*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - குட்டி இளவரசன்

                                                     



*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:36

தேதி:31-08-2022

புத்தகம் எண்ணிக்கை:36

புத்தகத்தலைப்பு: குட்டி இளவரசன்

ஆசிரியர்: யூமா வாசுகி

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.            



**இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றான குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது

 

**1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக  வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்த நாவலை  மொழிபெயர்த்தவர்  யூமா வாசுகி

 

**அந்துவான்த் செந்த் எக்ச்பெரி ( Antoine de Saint-Exupery)பிரெஞ்சு எழுத்தாளர். இவர் விமான ஒட்டியாக ராணுவத்தில் பணியாற்றியவர்.

 

**இவர் ஒரு முறை விமானகோளாறு காரணமாக சகரா பாலைவனத்தில் அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் தரையிறங்கினார். அங்கே மனிதர்கள் யாருமேயில்லை . கண்ணுக்கு எட்டிய வரை மணல். இயற்கையின் விநோதம் விரிந்து கிடந்தது. ஒரு நபர் ஒட்டும் விமானம் என்பதால் துணைக்கும் யாருமில்லை.

 

**பகலிரவாக எங்கே போவது என்று தெரியாமல் ஆகாசத்தையும் காற்றையும் மணலையும் பார்த்தபடியே கிடந்தார்அந்த நாட்களில் அவர் மனது அடைந்த திகைப்பு, பரவசம், பயம், கற்பனை அவருக்குள் ஆழமான மாற்றத்தை உருவாக்கியது

 

**1923 ராணுவத்தை விட்டு வெளியே வந்த பிறகு  எழுதுவதில் ஆர்வமாகி தனது முதல்புத்தகத்தை 1925 ஆண்டு வெளியிட்டார். 1944 கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தில் சென்ற போது அவரது விமானம் ஆகாசத்தில் திடீரென தொடர்பிலிருந்து மறைந்துபோனது. தனது கதையில் வரும் குட்டி இளவரசனை போல எக்ச்பெரி  வாழ்வும் என்ன ஆனது என்று தெரியாத மர்மமாகவே முடிந்து போனது.

 

 **இன்று வரை அவரது மரணம் உறுதி செய்யப்படவில்லை. அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதன் துண்டுகள் சமீபத்தில் கண்டு எடுக்கப்பட்டன. ஆனால் எக்சுபெரி என்னவானார் என்பது துல்லியமாக அறியமுடியவில்லை.

 

**இவரது இலக்கிய சேவையை சிறப்பிக்கும் விதமாக பிரெஞ்சு தேசம் ஐம்பது பிராங்க் நோட்டில் அவரது கதையில் வரும் குட்டி இளவரசன் மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது.

 

**எது குட்டி இளவரசனை திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது

 

**குழந்தைகள் புத்தகம் என்று பொது அடையாளம் சூட்டப்பட்ட போதும் எக்சுபெரியின் நாவல் வாழ்வின் ஆழமான உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் தத்துவார்த்தமானவை. வாழ்வின் புதிர்தன்மையையும் அபத்தத்தையும் விவரிப்பவை. உலகை எந்த மனத்தடையும் அற்று நெருங்க சொல்பவை

 

**அதிக திருப்பங்கள். கதாபாத்திரங்கள் கிடையாது. குட்டி இளவரசன் பல நேரங்களில் ஒரு தீர்க்கதரிசியை போல நடந்து கொள்கிறான்

 

**ஒரு மலரை பாதுக்காப்பாக காப்பாற்ற தெரியாத மனிதர்கள் எப்படி பூமியை காப்பாற்றுவார்கள் என்று கேட்கிறான்

 

** ஆயிரக்கணக்கான ரோஜா வளர்க்க தெரிந்த மனிதனுக்கு ஒரு ரோஜாவினை கூட புரிந்து கொள்ள முடிந்ததில்லை என்று ஆதங்கம் கொள்கிறான். இயற்கை மனிதனுக்கு என்னவெல்லாம் தந்திருக்கிறது. அதை மனிதர்கள் எப்படி கண்டுகொள்ளாமல் சிதைக்கிறார்கள் என்பதையே நாவல் விவரிக்கிறது

**நன்றி: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

               

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301


            2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து    தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments