கணிதம் கற்பிக்கும் முறைகள் ஆசிரியர்:டாக்டர்.வி.நடராஐன்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:77

தேதி:11-10-2022

புத்தகம் எண்ணிக்கை:77

புத்தகத்தலைப்பு: கணிதம் கற்பிக்கும் முறைகள்

ஆசிரியர்:டாக்டர்.வி.நடராஐன்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

** கணிதம் பற்றி தெரிந்து கொள்ள முழுமையான எளிமையான நூல்

 

** கணிதத்தின் வரையறை, கணிதத்தின் வரலாறு, தன்மைகள், பண்புகள் ,சிறப்புகள் போன்றவைகளை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது

 

**உலக,இந்திய,தமிழக கணிதமேதைகள் வரலாறு விரிவாக உள்ளது

 

*பள்ளிப் பாடங்கள் எல்லாவற்றிலும், கணிதம் மட்டும் ஒரு தனித்துவமானஆனால் அதே சமயத்தில் புதிரான - பாடமாக உள்ளது

 

**ஒரு பக்கம் பள்ளிக் கல்வியில் இது அத்தியாவசியமான பாடமாகக் கருதப்படுகிறது

 

**ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இது கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது

 

**கணித விதிகள், கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளை மற்ற துறை சார்ந்த சூழ்நிலைகளில் தீர்வு காணும் பொருட்டு பயன்படுத்தப் படுவதே பயன்பாட்டுக் கணிதம் எனப்படுகிறது

 

**எண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட கணிப்பியலோ வடிவங்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாக குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் இயற்கணிதம் தான் கணிதத்தின் முக்கிய பாகம் என்பர். மற்றும் சிலர் வடிவங்களை அலசி ஆராயும் வடிவியல் வளர்ச்சி தான் கணிதத்தின் இயல்பு என்று கூறுவர். ஆனால் கணிதம் இதையெல்லாம் தாண்டிய ஒன்று.

 

**14 வது நூற்றாண்டில் தொடங்கி, சென்ற ஆறு நூற்றாண்டுகளில் கணிதத்தின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள கணிதவியலாளர்கள் பலரின் வரலாறுகளே தக்க சான்றுகள். ஃபெர்மா, நியூட்டன், ஆய்லர், காஸ், கால்வா, ரீமான், கோஷி, ஏபல், வியர்ஸ்ட்ராஸ், கெய்லி, கேன்ட்டர், ஹில்பர்ட், இப்படி இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கு கொண்டு உருவாக்கப்பட்ட கணிதம் இன்றைய கணிதம்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Bootstrap demo




Post a Comment

0 Comments