STD 9 SCIENCE TM NOTES OF LESSON OCTOBER WEEK - 3

13 வேதிப்பிணைப்பு

நாள் : 17.10.2022 to21.10.2022

வகுப்பு          : 9

பாடம்           : அறிவியல்

பாடப்பகுதி   : பாடம் 13

              வேதிப்பிணைப்பு



அறிமுகம் :

1.    பூக்கள் எல்லாம்  இணைந்து மாலையாகிறது அல்லவா? பூக்களை மாலையாக்க உதவுவது எது?

2.    மனிதச் சங்கிலியை எப்படி உருவாக்கலாம்?

3.    இணைதிறன் என்றால் என்ன?

4.    குளோரினின் இணைதிறன் என்ன?

5.    வெளிவட்டப் பாதையில் உள்ள எலக்ட்ரான்கள் மட்டுமே பிணைப்பில் ஈடுபடுமா?

இது போன்ற ஏற்கனவே பயின்ற வகுப்புகளில் உள்ள சில எளிமையான வினாக்களை எழுப்பி  மாணவச் செல்வங்களின் சிந்தனைத் திறனைத் தூண்டி அவர்கள் அளிக்கும் விடைகள் மூலமாகவும் சில எடுத்துக்காட்டுகள் மூலமாகவும் இப்பாடப்பகுதி அறிமுகம் செய்யப்படும்.

கற்றல் விளைவுகள் : வாசித்தல், புதிய சொற்களை அடையாளம் கண்டு, அடிக்கோடிடுதல், பொருளறிதல், கருத்து வரைபடம் வரைதல்,தொகுத்தல்,எழுதுதல், உயர்சிந்தனை வினாக்களை உருவாக்குதல், உயர் சிந்தனை வினாக்களுக்கு விடையளித்தல்

வாசித்தல்: இப்பகுதியில் உள்ள பாடத்தலைப்பு உபதலைப்புக்களை வாசிக்க வேண்டும். பாடப்பகுதியில் உள்ள புதிய சொற்களை அடிக்கோடிட்டு  படிக்கவேண்டும்.   

கருத்து வரைபடம்

வேதிப்பிணைப்புப் பற்றிய கோசல் - லூயிஸ் கொள்கை

அணு - மற்றோர் அணு - இணைதிறன் கூடு எலக்ட்ரான்களை இழத்தல் அல்லது பங்கீடு செய்தல் - எட்டு எலக்ட்ரான்களைப் பெறுதல் விளைவு -எண்மவிதி

லூயிஸ் புள்ளி அமைப்பு

மூலக்கூறு - தனிமங்களின் அணுக்களைக் குறிக்க - புள்ளிகளைப் பயன்படுத்துவது

வேதிப்பிணைப்பு



அயனிப்பிணைப்பு

இணைதிறன் கூடு - ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை மாற்றுவது

சோடியம் குளோரைடு உருவாதல்



சகப்பிணைப்பு   எலக்ட்ரான்கள் பங்கீடு செய்தல்

குளோரின் அணு + குளோரின் அணு -----------> குளோரின் மூலக்கூறு

ஈதல் சகப் பிணைப்பு :

சகப்பிணைப்பு உருவாக - இரண்டு எலக்ட்ரான்கள் பிணைப்பில் ஈடுபடும்

பண்புகள்

 

அயனிப்பிணைப்பு

சகப்பிணைப்பு

ஈதல் சகப்பிணைப்பு

இயல்பு நிலை

அறைவெப்ப நிலையில் படிகத் திண்மங்கள்

 திண்ம / திரவ / வாயு நிலையில் காணப்படும்

திண்ம / திரவ / வாயு நிலையில் காணப்படும்

மின்கடத்துத் திறன்

 மின்சாரம் கடத்தாது - உருகிய நிலையில் கடத்தும்

கடத்தாது

கடத்தாது

உருகுநிலை

உயர் உருகுநிலை கொதி நிலைக் கொண்டது

குறைந்த உருகுநிலை

சகப் பிணைப்பை விட அதிகம்/ அயனி சேர்மத்தை விடக் குறைவு

ஆக்சிஜனேற்றம் ஆக்சிஜன் சேர்க்கப்படுதல்/ ஹைட்ரஜன் நீக்கப் படுதல்

ஆக்சிஜன் ஒடுக்கம்: ஹைட்ரஜன் சேர்க்கப்படுதல்/ ஆக்சிஜன் நீக்கப் படுதல்

தொகுத்தலும் வழங்குதலும்

 மாணவச் செல்வங்கள் தாங்கள் தொகுத்தவற்றை ஒவ்வொரு குழுவிலிருந்தும் அதன் தலைவர் வழங்குவார் .


மதிப்பீடு

1. கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

       அ)  2                    

       ஆ)  4                      

        இ)  3                        

        ஈ)  5

2. உலோகங்களுக்கும், அலோகங்களுக்கும் இடையே தோன்றும் பிணைப்பு ___________

அ) அயனிப்பிணைப்பு       

ஆ) சகப்பிணைப்பு     

இ)  ஈதல் சகப்பிணைப்பு  

ஈ) ஏதுமில்லை


3. மந்தவாயுக்கள்  மந்தத் தன்மையுடன் காணப்படுவதில்லையே காரணம் கூறுக?





எழுதுதல்:

சில உயர்வகைச் சிந்தனை வினாக்களுக்கு விடைகளைக் காணச் செய்து அதுபோல புதிய வினாக்களை உருவாக்கச் செய்து அதனை வழங்கி எழுதி வரச்சொல்லப்படும்.

குறைதீர் கற்றல்:

மதிப்பீட்டுப் பகுதியின் மூலம் கடினப் பகுதிகளை அடையாளம் கண்டு ICT மூலம் எளிமைப்படுத்தி விளக்கப்படும்

தொடர்பணி : களி மண்ணைக் கொண்டு அணு மாதிரிகளை உருவாக்குக.

அன்புடன்       இரா.சக்திவேல்

                       பட்டதாரி ஆசிரியர்

                       அரசு உயர்நிலைப் பள்ளி

                       மணக்கால் அய்யம்பேட்டை

                       திருவாரூர் மாவட்டம் 610104

                         


 

                    






Post a Comment

0 Comments