எப்படி வந்தேன் தெரியுமா? ஆசிரியர் : இரா .நடராசன்


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:160

தேதி:02-01-2023

புத்தகம் எண்ணிக்கை:160

புத்தகத்தின் பெயர் : எப்படி வந்தேன் தெரியுமா? 

ஆசிரியர் : இரா .நடராசன் 

பக்கங்கள் :  48 

விலை : 40 

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் 


  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*தாளில் கருத்துக்களை வடிக்கும் பேனாவின் வருகை மூக்கு கண்ணாடி,கண்களின் பார்வை குறையை எப்படி சரி செய்கிறது? தவறாக எழுதினால் திருத்த உதவும் ரப்பரின் உருவாக்கும் இப்படியாக சைக்கிள் வரை 15 சாதனங்கள் எப்படி இந்த உலகில் பயன்பாட்டுக்கு வந்தன என்ற அறிவியல் தொழில்நுட்ப உண்மைகளின் ஊர்வலமே இந்த நூல் 

 

*சுட்டி விகடன் இதழில் தொடராக வெளிவந்து பல சுட்டிகளின் மனதை தொட்ட நூல் ஆகும் 

 

*சிறுவர் இலக்கியத்திற்காக சாகித்திய அகடமி விருது பெற்ற ஆயிஷா இரா.நடராஜன் அவர்கள் எழுதிய நூல் இது ஆகும் 

 

*1884 இல் நியூயார்க்கில் வாழ்ந்த லூயிஸ் எட்சன் வாட்டர்மேன் என்பவர் நவீன பேனாவை கண்டுபிடித்தார்

 

*தந்துகிக்கவர்ச்சி எனப்படும் ஈர்ப்பு செயல்பாடு மூலம் பேனா செயல்படுகிறது 

 

*பாலி கார்பனேட் எனும் பிளாஸ்டிக்கில் இருந்து கண்ணாடி துண்டு எனப்படும் பிளாஸ்டிக் கண்ணாடிகளை முதலில் உருவாக்கினார்கள் 

 

*மேப் உருவாக்கும் அறிவியலுக்கு கார்ட்டோ கிராபி என்று பெயர் 

 

*களிமண் அதிகமாக இருந்தால் 2H,கறி அதிகமாக இருந்தால் 2B பென்சில் ,HB என்றால் களிமண்ணும் பென்சிலும் சரிசமமாக இருக்கும் 

 

*குக்கரின் உள்ள நீரின் கொதிநிலை 120 டிகிரி 

 

*குக்கர் இண்டாலியம், அலுமினியம் ,காரியம் மற்றும் எவர்சில்வர் கலந்த கூட்டு உலோகத்தால் ஆனது 

 

*நோட்புக்கில் ஒரு குயர் என்பது 96 பக்கங்கள் 

 

*1589இல் சாக்ஸ் கண்டறியப்பட்டது

 

*கடிகாரத்தில் சராசரியாக 147 பாகங்கள் உள்ளன 

 

*கடிகார பாகங்கள் மெல்லினோமீட்டர் எனும் அளவையால் அளக்கின்றனர்

 

*இப்படி அதிசய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கியது இந்தப்புத்தகம் ஆகும்.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments