தெய்வங்களும் சமூக மரபுகளும் ஆசிரியர் : தொ. பரமசிவன்



தினம் ஒரு புத்தகம்*

நாள்:172

தேதி:14-01-2023

புத்தகம் எண்ணிக்கை:172

புத்தகத்தின் பெயர் :தெய்வங்களும் சமூக மரபுகளும் 

ஆசிரியர் : தொ. பரமசிவன் 

விலை : 30 

பக்கங்கள் : 80 

பதிப்பகம் : நற்றிணை பதிப்பகம்  


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


 

                 *ஆய்வு நெறியில் சிறு தெய்வம் பெருந்தெய்வம் என்ற சொற்களை தாழ்ந்தவை, உயர்ந்தவை என்ற பொருளில் எடுத்துக் கொள்ள இயலாது உண்மையில் சிறு தெய்வங்கள் எனப்படுபவையே மிகப்பழைய நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் பேணி நிற்பவையாகும் 

 

*பரமசிவன் அவர்களின் இந்தப்புத்தகம் தெய்வங்களைப் பற்றிய வரலாறுகளை மிக அழகாக எடுத்துரைக்கிறது 

 

*இந்த புத்தகம் மொத்தம் 11 கட்டுரைகளை உள்ளடக்கியது இதில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை "சிறுதெய்வ நெறிகள் " 

 

*நம்மில் கடவுள் நம்பிக்கை உள்ளவரே மிகப் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கை உடையோரிலும் ஒவ்வொருவர் தங்கள் மனதிற்கு பிடித்த ஒரு வடிவத்தை கடவுளாக கற்பனை செய்து கொள்கிறார்கள் கடவுளுக்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனித்தனியே தொடர்பு இருக்கிறது என்ற கற்பனையை மதவாதிகள் மக்கள் நெஞ்சிலே மிக ஆழமாக பதித்திருக்கின்றனர் இவ்வகையான தனிமனித கடவுள் உறவு மதங்கள் உருவான பின் இருந்ததாகும் இது பரிணாமம் என்ற விஞ்ஞான கொள்கைக்கு எதிரானதாகும்.

 

* மனிதன் இயற்கையே தனக்கு உணவை அளிக்கிறது என்று அறிந்து கொண்டான் அச்சமும் உணவுத்தேவையையும் கொண்ட மனிதன் இயற்கையின் பேராற்றலை வணங்கத் தலைபட்டான் 

 

*தமிழர்கள் கூட 'முருகு' எனப்பட்ட ஒரு ஆற்றலையே முதலில் வணங்கினார்கள் பின்னர் தனிமனிதச் சிந்தனை வளர்ந்த போது தான் 'முருகு' என்பது 'முருகன்'ஆக்கப்பட்டான் 

 

*ஒவ்வொரு கட்டத்திலும் சமூகச்சேவைகள் மாற மாற தெய்வங்களும் அவற்றின் பண்புகளும் மாறின 

 

*ஹரப்பா நாகரிகத்தில் பசுபதி வழிபாடு வேதத்தில் உள்ள ருத்ர வழிபாடு தமிழ்நாட்டில் நிலவிய தறி வழிபாடு இந்த மூன்றும் கலந்தது தான் சிவ வழிபாட்டின் அடிப்படை 

 

*வட இந்தியாவில் பிறந்த கந்த வழிபாடு தமிழ்நாட்டின் முருக வழிபாடு கிழக்கிந்திய பகுதிகளில் பிறந்த கார்த்திகேய வழிபாடு இவற்றின் கலவைதான் இன்று உள்ள முருக வழிபாடு 

 

*ஆதி மனித கூட்டம் உணவு தேவைக்காகவே அச்சத்தோடும் ஆச்சரிய உணர்வோடும் இயற்கையை வணங்கியது 

 

*சமூகத்தின் ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்திலும் சமூக சேவைகள் மாறி வளர்ந்து பெருகும் போது கதைகளும் புராணங்களும் அதற்குத் தகந்தவாறு வளர்ந்தன.

 

* சிறு தெய்வங்களின் பெயர் பெருந்தெய்வங்களின் பெயர்களில் இருந்து தெளிவாக வேறுபட்டு இருக்கின்றன 

 

*ஆண் சிறு தெய்வங்களின் பெயர்கள் பொதுவாக ஐயா ,அப்பன், அடியன் ,சாமி முதலில் விகுதிகளோடும் பெண் தெய்வங்களின் பெயர் அம்மன், நாச்சி ,கிழவி முதலிய விகுதிகளோடும் அமைந்திருக்கும் 

 

*சிறு தெய்வம் என்ற சொல் எதைக் குறிக்கும் சிறு தெய்வங்களின் முதற்பண்பு அதை பிராமணர் அல்லாத மற்றவர்கள் பூசை செய்யும் தெய்வங்கள் 

 

*சமூகத்தின் அடித்தளத்து மக்கள் வழிபடும் கடவுளை சிறு தெய்வம் எனவும் நிழல் தளத்து மக்கள் வழிபடும் தெய்வங்களை பெருந்தெய்வம் எனவும் குறிப்பிடும் வழக்கம் அக்காலத்தில் இருந்திருப்பதாக தெரிகிறது 

 

*இந்த நூலைப்படிக்கும் போது ஒவ்வொரு தெய்வங்களுக்கு உரிய வழிபாட்டு முறையும் அந்த தெய்வங்கள் தோன்றிய முறையும் அந்த தெய்வங்களின் சிறப்புகளையும் படிக்கும் போது இந்தப்புத்தகத்தின் சிறப்பு தெரிகிறது 

 

*ஒவ்வொரு தெய்வங்களுக்கும் இவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து ஆராய்ந்து எழுதி இருப்பது நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறது 

 

*தமிழக தெய்வங்களை பற்றியும் பொதுவாக தெய்வங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள கண்டிப்பாக இந்த நூல் படிக்க வேண்டிய ஒரு நல்ல நூல் ஆகும்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments