கவிராஜன் கதை ஆசிரியர்: கவியரசு வைரமுத்து

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:117

தேதி:20-11-2022

புத்தகம் எண்ணிக்கை:117

புத்தகம்:   கவிராஜன் கதை

ஆசிரியர்: கவியரசு வைரமுத்து

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


**மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றினை 53 கவிதைகளாக கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

 

** புதுக்கவிதையின் விதைமகன் வரலாற்றிற்கு

புதுக்கவிதையாலே அணி சேர்துள்ளார்

 

**உரைநடையால் படித்த பாரதியின் வரலாறு வைரமுத்துவின் கவிதைளால் படிக்கும் போது ஒரு புது அனுபவத்தைக்கொடுக்கிறது.

 

** புதுக்கவிதையின் மீது எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு வருவதற்கு வைரமுத்துவின் கவிதைகளும் ஒரு காரணம்.

 

***பாரதியின் பிறப்பு பற்றி

 

அந்தத்

தொட்டில்குயில் அழுதது

பாலுக்கு அழவில்லை

பாசைக்கு அழுதது..!

 

கோடிக்கண்களின்

சோகத்தை

ஜோடிக்கண்களால் அழுதது..!

 

**  தாயின் பிரிவு பற்றி

 

அம்மா என்று அவன்

எழுத்துக்கூட்டிப்படித்த போது

எதிரில் அவள் இல்லை..!

 

**அரசர் பார்வையில் பாரதி பற்றி

 

கலைமகள் எழுதிய

மனிதப்புத்தகமா

இவன்?

 

** பாரதியின் தலையங்கம் பற்றி மக்கள்

 

திசைகள்

அவன்பெயரை

எழுத்துக்கூட்டத் தொடங்கின..!

 

அணுகுண்டுஎழுத்துக்களை

அச்சடித்துக்கொள்வதாய்

காகிதம்அன்று

கர்வப்பட்டதே..!

 

** வெள்ளையர் பிடியின் துன்பம் பற்றி

 

பாரத பூமியே

பார்த்தாயா?

தன்

சொந்த வனத்தில்

கூவக் கூடாதென்று

குயிலுக்குக் கட்டளை...!

 

** குவளைக்கண்ணன் பற்றி

 

பாரதி என்னும்

குயிலுக்கு ஆடை தந்த

பேகன்..!

 

** பாரதியின் இறுதி ஊர்வலம் பற்றி

 

அவன் உடம்பில் மொய்த்த

ஈக்களின் எண்ணிக்கையில் கூட

ஆட்கள் இல்லையே..!

 

** இறுதி கவிதை உறுதியாய்

 

வறுமையின் கிளையில்

வசித்துவிட்டுப் போன

யுகக்குயிலே...!

 

காற்றின் உயிரில்

கலந்துவிட்டது உனது

கவிக்குரல்..!

அது

மனித ராசியின்

கடைசிக் காதுவரை

கட்டாயம் கேட்கும்....!

 

நீ

தீக்குச்சியா?

இல்லை

தீப்பந்தம்..!

 

பாரதியின் கவிதைக்கு

வார்த்தையால் அல்ல

வாழ்க்கையால் உரை வரைவோம்..!

 

கவிஞனும்

காற்றும்

மரித்ததாய் ஏது

சரித்திரம்?

 

**கவிராஜன் கதை இளைஞர்களின் இலட்சிய

வாழ்விற்கு விதை

 

விதைக்கப்பட்ட

விண்மகனுக்கு

நாம்

செலுத்தும் அஞ்சலி...!

அவரின்

கவிதைகள

வாழ்க்கையாக்குவோம்....!

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments