NMMS MAT TWO DAY TRAINING : 2022-23




               சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் அதிக எண்ணிக்கையில் NMMS திறனறித் தேர்வில் தேர்ச்சி அடைய ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் திறனறி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி இரண்டு நாள் 17.10.2022 & 18.10.2022 நடைபெற்றது


                  இப்பயிற்சியை சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு முருகன் அவர்கள் துவங்கி வைத்தார். சேலம் மாவட்ட ADPC திரு பத்மநாபன் அவர்கள் வாழ்த்துரை கூறினார் மேலும் சேலம் மாவட்ட APO திரு மாரியப்பன் அவர்கள் நன்றியுரை கூறினார். இப்பயிற்சியானது சேலம் அம்மாபேட்டை நோட்டரி டேம் ஆப் ஹோலிகிராஸ் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது


 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு சந்தோஷ் Elementary DEO இப்பயிற்சியில் சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் மாவட்டம், ஆதம்சேரி, அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் திரு மோகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். அவர் NMMS தேர்வுகள் பற்றி விளக்கிக் கூறினார்


                  அதில் SAT - க்கு 90 மதிப்பெண்களும் MAT -க்கு 90 மதிப்பெண்களும் இருப்பதாக கூறினார். அதில் இரு நாட்களும் MAT - பற்றி 36 தலைப்புகள் இருப்பதாக கூறினார். அதில் பகடை கணக்குகள், கனசதுர கணக்குகள், என் தொடர்ச்சிகள், இருக்கை அமைப்பு கணக்குகள், உறவுமுறை கணக்குகள், படங்களில் காணும் எண்களுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் கூட்டத் தொடர்கள் உட்பட பல கணக்குகளை எவ்வாறு சுலபமாக செய்வது என்பது பற்றி மிகவும் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிதில் புரியும் வண்ணம் கூறினார். ஒரு கேள்விகளுக்கு இருபதிலிருந்து முப்பது நொடிகள் விடை அளிக்க எவ்வாறு என்பது பற்றி எளிமையாக புரியும் வண்ணம் கூறினார்


                   NMMS தேர்விற்கு தனித்துவமாக புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் அவருக்கு உறுதுணையாக சேலம் மாவட்டத்திலிருந்து கண்ணன் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) PUMS தப்பகுட்டை, பிரபாத் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) PUMS, கோமாளியூர், . சங்கர் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) PUMS, அரிசிபாளையம், நா. சின்னண்ணன் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) PUMS, .பள்ளிப்பட்டி, மு.சரவணன் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வாழப்பாடி, .சக்திவேல் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்), PUMS, M.யுவராஜ் பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) மணியகாரம்பாளையம் .அன்பழகன் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) இரா.ராஜசேகரன் பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) அரசு உயர்நிலைப்பள்ளி,கண்ணியம்பட்டி திருமதி .பிரபா பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) PUMS, வெண்டலூர் ஆகிய ஆசிரியர்கள் இந்த புத்தகங்கள் எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தனர் .மேலும் MAT. SAT கேள்விகளும் விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது நம்முடைய website  ஆன www.kanimaths.com -ல் பார்த்துக்கொள்ளலாம்.
























NMMS MODEL  2022 11 SET QUESTION & ANSWER : Download Here


KANI MATHS STD 1 TO 12TH ALL SUBJECT STUDY MATERIAL LINK : CLICK HERE

Bootstrap demo






Post a Comment

0 Comments