*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - உள்ளொளிப்பயணம்

 



*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:13

தேதி:8-8-2022

புத்தகம் எண்ணிக்கை:13

புத்தகத்தலைப்பு: உள்ளொளிப்பயணம்

ஆசிரியர்:வெ.இறையன்பு

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

** குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த தகவல்களையும் செய்திகளையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்

 

** இந்நூலில் மொத்தம் 70 கட்டுரைகள் உள்ளது

 

** மிக எளிய நடையில் மனதைக்கவரும் வகையில் உள்ளது

 

** மனிதனுக்கு மரணம் உண்டு ஆனால் மனித குலத்திற்கு மரணம் இல்லை

 

** குட்டிக்கதைகள் அல்லது சிறு சிறு நிகழ்வுகளைக் கூறி நறுக்கென விசயத்தை தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர்

 

** உள்ளொளி என்பது அறிவாகவும் அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன

உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும் இயற்கை மீதான காதலாகவும் உயிர்கள் மீதான நேசமாகவும் இப்படி எண்ணற்ற உயர்பண்புகளாக மனிதனிடம் செயல்பட முடியும் என்பதை தெளிந்த நடையில் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்

 

** முடிவின்றித் தொடரும் உள்ளொளிப்பயணம் மனிதனின் வாழ்வனுபவத்திலிருந்தும் கூட்டுச்சூழலிலிருந்தும்தான் செழுமைப்படுகிறது என்பதை இந்நூல் விரித்துரைக்கிறது

 

** மனதைக்கவர்ந்த பல கதைகளில் ஒரு கதை

 

கிணற்றில் இருக்கிற தவளை எப்படித் தன் வாழ் நாள் முழுவதையும் அந்தக் கிணற்றிலேயே கழித்து விடுகிறதோ அதைப்போல பல மனிதர்கள் தங்கள் வாழ் நாள் முழுமையையுமே ஒரு சின்ன வட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டு முடித்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறார்கள்.அவர்களுக்கு அது பாதுகாப்பாக இருக்கலாம்.வெளியே செல்லத் தேவையில்லாமல் இருக்கலாம்.ஆனால் அவர்கள் இருக்கிற உலகத்தைக் காட்டிலும் இனிமையானதாக வேறொரு உலகம் இருக்க முடியாது என்று நினைக்கிறார்களே,அந்த எண்ணம் தான் தவறானது.

 

கடலில் இருந்து வந்த தவளை கிணற்றுத் தவளைக்கு கடலைப் பற்றி விளக்கிச் சொல்ல முடியாது.காரணம்,விவரங்களுக்கு அப்பாற்பட்டதாகக் கடல் வியாபித்து நிற்கிறது.எனவே அந்தக் கடலிலேயே வாழ்ந்தாலும் கடலைப்பற்றி  அந்தக் கடல் தவளைக்கு முழுவதும் தெரியாததில் வியப்பில்லை.ஏனென்றால் அதன் பயணம் குறுகியதாகத்தான் இருக்க முடியும்.நிச்சயம் கிணற்றைக் காட்டிலும் கடல் பெரியது என்கின்ற ஒன்று மட்டும் தெரியும்.இதுபோலவே ஒரு மாபெரும் மகானுடன் வாழ்கின்ற பலர்  அவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலேயே இருப்பதுண்டு.

 

கிணற்றில் இருக்கும் தவளையை எவ்வளவு வற்புறுத்தினாலும் அது கடலுக்கு வர சம்மதிக்காது.ஏனெனில் கிணற்றில் அலை இல்லை;புயல் இல்லை;ஆபத்துக்கள் இல்லை.

பல நேரங்களில் உண்மை நம் கண் முன்னே போகும்போது நாம் கண்களை இறுக மூடிக் கொள்கிறோம்.உண்மையைச் சந்திப்பது என்பது நமக்குப் பயத்தைத் தருகிறது.அதன் பிரம்மாண்டத்தின் முன் நாம் காணாமல் போய்விடுவோம் என்கின்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.

 

கிணற்றுத் தவளையாக இருப்பதில் கூடத் தவறில்லை.யார் கிணற்றில் இருந்து கொண்டு கிணற்றைக் கடல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ,,அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட முடியுமே தவிர பரிகாரம் செய்ய முடியாது.                        

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301 

Post a Comment

0 Comments