருக்கிறது இக்கலந்துரையாடல் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்குரிய பதில்களும் மிக அருமை 

 

*அறிவின் துருத்தல்களற்ற வினாக்களும் அகந்தைகளற்ற விவரிப்பமாக தெளிந்தோடும் ஆறெனச்செல்கிறது பதில் 

 

*எதை எடுக்க வேண்டும் என்பது நேர் கண்டவர்களுக்கும் தெரிந்திருக்கிறது எதை பதிலாக கொடுக்க வேண்டும் என்பது எதிர் கொண்ட தொ.ப அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது 

 

*இந்த நேர்காணல் தொ.பரமசிவன் அவர்களின் மீது கண்டிப்பாக ஒரு தேடலை உருவாக்கி இருக்கும் 

 

*பல்வேறு புத்தகங்களை படிப்பதால் ஏற்படும் அனுபவத்தை படிக்கும்போது இந்நூல் ஏற்படுத்துகிறது 

 

*பண்பாட்டை எப்போது உணர முடியும் பண்பாட்டை மீறும் போது தான் பண்பாட்டை உணர முடியும் என்று நறுக்கு தெரித்தார் போல் பதில்

 

* தமிழ்ப்பண்பாடு என்பது வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகு என்று கூறுகிறது தொல்காப்பியம் 

 

*"நெடியோன் குன்றமும் தொடிநாள் பௌவமும் 

தமிழ் வரம்பறுத்த தன் புனல் நல் நாட்டு" என்கிறது சிலப்பதிகாரம் 

 

 

*இந்தியாவிலேயே அதிக அளவில் கல்வெட்டுகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு அதிகாரப்பூர்வமற்ற அளவீட்டின் படி இங்கு ஒரு லட்சம் கல்வெட்டுகள் உள்ளன 50000கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 25000 கல்வெட்டுகள் படிக்கப்பட்டு இருக்கிறது 

 

*திடீர்னு தெய்வம் உங்க முன்னாடி வந்தால் என்ன வேண்டும் என்று கேட்டால் என்ன கேட்பீங்க ?

அடுத்த பிறவியிலும் இந்த ஊரில் பிறக்கணும் அதுலயாவது சிலப்பதிகாரத்தை ஒழுங்கா படிக்கணும்னு கேட்பேன் 

இறுதி கேள்விக்கான இந்த பதிலே மீண்டும் மீண்டும் தொ.ப வை நோக்கி என்னை ஓடச்செய்தது 

 

*தொ.பா என்ற மாபெரும் தமிழ் சமூக பண்பாட்டு வரலாற்று விஞ்ஞானியின் படைப்புகளை இவ்வளவு காலம் படிக்கவில்லையே என்ற வருத்தம் தான் வருகிறது

 

*நேர்காணல் வகை நூல்களில் இது முன்னோடி மற்றும் பொக்கிசம்.

     

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments