ப்ளீஸ் இந்தப்புத்தகத்தை வாங்காதீங்க - பாகம் ஒன்று ஆசிரியர்:கோபிநாத்

                                                                


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:47

தேதி:11-09-2022

புத்தகம் எண்ணிக்கை:47

புத்தகத்தலைப்பு: ப்ளீஸ் இந்தப்புத்தகத்தை வாங்காதீங்க - பாகம் ஒன்று

ஆசிரியர்:கோபிநாத்


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.               


**தன்னம்பிக்கை  பற்றியும் ஆளுமை மேம்பாடு பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியாசம்

 

**ஒரு நல்ல நண்பனிடம்  இயல்பாக  உரையாடுவதை போன்ற அவரது எழுத்து நடை மனதைக் கவர்கிறது.

 

**நம்கனவுகள், குறிகோள்கள், உழைப்புமகிழ்ச்சி, வருத்தம், நம்பிக்கை பின்னணியில் நம் மனம்தான் அத்தனையையும் தீர்மானிக்கும் சக்தி என்பதை எளிதாக உளவியல் ரீதியில் அலசாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்களில் இருந்தே எடுத்துகாட்டியிருப்பது சிறப்பு

 

**எல்லாவற்றிற்கும்

இது அறிவுரை  செய்கிற புத்தகம் அல்லமகிழ்ச்சியான  நம் வாழ்கையே மிகவும் மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு சில சுவாரசியமான  கருத்துக்கள் அவ்வளவே.

 

**நமக்கு நாமே கேள்வி கேட்டு பதில் சொல்லும்படியான சூழ்நிலைகளை புத்தகம் முழுதிலும் விரவ விட்டுள்ளார்

 

**நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள அருமையான வாய்ப்பு இந்த புத்தகம்.

 

**“சந்தோஷம் எதில் இருக்கிறது

ரொம்ப சுலபம்.

சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் அது இருக்கிறது

 

**“உங்களை அடுத்தவர் ரசிக்க வேண்டும்,கவனிக்க வேண்டும், உங்கள் சிறப்பியல்புகளை, உங்கள் தனித்துவங்களை அடையாளங்கண்டு பாராட்ட வேண்டும் என்று நீங்கள் ஆசைபடுவது உண்மை என்றால், அதை உங்களில் இருந்து நீங்கள்தான் தொடங்க வேண்டும்

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 🌏🌏 Join Us Social Media:-


Bootstrap demo




Post a Comment

0 Comments