*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்* - வாசிப்பு வசப்படும்

                                                      




*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:64

தேதி:28-09-2022

புத்தகம் எண்ணிக்கை:64

புத்தகத்தலைப்பு: வாசிப்பு வசப்படும்

ஆசிரியர்:.சுப்பாராவ்

 

** மொத்தம் பதினாறு பக்கங்கள் தான் நாம் படித்தவுடனே நமது வாசிப்பு ஆர்வத்தை தூண்டும்

 

** குறைந்த பக்கங்களில் நிறைந்தது மன நிறைவு.

 

**புத்தக வாசிப்பு ஒரு காலை

 

**எந்த ஒரு கலையையும் கற்க, அறிந்துகொள்ள நாம் செலவிட வேண்டிய மூன்று அடிப்படை விசயங்கள் நமது நேரம், உடல்ரீதியான, மனரீதியான முயற்சி.

 

** ஏராளமான ஆய்வுகளுக்குப் பிறகு வாசிப்பு நிபுணர்கள் பத்துச் சதவிகித விதியை உருவாக்கியிருக்கிறார்கள்

 

** எந்த ஒரு புத்தகத்தை எடுத்தாலும், தினமும் அதில் பத்து சதவிகிதம் படிப்பது என்று உறுதி ஏற்படுத்திக்கொள்வது.

 

** வாசிப்பிற்கு நமது ஆழமான மனவிருப்பம் மிக முக்கியம். அதைவிட முக்கியம் நாம் எவ்வளவு சாப்பிட்டாலும், அம்மா இன்னும் கொஞ்சம் என்று எக்ஸ்ட்ரவாகக் கொஞ்சம் திணிப்பாளே அது போல இன்னும் கொஞ்சம் கூடுதலாக என்ற ஆசை.

 

**வாசிப்பு என்பது ஓர் ஆன்மாவின்இராகம்

அது அறிவிற்கும் ஆற்றலுக்கும் உள்ளஓர் உறவுப்பாலம். அதனால் தான் வாசிக்கின்றசமுதாயம் உலகை ஆளும் என்பார்கள்

 

**நம்நாட்டில் சராசரி ஆண்டிற்கு ஒவ்வொரு நபரும் 2புத்தகங்களே வாசிக்கின்றனர் என்பது ஓர்ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலைநாட்டினரோ ஆண்டிற்கு ஆறிலிருந்து 10புத்தகங்கள் வரை வாசிக்கின்றனர் என்று மேலும்அத்தகவல் தெரிவிக்கின்றது

 

**இந்தி சுதந்திர போராட்டவாதி மாவீரன்

பகத்சிங்கை தூக்கில் போடும் சில மணித்துளிகளுக்கு முன்பு அன்னாரின் கடைசிஆசை என்ன என்று வினவிய போது, அவர்சொன்ன அந்த வார்த்தைகளை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

 ‘நான் படிக்கும் புத்தகத்தைஇன்னும் முடிக்க 

வில்லை; நான் படித்து முடித்தப்பிறகு என்னைத் தூக்கில் போடுங்கள்என்றார்.அது அன்னாருன் கடைசி ஆசை என்றால்,வாழும் காலத்திலேயே நாம் வாசித்து விடவேண்டும் அல்லவா

 

 ** ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்

 என்று ஔவை சொன்னது கல்விக்குமட்டும் 

தான் என எண்ணிவிடலாகாது.வாசிக்காமல் 

ஒரு நாளும் இருக்க வேண்டாம்என்று நினைத்து சிந்தித்துப் பாருங்கள், வானம்வசப்படும்.

 

** அறிவும் ஆற்றலும் புத்தாக்கச்சிந்தனைக்கு அடித்தளமாகும்.அவ்விரண்டையும் ஒருங்கே கொடுப்பதுவாசிப்பு என்றால் அது மிகையாகாது

 

**வாசிப்பை நம் சுவாசமாகமாற்றாவிட்டாலும் 

பராவாயில்லை. குறைந்ததுநம் 

வாழ்வின் பண்பாடாக மாற்ற முடிந்தால், நம்சமுதாயத்தில் மிகப் பெரிய மறுமலர்ச்சியைக்காண முடியும்

 

**மேலை நாடுகளில் வாசிப்புப்பழக்கம் ஒரு 

பண்பாடாக கடைப்பிடிப்பதால்தான் அவர்கள் நம்மை விட 20 ஆண்டுகள்வளர்ச்சியில் 

முன்னோடியாக இருக்கிறார்கள்.

 

 **வாசிப்பு என்று தனியாகப்பார்க்காமல் 

அதனை பண்பாட்டோடு கலந்துவிட்டால் 

நிச்சயம் பெரிய மாற்றத்தைஎதிர்ப்பார்க்கலாம்

பண்பாடு என்பது நம்வாழ்க்கையின்

 வெளிப்பாடு. அந்தவாழ்க்கைக்குள் 

மாணவர்களைக் கொண்டு வந்துவிட்டால்,

 பிறகு அவர்களின் வாசிப்பு தாகத்தைத்தீர்க்க

 நமக்கு புத்தகங்கள் போதாது.

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

 🌏🌏 Join Us Social Media:

Bootstrap demo






Post a Comment

0 Comments