STD - 9 SCIENCE TM NOTES OF LESSON OCTOBER 2ND WEEK

 

மின்னூட்டமும் மின்னோட்டமும்

 

 

 

நாள்              :  அக்டோபர் இரண்டாம் வாரம்

வகுப்பு          : 9

பாடம்           : அறிவியல்

பாடப்பகுதி   : பாடம் 4         



   மின்னூட்டமும் மின்னோட்டமும்

 

 



  

அறிமுகம் : 

 

      1.   bநெகிழிச் சீப்பினை நன்கு தேய்த்து வெட்டப்பட்ட சிறுகாகிதங்களுக்கருகில் கொண்டு சென்றால் என்ன நிகழும்? சிறு காகிதங்கள் சீப்பினை நோக்கி ஈர்க்கப்படுமா?

2.    ஆம் எனில் காரணம் என்ன?

3.    காய்ந்த மரக்கட்டை மின்சாரத்தைக் கடத்துமா? அல்லது ஈரமான அல்லது பச்சையான மரத்துண்டுகள் மின்சாரத்தைக் கடத்துமா காரணம் என்ன?

4.    அணுக்களின் அடிப்படைத் துகள்களைக் கூறுக?

5.    எலக்ட்ரான்களின் மின்சுமை என்ன?

அம்மீட்டரைக் காண்பித்து அதன் பயன் யாது என்ற கேள்வி எழுப்பப்படும்.

இது போன்ற அடிப்படையான எளிமையான வினாக்களை எழுப்பி  மாணவச் செல்வங்களின் சிந்தனைத் திறனைத் தூண்டி அவர்கள் அளிக்கும் விடைகள் மூலமாகவும் சில எடுத்துக்காட்டுகள் மூலமாகவும் இப்பாடப்பகுதி அறிமுகம் செய்யப்படும்.

கற்றல் விளைவுகள் : வாசித்தல், புதிய சொற்களை அடையாளம் கண்டு, அடிக்கோடிடுதல், பொருளறிதல், கருத்து வரைபடம் வரைதல்,தொகுத்தல்,எழுதுதல், உயர்சிந்தனை வினாக்களை உருவாக்குதல், உயர் சிந்தனை வினாக்களுக்கு விடையளித்தல்

வாசித்தல்இப்பகுதியில் உள்ளவற்றை நிறுத்திப் பொறுமையாக வாசிக்க வேண்டும். பாடப்பகுதியில் உள்ள புதிய சொற்களை அடிக்கோடிட்டு  படிக்கவேண்டும்   

மின்னூட்டங்கள் :

1.    மின்னேற்றம் செய்யப்பட்ட சிறுதுகள்

2.    அலகு - கூலூம்

3.    எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பு

e = 1.6 x 10 -19 கூலூம்

q = ne

n - எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

மின்விசை

Ø  மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் விசை

Ø  ஓரின மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று விலக்கும்

Ø  வேறின மின்னூட்டங்கள் - கவரும்

Ø  தொடுகையில்லா விசை

மின்புலம்:

நேர்மின்னூட்டம் நகரும் திசை

மின்னழுத்தம்:

மின்விசைக்காக எதிராக ஓரலகு நேர்மின்னூட்டம் ஒன்றைக் குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டுவரச் செய்யப்படும் வேலை. அலகு : வோல்ட்

மின்னியக்குவிசை:

 மின்னூட்டத்தை மின்சுற்றைச் சுற்றி அனுப்பச் செய்யப்படும் வேலை

                                 e =w/q

மின்னோட்டம்: அதிக மின்னழுத்தம் ---> குறைந்த மின்னழுத்தம் ( எலக்ட்ரான்களின் ஓட்டம்                     I = q/t       அலகு : ஆம்பியர்.     

                  1 ஆம்பியர் = 1 கூலூம் / 1 வினாடி

         மின்தடை :

           மின்னோட்டம் பாய்வதற்கு கருவியால் உணரப்படும் எதிர்ப்பு  விசை


      மின்னோட்டத்தின் விளைவு

             ) காந்த விளைவு      

            ) வெப்பவிளைவு               

             ) வேதிவிளைவு

 

       மின்னோட்டத்தின் வகைகள் :

         ) நேர்திசை மின்னோட்டம்

        ) மாறுதிசை மின்னோட்டம்

 

தொகுத்தலும் வழங்குதலும்

 மாணவச் செல்வங்கள் தாங்கள் தொகுத்தவற்றை ஒவ்வொரு குழுவிலிருந்தும் அதன் தலைவர் வழங்குவார் .








 

 

மதிப்பீடு

 

1.    எலக்ட்ரான்கள் ......மின்னழுத்தத்திலிருந்து ......மின்னழுத்தத்திற்கு நகரும்.

) நேர், எதிர்   

) உயர், குறைந்த    

) குறைந்த, உயர்    

) எதுவுமில்லை


2.    மின்னோட்டம் =

)  I = q / t         

) q = ne       

) v = I R      

) எதுவுமில்லை

 

3.    மின்னோட்டத்தி வெப்பவிளைவு ________ என அழைக்கப்படும்.

                     )ஜூல் வெப்பமேறல்                     

                    ) கூலூம் வெப்பமேறல்

                    ) மின்னழுத்த வெப்பமேறல்             

                     ) ஆம்பியர் வெப்பமேறல்

 

4.    மின்புலம் வரையறு.

 

5.    மின்னோட்டம் வரையறு. அதன் அலகினைத் தருக   

  

எழுதுதல்:

சில உயர்வகைச் சிந்தனை வினாக்களைஉருவாக்கச் செய்து அதனை வழங்கி எழுதி வரச்சொல்லப்படும்.

குறைதீர் கற்றல்:

மதிப்பீட்டுப் பகுதியின் மூலம் கடினப் பகுதிகளை அடையாளம் கண்டு ICT மூலம் எளிமைப்படுத்தி விளக்கப்படும்


தொடர்பணி :  எளிய மின் சுற்றுக்களை உருவாக்கச் செய்தல்.

 

அன்புடன்       இரா.சக்திவேல்

                       பட்டதாரி ஆசிரியர்

                       அரசு உயர்நிலைப் பள்ளி

                       மணக்கால் அய்யம்பேட்டை

                       திருவாரூர் மாவட்டம் 610104

                        

 

                      


Post a Comment

0 Comments