பாரதிதாசன் கவிதைகள் ஆசிரியர்: பாரதிதாசன்




*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:74

தேதி:08-10-2022

புத்தகம் எண்ணிக்கை:74

தலைப்பு: பாரதிதாசன் கவிதைகள்

ஆசிரியர்: பாரதிதாசன்

 

**தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்அவர்கள்.

 

** பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவிஎன்றும், ‘பாவேந்தர்என்றும் அழைக்கப்பட்டார்.

 

**தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன்.

 

** தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

 

**தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதைபாரதிதாசன்என்று மாற்றிக் கொண்டார்.

 

**எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார்

 

**அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:

'பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.

 

**பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவிஎன்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்குபாரதிதாசன் விருதினைவழங்கி வருகிறது மற்றும்பாரதிதாசன் பல்கலைக்கழகம்என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.

 

**1946 – அவரதுஅமைதி-ஊமைஎன்ற நாடகத்திற்காக அவர்தங்கக் கிளி பரிசுவென்றார்.

 

**1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரதுபிசிராந்தையார்நாடகத்திற்காக அவருக்குசாஹித்ய அகாடமி விருதுவழங்கப்பட்டது

 

**2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

 

** தமிழ் மீது உயிரை வைத்து தமிழை நேசித்து எழுதியவைகள்

 

கனியிடை ஏறிய சுளையும் -- முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும், -- காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்;

நனிபசு பொழியும் பாலும் -- தென்னை

நல்கிய குளிரிள நீரும்,

இனியன என்பேன் எனினும், -- தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்!

 

** வாழ்வையே தமிழாக நேசித்த மேதை

 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

   மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

   எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்:

   இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

 

** பொதுவுடமைக்கு குரல் கொடுத்த புரட்சிக்கவி

புதியதோர் உலகம் செய்வோம் -- கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். (புதிய)

 

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் 

புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்

 

** இயற்கையினை நேசித்த இன்பக்கவி

விரிந்த வானே, வெளியே, - எங்கும்

   விளைந்த பொருளின் முதலே,

திரிந்த காற்றும், புனலும், - மண்ணும்,

   செந்தீ யாவும் தந்தோய்,

தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்

   செறிந்த உலகின் வித்தே,

புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்

   புதுமை! புதுமை! புதுமை!

 

** முத்தமிழுக்கு கவிதை சொன்ன முத்தமிழ்க்கவி

 

படிப்பும் பேச்சும் இயற்றமிழ்

பாடும் பாட்டே இசைத்தமிழ்

நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே

நாடகத் தமிழ் என்பார்கள்

முடிக்கும் மூன்றும் முத்தமிழே

முத்தமிழ் என்பது புத்தமுதே

முடித்த வண்ணம் நம் தமிழே

முத்தமிழ் என்றே சொல்வார்கள்.

 

** தாலாட்டுப்பாடல்கள் பாடிய தாய்க்கவி

 

பட்டுப் பாப்பா தூங்கு-நீ

பாலும் குடித்தாய் தூங்கு 

மொட்டில் மணக்கும் முல்லை-என்

முத்தே என்ன தொல்லை

சிட்டாய் ஆடிப் பறந்தாய்-உன்

சிரிப்பால் எங்கும் நிறைந்தாய்

பிட்டும் தருவேன் தூங்கு-என் 

பெண்ணே கண்ணே தூங்கு!

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

  

Post a Comment

0 Comments