கருவாச்சிகாவியம் ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:118

தேதி:21-11-2022

புத்தகம் எண்ணிக்கை:118

தலைப்பு: கருவாச்சிகாவியம்

ஆசிரியர்: கவிப்பேரரசு வைரமுத்து

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*கருவாச்சி காவியம் படிக்க படிக்க

நான் கரைத்தே போய்விட்டேன் கண்ணீரில்.

 

**கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் எழுத்துத் திறமையில் மிளிரும்  புத்தகம் தான்கருவாச்சி காவியம்

 

** புத்தகத்தைப் படிக்கும் போது கிராமத்திலேயே  வாழ்ந்த உணர்வு ஏற்படுகிறது.

 

**திருமணமாகி 11 நாட்களிலேயே பழைய பரம்பரைப் பகையை மனதில் வைத்து கருவாச்சியை அவளது கணவன் கட்டையன் விலக்கி வைக்க, தனி ஒரு ஆளாக எப்படித் தன் வாழ்க்கையைத் தைரியமுடன் எதிர்கொள்கிறாள் என்பதே இந்தப் புத்தகத்தின் கதை.

 

** நமக்கே  படிக்கும்  போது  கருவாச்சிக்கு நல்லது நடக்காதா என்று ஏங்க வைத்து விடுகிறது. அந்த அளவுக்குச் சுழட்டி அடிக்கிறது பிரச்சனைகள்.நம் கண்ணில் கண்ணீர் வர வழைத்து விடுகிறது.

 

**இத்தனை இருந்தும் அதை மறக்கடிப்பது இடையிடையே வரும் வர்ணனைகள் தான்.

 

**ஒரு புத்தகத்திற்கு வலு சேர்க்கும் மிக முக்கியமான  தகவல்வர்ணனை”.

வெள்ளெருக்கம் பூவுகத்திரி மஞ்சள்கருஞ்சீரகம்கருமொளகுபச்சக்கர்ப்பூரம் ஏராளம்

 

**கூலிக்கு மாரடிப்பது  காட்சியோட விளக்கும் போது ஆயுசுக்கும் மறக்காது. அதோடு அதன் காரணமும் மிகச் சோகமானது.

 

**கருவாச்சி யாருடைய உதவியும் இன்றித் தானே குழந்தை பெறும் சூழ்நிலையைப் படிக்கும் போது நமது தாயின் வேதனை இப்படி இருந்திருக்கும் என தோன்றுகிறது.கண்களில் கண்ணீர்தான் வருகிறது

 

**வர்ணனைகள் காட்சிகளாக மனத்திரையில் ஓடியது இந்தப் புத்தகத்திற்குத்தான்.

 

**கருவாச்சி காவியத்தின் முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான் .

 

**இந்தப் புத்தகம் படித்தால் கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்த உணர்வு ஏற்படும் என்பது உறுதி

 

** கெடுதல் செய்பவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம், எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமை விடா முயற்சி

போன்றவை  தோன்றுகிறது.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

                                                        

Post a Comment

0 Comments