ஒருசிட்டுக்குருவியின் வீழ்ச்சி ஆசிரியர்: சாலிம் அலி


 

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:106

தேதி:09-11-2022

புத்தகம் எண்ணிக்கை:106

 

 தலைப்பு: ஒருசிட்டுக்குருவியின் வீழ்ச்சி

ஆசிரியர்: சாலிம் அலி

தமிழில் நாக.வேணுகோபாலன்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

**முனைவர் சாலீம் அலி அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை 24 தலைப்புகளில் அவரே எழுதியுள்ளார்.

 

**சாலீம் அலியின் முழுமையானவாழ்க்கை வரலாறு

 

**சாலீம் அலி வாழ்வின் சுவையான நிகழ்வுகள்

 

**சாலீம் அலியின் நூல்கள் hand book of Indian birds,book of Indian birds போன்ற தகவல்கள்

 

**குருவியில் ஆண் குருவியே முதலில் கூடு கட்டும் என்ற அதிசய தகவல்

 

**ஒருநாளைக்கு ஒரு பறவை குஞ்சுகளுக்கு 220 தடவை உணவை ஊட்டும் என்ற வியப்பான தகவல்.

 

**இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் பலரது வீடுகளில்ஏர் கன்' எனப்படும் குருவி சுடும் துப்பாக்கிகள் இருந்தன. சிறுவனாக இருந்த சாலிம் அலிக்கும் அப்படி ஒரு துப்பாக்கி பரிசாகக் கிடைத்திருந்தது. ஒரு நாள் தொண்டைப் பகுதியில் மஞ்சளாகவும் சற்றுப் புதுமையாகவும் இருந்த ஒரு குருவியை அவர் சுட்டார். அந்தக் குருவியை இதற்கு முன் அவர் பார்த்ததில்லை, புதிதாக இருந்தது.அந்த நிகழ்வு தான் சாலீம் அலி பறவைகள் குறித்த ஆய்வுக்கு அடித்தளம் இட்ட நிகழ்வு.

 

**மஞ்சள் தொண்டைச் சிட்டு பற்றி அறிந்துகொள்ளச் சென்ற அதே பி.என்.எச்.எஸ். நிறுவனத்தின் தலைவராகச் சாலிம் அலி பிற்காலத்தில் உயர்ந்தார்

 

**மஞ்சள் தொண்டைச் சிட்டை சுட்டு வீழ்த்தியதை நினைவுபடுத்தும் வகையில், தனது வாழ்க்கை வரலாற்றைசிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற பெயரில் அவரே எழுதியுள்ளார்.

 

 **"ஒரு வேலையை உங்களால் மகிழ்ச்சியாக அனுபவித்துச் செய்ய முடிந்தால், அதன் மூலம் சிறந்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கூற்றுக்கு அவரே சிறந்த உதாரணம். இந்தியப் பறவையியலுக்கு உலகப் பெருமையைத் தேடித் தந்தது அவருடைய பணி.

 

**‘இந்தியப் பறவையியலின் தந்தை' என்று சாலிம் அலி போற்றப்படுகிறார்.

 

**சாலிம் அலியைக் கவுரவிக்கும் வகையில் லாடிடென்ஸ் எனும் பழந்தின்னி வவ்வால் வகைக்கு லாடிடென்ஸ் சாலிம் அலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

** இந்த புத்தகத்தை படித்ததன் விளைவு

நம்மைக்கடந்து செல்லும் ஒவ்வொரு பறவைகளையும் நம்மை அறியாமல் கவனிக்க செய்கிறது.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments