கரும்பலகையில் எழுதாதவை ஆசிரியர்: பழ.புகழேந்தி

 



*50- வது நாள் சிறப்பு புத்தகம்*      எனது பதிவுகளை படித்து இதுவரை வாழ்த்தி உற்சாகப்படுத்திய முகமறியா நண்பர்கள் மற்றும் நேரிலும் செல்பேசியிலும் ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.        * வாசிப்போம் வளம் பெறுவோம்.             *தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*    

  

நாள்:50

தேதி:14-09-2022

புத்தகம் எண்ணிக்கை:50

புத்தகத்தின் தலைப்பு: கரும்பலகையில் எழுதாதவை

ஆசிரியர்: பழ.புகழேந்தி


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம் பதிவு இன்றுடன் ஐம்பதாவது நாள் பதிவு சில புத்தகங்களை படிக்கும் போது என்னையறியாமல் அழுது உள்ளோன் அப்படிப்பட்ட புத்தகம் தான் இது                     *நமது மனதில் ஒரு இனம் புரிய அனுபவத்தை உருவாக்கும் புத்தகம்.            *கண்டீப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

** அட்டைப்படமே எனக்கு ஒருவிதமான ஈர்ப்பை ஏற்படுத்தியது.சங்கீத ஒலியோடு சுயமாகப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி பார்க்க பார்க்க அழகாய் இருந்தது

 

** குழந்தைகளை நேசித்து குழந்தையாக வாழும் குழந்தையுள்ளம் கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி எழுத முடியும்

 

** தாய்மொழியால் கற்பித்தால் குழந்தையின் சிந்தனை சிறப்பாய் அமையும் என அறிஞர்கள் கூறியது இன்று பொய்யாகிவிட்டதை அழகாய் படம் பிடித்துக்காட்டுகிறார்

 

தமிழில் பேசினால்

தண்டனை தரும் பள்ளி

தினமும் தொடங்குகிறது

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி...!

 

**நேற்று 

ஒரு குழந்தையை

அடித்துவிட்டேன்

இன்னும் வலிக்கிறது

எனக்கு..!

என்ற வரிகள் கவிஞரின் மென்மையான இதயத்தை காட்டுகிறது

 

** ஒரு குழந்தை தந்தையின் ஞாபகத்தால் அழுகிறது என்பதற்காக  கோடு போட்ட சட்டையைத் தவிர்த்து விடுமுறை போடும் கவிஞரின்  தாய் உள்ளம் யாருக்கு வரும்

 

** விடைகள் சொல்லவே

பழக்குகிறோம்

பழக்கியதே இல்லை 

கேள்வி கேட்க..!

என்ற வரிகள் இன்றைய கல்விமுறைகளை காட்டுகிறது

 

** எழுதப்படாத கரும்பலகையாய்

குழந்தைகள் மனசு...!

என்ற இருவரிக்குள் எவ்வளவு உண்மை

 

** வீட்டுப்பாடம்

எழுதாததற்காய்

முட்டி போடச் சொன்னேன்

சிறுவனை

மனசுக்குள் உறுத்தியது

அன்று

கையெழுத்து வாங்க வேண்டிய

பாடக்குறிப்பை

தலைமையாசிரியரிடம்

காட்டாதது...!

 

பாசத்தை விடவும்

வலிவாகவே இருந்தது

பாழாய்ப்போன நம்பிக்கைகள்...!

என்ற வரிகள் மூடநம்பிக்கைகளை அழகாய் காட்டுகிறது

 

** தேர்வறையில்

மேற்பார்வையாளராய்

இருக்கையில்

வாசலுக்கு வெளியே

வண்ணத்துப்பூச்சி...!

இயற்கையை நேசிக்கும் கவிஞரின் அன்பு உள்ளம் தெரிகிறது

 

** கேள்வித்தாளின் பின்புறம்

வரையப்பட்ட ஓவியத்தில்

பூர்த்தியாகி இருந்தது

அவன்

தேர்வு முடித்த

மிச்ச நேரம்..!

எந்தக் குழந்தைகளையும் எந்த தேர்வும் கட்டிப் போட முடியாது என்பதை தெளிவாக விளக்குகிறார்.

 

** விடைத்தாள்களை

சிவப்பு மையால் தான்

திருத்த வேண்டி இருக்கிறது...!

என்ற வரியில் கவிஞரின் மனது தெரிகிறது.

 

** புகழேந்தி அவர்களின் கவிதைகளை படிக்கும் போதுதான் புரிகிறது.எவ்வளவு தொலைவில் மாணவர்களை விட்டு இருக்கிறோம் என்று 

 

** ஆசிரியர்கள்,கவிதை ஆர்வலர்கள் கண்டீப்பாக படிக்க வேண்டிய நூல்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments