தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம் - ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

 


*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:17

தேதி:12-8-2022

புத்தகம் எண்ணிக்கை:17

புத்தகத்தலைப்பு: ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

தமிழில் ஆசிரியர்:தனபால்


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.         


** இந்த நூல் 19 கட்டுரைகளை உள்ளடக்கியது

 

**குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக்கின் கருத்துகளின் தொகுப்பேஒவ்வொரு  குழந்தையையும் நேசிப்போம்என்னும் நூல்

 

**இந்நூலை தி.தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

 

**குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங் களைத் தாண்டிக்குழந்தைகள் தொடர்பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது.

 

** குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை அடக்கியுள்ளது இந்நூல்.

 

**குழந்தைகள் போடும் சத்தமே பெற்றோருக்கு வேதனை தரக்கூடியது. இது பற்றிப் பேசும் கோச்சார்க், குழந்தை நடக்கும்போது நடக்கும், கடிக்கும்போது கடிக்கும் என்று சொல்கிறார்.

 

**‘எல்லா நரிகளும் தந்திரம் மிக்கதா, நிழல் என்றால் என்ன, கடவுள் யார், எப்படி இருப்பார்?’ போன்ற குழந்தைகளின் கேள்விகளுக்கு அவர்கள் மட்டத்திற்கு இறங்கி வந்து அவர்களிடம் பேசிப் புரிய வைப்பதே சிறந்தது என்று அவர் கூறுகிறார்.

 

**வளரிளம் பருவத்துக் குழந்தைகளுக்கு எல்லா விஷயங்களும் புரிந்திருப்பதில்லை ஆனால் அவர்கள் எல்லாவற் றுடனும் எதிர்நீச்சல் போடத் தீர்மானித்து விடுகிறார்கள் என்கிறார் கோச்சார்க். ஆகவே அவர்களின் விருப்பத்தையும் இசைவையும் கேட்டு ஆலோசனைகள் கூற வேண்டும் என அறிவுறுத்துகிறார் அவர்.

 

**‘படிப்பு என்பது தெரிந்துகொள்ளவா? இல்லை. மேலும் மேலும் கேள்வி கேட்கஎன்று தெரிவிக்கும் கோச்சார்க் குழந்தை களை அணுகும் முறையில் மாற்றம் ஏற்பட்டால் கல்வியிலும் சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

 

**வாசிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டுவதாகவும் யதார்த்தத்தை வெளிப் படுத்துவதாகவும் எக்காலத்திற்கும் ஏற்றதாகவும் இந்நூல் அமைந்துள்ளது.

 

**ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments