நான் துணிந்தவள் ஆசிரியர்:கவிஞர் புவியரசு



*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:91

தேதி:25-10-2022

புத்தகம் எண்ணிக்கை:91

தலைப்புநான் துணிந்தவள்

மூல ஆசிரியர்: ப்ரமேஷ் டங்வால் தமிழில்

ஆசிரியர்:கவிஞர் புவியரசு

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

**பிரம்மன் படைப்பில்

பிரமாண்ட படைப்பு பெண்....!

 

அதிசயங்கள்

அதிசயத்துப்போகும்

அதிசயம் பெண்..!

 

தரணியில்

எல்லாம் தாயில்தான்

தொடங்குகிறது...!

 

தாய்மை

பெண்மையின்

மணிமகுடம்...!

 

தாயாய்

சேயாய்

தனிப்பெருமையுடன்

வலம்வருபவள்பெண்...!

 

**மகத்துவமான பெண்இனத்தில் தோன்றி சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றிய மாபெரும் பெருமைகளை கொண்ட கிரண்பேடியின் வாழ்க்கை வரலாறு

 " நான் துணிந்தவள்" என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.

 

** கண்ணதாசன் பதிப்பகம் மூலம் தமிழில் கவிஞர் புவியரசு எழுதியுள்ளார். அழகிய தமிழ்நடையில் மனதைக்கவரும் வீதம் உள்ளது

 

** அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்ற காலத்திலே பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக உறுதியான இதயம் கொண்ட வலிமையான பெண்ணாக கல்விக்கற்று காவல்துறையில் பணியாற்றினார்.

 

** மக்களுக்கும் ஒரே சட்டம்...!

மன்னனுக்கும் ஒரே சட்டம்..!

சட்டத்தின் முன்

பிரதமரும் ஒன்றே..!

பாதசாரியும் ஒன்றே...!

என செயல்பாடுகள் மூலம் நிருபித்தவர்.

 

** போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த போது தவறான இடத்தில் நிறுத்தப்பட்ட பிரதமரின் காரையே கிரேண் கொண்டு தூக்கிச்செல்ல வைத்தவர் என்பதால் "கிரேண்"பேடி ஆனார்

 

** இன்றைய பெண்களுக்கு வாழும் முன் உதாரணம் கிரேண்பேடி,இரும்பு இதயமும் தீமைகளை சுட்டெரிக்கும் வலிமையான மனதும் கொண்டவர்

 

** கிரேண்பேடி வாழ்க்கையில் தென்றலும் வசந்தமும் வீசவில்லை.மக்கள் வீரோத சக்திகளின் தொல்லைகள் அரசியல்வாதிகளின் தொந்தரவுகள் போன்ற நெருக்கடிகளால் பலதடவை துன்பங்கள் ஏற்பட்ட துயர்மிகுந்த வாழ்க்கை

 

** கிரண்பேடியின் வாழ்க்கை கற்றுத்தருவது

 

பெண்ணே

விழிகளுக்கு

மைதீட்டாதே...!

பெண்ணே

விழிகளுக்கு

தீ தீட்டு...!

எதுவும் உன்னால்

 முடியும்...!

 

**TheWeek இதழ் 2000 ஆம் ஆண்டில்நடத்திய கருத்துக்கணிப்பில் தலைசிறந்த பாராட்டுக்குரிய முதல் பெண்மணியாக தெரிவு செய்யப்பட்டு பாராட்டப்பெற்றார்.

 

**சிறைக் கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்கிய நவீன மணிமேகலை.

 

சிறைச்சாலை

தண்டனை தரும் 

இடம் மட்டுமல்ல...!

 

சீர்திருத்தும் இடம்

அறிவைக்கூர்படுத்தும் இடம்...!

 

         என்பதை நிரூபித்த அறிவின் பிறப்பிடம் கிரேண்பேடி .இதன் மூலம் அன்பால் அகிலத்தில் எதுவும் செய்யலால் என்பதை உணர முடிகிறது.

 

**தலைக்கு விலை வைத்தபோதும்   

உயிர்க்குக் குறி வைத்தபோதும்,

அஞ்சாமல் கடமையாற்றிய வீராங்கனை....!

 

நாட்டை உலுக்கிய போராட்டத்தில்    

தனி ஒருத்தியாய்

நீதியின் பக்கம் நின்ற பெண் சிங்கம்...!

 

ஆயிரம் வாள்களுக்கு

 எதிராகத் தன்னந்தனியே கம்பு சுழற்றி

முன்னே பாய்ந்த பெண் புலி....!

 

காலமெல்லாம் எதிர் 

வெள்ளத்தில் நீச்சலடித்த 

புத்துலக புரட்சிக்காரி......!

 

படு நரகப்படுகுழியாக    

இருந்த சிறையை அமைதி தவழும்

ஆசிரமமாக மாற்றிய அதிசயப்பெண்மணி....!

 

அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும்

துரத்தித் துரத்தி வேட்டையாடியபோதும்

நெஞ்சம் குலையாமல், கொடிய சூறாவளிகளின் நடுவே

உறுதியாய் நின்ற புதுமைப்பெண்..!

என்று பதிப்பாளர்கள் கிரண் பேடிக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்கள்.  

 

**திகார் சிறைச்சாலையில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக கிரண் பேடிபணியாற்றத் தொடங்கியதும், அதனை ஒரு ஆசிரமமாகவே மாற்றியிருக்கிறார்.அவர் அங்குபணியாற்றிய

காலத்தை பொற்காலம் என்றுதான் மக்கள் 

வர்ணித்திருக்கிறார்கள் 

 

**அவரை இடமாற்றம் செய்தபொழுது, ஒரு

கைதி தனது வேதனையை ஒரு பெண்   

பத்திரிகையாளரிடம் இப்படிபகிர்ந்து

கொண்டானாம்.

நான் சிறையிலிருந்து தப்பிச்சென்று, அவரைமாற்றம் செய்தவரை கொலை செய்வேன்

இப்படிப்பேசுவது நியாயமா…?அப்படிச்செய்தால் கிரண்பேடி

 பட்ட பாடெல்லாம் வீணாகிவிடாதா? ”- என்ற கேள்விக்கு,    

   அந்தக்கைதி, “ அதுவும் நியாயம்தான். கிரணைமாற்றியவன் கார் விபத்தில் சாகவேண்டும் என்றுநான் 

இனிக்கடவுளைப் பிரார்த்திக்கப்போகிறேன்

என்று கண்கலங்கச்சொல்லியிருக்கிறான்.

**சிறைக்கைதிகளுக்கு தாயாக சகோதரியாக

சேவகியாக வாழ்ந்து காட்டியவர் கிரண்பேடி

 

**இந்தியாவில் அமிர்தசரஸில் பிறந்த கிரண்,ஆங்கில இலக்கியத்திலும் அரசியல் விஞ்ஞானத்திலும் சட்டத்துறையிலும் படித்து   

பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகங்களினால் டாக்டர் பட்டமும்வழங்கப்பட்டு 

 கௌரவிக்கப்பட்டவர்

 

**ஆய்வாளர், எழுத்தாளர். It’s Always Possible ( ‘அதுஎப்போதும் சாத்தியம்தான்’) 

என்றநூலையும் பல ஆங்கில இதழ்களில் 

ஏராளமான கட்டுரைகளையும் எழுதியிருப்பவர். உண்மைநிகழ்ச்சிகளின் தொகுப்பாக இவரால்

எழுதப்பட்ட, ‘என்ன தவறு நேர்ந்தது…?’என்ற

நூலில் பதிவான பல சம்பவங்கள் இந்திய

 தேசிய தொலைக்காட்சியில் தொடராக

ஒளிபரப்பப்பட்டிருக்கிறது

 

**.நா. மன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட

நவஜோதி, IndiaVisionFoundation  

நிறுவியவரும் இவரே.

 

**பிலிப்பைன்ஸ்நாட்டின்அதி உயர்விருதான 

ராமோன் மாகசேசே விருதுகிரண்பேடிக்கு 

வழங்கப்பட்ட தருணத்தில் திகார் சிறையில்

இருந்த 9,100 கைதிகள் அதனை தங்களது

சொந்த விழாவாகவே கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார்கள்.

 

** வாழும் உதாரணங்கள் இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு நல்வழிகாட்டி என்பது மறுக்க மறக்க முடியாத உண்மையாகும்

               *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.






Post a Comment

0 Comments