மாக்சிம் கார்க்கின் தாய் ஆசிரியர்: தொ.மு.சி.ரகுநாதன்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:105

தேதி:08-11-2022

புத்தகம் எண்ணிக்கை:105

 

 தலைப்பு: மாக்சிம் கார்க்கின் தாய்

ஆசிரியர்: தொ.மு.சி.ரகுநாதன்

 

**மாக்சிம் கார்க்கியின் உலகப் புகழ் பெற்ற,புரட்சி இளைஞர்கள் போற்றும் ஒப்பற்ற வீரமான நாவல் தாய்.

 

** ஒரு புகழ் பெற்ற இரசிய நாட்டு எழுத்தாளர் மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

** சிலரின்

பேனா தலைகுனியும் போது

இந்த சமூகம் தலை நிமிர்கிறது....!

என்பதற்கு நல்ல உதாரணம் கார்க்கின் பேனா

 

**கார்க்கியின் தாக்கம் மற்றும் செல்வாக்கு பல எழுத்தாளர்களை, விடுதலைப் போராளிகளை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, யதார்த்தவாதிகளை உலகம் முழுதும் உருவாக்கி இருக்கிறதென்றால் அது மிகையல்ல,உண்மை

 

**உலகப் புகழ்பெற்றதாய்நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது.

 

**செருப்பு தைப்பதில் தொடங்கி பல்வேறுபட்ட

தொழில்களை செய்து புரட்சியை விதைத்தவர் கார்க்கி.தமிழகத்தின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல.

 

**வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்தால் தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது போலும்.

 

** வறுமையின் நிறம் சிவப்பு

அதனால்தானோ

சிவப்புசிந்தனைகள் மாற்றங்களை ஏற்படுத்துகிறது

 

**ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு ஏற்பட்டது.இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.லெனின் புரட்சி நிதி வேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார்.அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்க்கியால் எழுதப்பட்டது தான் உலகப்புகழ் பெற்ற தாய் நாவல்.

 

**கார்க்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்ப செய்தது இந்த நாவல் தான்.

 

**இன்று சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்க்கி பள்ளிகூடமே சென்றதில்லை.     

 

** புரட்சியாளர்கள் மீது நமக்கு ஒரு ஈர்ப்பும் மரியாதையும் இந்தப்புத்தகத்தை படித்தால் கண்டீப்பாக வரும்

 

** நம்முடைய ஒவ்வொரு உரிமையும் நமக்கு எளிதாக கிடைக்கவில்லை என்பது இதுபோன்ற புத்தகத்தை படிக்கும்போது நினைவுக்கு வருகிறது.

 

** காவற்பெண்டு புறநானூற்றில் கூறிய தாயும் மாக்சிம் தாய் படிக்கும்போது மனதில் வருகிறார்கள்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments