எண்களின் கதை ஆசிரியர் : த.வி வெங்கடேஸ்வரன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:186

தேதி:28-01-2023

புத்தகம் எண்ணிக்கை:186

புத்தகத்தின் பெயர் : எண்களின் கதை 

ஆசிரியர் : த.வி வெங்கடேஸ்வரன் 

பக்கங்கள் : 56 

விலை : 45 

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*எண்கள் முதன்முதலில் தோன்றிய இடம் எது ? மனித குலத்துக்கு மட்டுமே தான் கணித திறமை இருக்கிறதா ? எண்களின் வடிவம் எங்கே? எப்படி உருவாகி உலகமெல்லாம் பரவியது ?சூனியம், ஜீரோ ,சைபர் ,அண்டாமுட்டை என்று அழைக்கப்பட்ட பூஜ்ஜியம் அதன் பலன்கள் என்ன என்பவற்றுடன் கணிதம் குறித்த சில புதிரான விந்தை தகவல்களையும் வாசகர்களுக்கு சிறப்பு சிறப்பான முறையில் அறிமுகப்படுத்துகிறது விஞ்ஞானி த.வி வெங்கடேஸ்வரன் எழுதிய எண்களின் கதை என்னும் இந்த நூல் 

 

*பாரதி கணக்கு பிணக்கு ஆமணக்கு என்று எழுதினார் பெரிய தலைவர்களில் பலர் கணிதப் பாடத்தில் சராசரிக்கு கீழாகவே மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் ஆனால் நம் இந்திய நாட்டில் பிறந்து உலக புகழ்பெற்ற கணித மேதை ராமானுஜமே கணக்கில் மட்டும் நூற்றுக் நூறு  மற்றவற்றில் சராசரி இது ஒரு விந்தைதான் 

 

*குரங்கும் குதிரையும் கூட கணக்கில் சமர்த்தாக உள்ளதை வெங்கடேஸ்வரன் என்ன நூலில் சுவாரஸ்யமாக சொல்கிறார் 

 

*பிறந்த குழந்தைக்கு கூட என் உணர்வு இருக்கிறது என்கிறார் 

 

*வரலாற்றில் எல்லா காலக்கட்டத்திலும் எல்லா சமூகத்திலும் எண் தொகை திறன் இருக்கவில்லை 

 

*பிறக்கும் குழந்தைக்கும் அதிகம் குறைவு என்ற எண் மதிப்பீடு திறமை ஒன்று இரண்டு மூன்று என எளிய என் தொகை அறிவும் உள்ளது என்றாலும் மனித நாகரீகம் வளர்ந்த சூழலில் தான் கணிதம் வளர்ந்தது 

 

*ஒரு கைவிரலை வைத்து ஐந்து வரை எண்ணி மறு கைவிரல் காண்டங்களை கொண்டு ஐந்து ஆக தொகை செய்து மொத்தம் 5×12=60 வரை தொகை செய்யும் வகை தான் சுமேரிய முறை தோன்றியதற்கு அடிப்படையாக இருக்கலாம்.

 

* பிதாகரசும் அவரது சீடர் ஹிப்பசுஸ் என்பவரும் நதியில் படகில் சென்று கொண்டிருந்தனர் திடீர் என கோபம் கொண்ட பித்தாகரசு தனது சீடரை நதியில் தள்ளிவிட்டு கொன்றுவிட்டார் என்று கதை கொல்லப்பட்டது ஏன் தெரியுமா 2 என்பது விகிதமுறா என் எனக் கூறியதால் கோபம் கொண்ட பிதாகரசு ஹிப்பசுவை  படகிலிருந்து தள்ளி விட்டு விட்டார் என்று கூப்படுகிறது.

 

*பூஜ்ஜியம் என்ற எண்ணை கண்டுபிடித்ததனாலே எதிர்எண்கள் பற்றிய கருத்து உருவாகியது இது அல்ஜிப்ரா வானவியல் சூத்திரங்களை ஆராய மிகவும் பயன்பட்டது 

 

*எண்களின் வரலாறு மற்றும் வளர்ச்சி குறித்து இந்த நூல் விரிவாக விவரிக்கிறது

     

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments