தமிழுக்கு நிறமுண்டு ஆசிரியர்:கவியரசு வைரமுத்து




*தினம் ஒரு புத்தகம்*

நாள்:109

தேதி:12-11-2022

புத்தகம் எண்ணிக்கை:109

புத்தகம்:தமிழுக்கு நிறமுண்டு

ஆசிரியர்:கவியரசு வைரமுத்து

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


** தமிழுக்கு நிறமுண்டு என்ற தலைப்பில் வைரமுத்துவின் 29 கவிதைகளின் தொகுப்பு

 

** நிறமென்றால் நிறமல்ல என்ற முன்னுரையே பல ஆதாரங்களின் தொகுப்பு ஆகும் கவியரசின் மணிமகுடம்

 

**தமிழுக்கு நிறம் உண்டு என்று கவிஞர் வைரமுத்து தனது கவிதைகள் மூலம் நம்மை சிந்திக்கவும வைத்திருக்கிறார்.

 

** நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே எட்டிவிட்ட இனம் தமிழர் இனம்.

 

** மாசுபடாத காற்று - மாசுபடாத தண்ணீர் -மாசுபடாத காடு மாசுபடாத பண்பாடு - இவற்றோடு தமிழினம் செழித்திருந்த சங்க காலத்தில் அதன் மக்கள் தொகை நாற்பது லட்சம் முதல் நாற்பத்தைந்து லட்சம் மட்டுமே. அப்போதே தமிழ் உள்ளூர் மனிதர் குறித்தும் சிந்தித்தது.உலக மானுடம் குறித்தும் உரக்கச் சிந்தித்தது.

 

** எது உள்

எது வெளி

பட்டிமன்றம் முடியாமல

காலுறை அணிவதில்லை...!

 

**கேள் மனமே கேள் சற்று மாற்றம் செய்து திரைப்படத்தில் பாடலாய் வந்துள்ளது

" சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்"

 

** வைரமுத்து அவர்களின இருபது கட்டளைகள் மிகவும் வியப்பாக உள்ளது

எங்கே ஊர்களில்

ஜாதிகள் இல்லையோ

அங்கே கூவுக சேவல்களே...!

 

** உள்ளே நெருப்பு

இல்லாதவர்க்கு

சூரியனும் ஒரு கரித்துண்டு...!

 

உள்ளே நெருப்பு

உள்ளவருக்குக்

கரித்துண்டும் ஒரு சூரியன்..!

 

** மண்ணில் இன்பம்

விண்ணில் இன்பம்

மனது தெளிந்தால்

மரணம் இன்பம்..!

 

பாபர் மசூதி இடிப்பின் போது மனம் நொந்து எழுதியது

 

**மாண்பு மிகு மத வாதிகளே

சில கேள்விகள் கேட்பேன்

செவி தருவீரா

 

அயோத்தி ராமன்

அவதாரமா மனிதனா

அயோத்தி ராமன்

அவதாரமெனில்

அவன்

 

பிறப்புமற்றவன்

இறப்புமற்றவன்

பிறவாதவனுக்கா

பிறப்பிடம் தேடுவீர்

 

அயோத்தி ராமன்

மனிதனெனில்

கற்பத்தில் வந்தவன்

கடவுளாகான்

மனித கோவிலுக்கா

மசூதி இடித்தீர்

 

போதும்

இந்தியாவில்

யுகம் யுகமாய்

ரத்தம் சிந்தியாயிற்று

இனிமேல்

சிந்தவேண்டியது

வியர்வைதான்

 

நம் வானத்தை

காலம் காலாமாய்

கழுகுகள் மறைத்தன

 

போகட்டும்

இனிமேலேனும்

புறாக்கள் பறக்கட்டும்

 

** இக்கவிதைத்தொகுப்பில்

உள்ள கவிதைகள் எல்லாம் மறுமலர்ச்சி தரக்கூடியவை

 

** சாதி ஒழிப்பு,விலங்குகள் நலன் போன்றவற்றை வலியுறுத்துகிறது

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments