*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - மந்திரசொல்

 



*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*

நாள்:24

தேதி:19-08-2022

புத்தகம்:24

புத்தகத்தலைப்பு: மந்திரசொல்

ஆசிரியர்:எஸ்.கே. முருகேசன்

விலை:80

வெளியீடு: விகடன் பிரசுரம்


 மந்திரசொல்        


**எதேச்சையாக ஒரு முழுத்திரைப்படம் பார்க்கும் சூழல் உருவானது அத்திரைப்படத்தில் வரும் நான்கு வார்த்தைகள் எனது சிந்தனைகளை தூண்டியது என்னை மேலும் ஊற்சாகப்படுத்தியது என்னை மேம்படுத்தும் வரிகளாக இருந்தது

 

** அந்த வரிகள் *"உலகின் தலைசிறந்த சொல் - செயல்"* 

 

** அதிலிருந்து அது போன்ற சொற்களை தேடலின் விளைவாக படித்தது தான் இந்தப்புத்தகம் "மந்திரசொல்"

 

** 35 சான்றோர்கள் கூறிய மந்திர சொல்கள்

இங்கு தொகுத்து விளக்கப்பட்டுள்ளது

 

** இந்த புத்தகத்தில் உள்ள தொகுக்கப்பட்ட ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு கோணத்தில் நம் சிந்தனைகளைத்தூண்டும்

 

** மாபெரும்மேதைகளும் அறிஞர்களும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்த மந்திர சொற்களைபற்றியும் அவர்களைப்பற்றிய சுருக்க கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

 

**நம்மை மேம்படுத்தவும் ஊற்சாகப்படுத்தவும் இவை கண்டிப்பாக உதவும்

 

** இந்த நிலை மாறிவிடும்- சார்லின் சாப்ளின்

 

** எதிலும் தீவிரமாக இரு- வான்கா

 

** உன்னையே நீ அறிவாய்- சாக்ரடீஸ்

 

** தகுதியுள்ளவை தப்பிப்பிழைக்கும்- டார்வின்

 

** இக்கணத்தில் வாழு- புத்தர்

 

**நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்- ஆபிரகாம் லிங்கன்

 

** இழப்பதற்கு எதுவுமில்லை- கார்ல் மார்க்ஸ்

 

** துணிந்தவனுக்கு தோல்வியில்லை- சிவாஜி

 

**எது வசதியானதோ அதைச் செய்யாதே எது சரியானதோ அதைச்செய்- கன்பூசியஸ்

 

** எதையுமே நீ காதலுடன் செய் வெற்றி நிச்சயம்- உமர்கயாம்

 

** நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை - நேதாஜி

 

** வாய்ப்புகள் தாமே வராது நாம் உருவாக்க வேண்டும் - புரூஸ்லி

 

** தோல்வி என்பது வீழ்ச்சியல்ல படிப்பினையே - தாமஸ் ஆல்வா எடிசன்

 

** பொறுமை என்பது பலவீனமல்ல அதுவும் போராட்டமே -ஹோசிமின்

 

** பாதை இல்லையென்று கலங்காதே உருவாக்கு - லெனின்

 

** இப்படி ஒவ்வொரு சொல்லும் முத்தானவை நம்மை செதுக்குபவை.

 

** இந்த புத்தகத்தில் படிக்கும் ஒவ்வொரு மந்திரசொல்லும் அற்புதமானவை அணு ஆயுதத்தை விட வலிமையானவை நாம் கடைப்பிடித்து பயன்படுத்தும் விதமே எதுவுமே.

   

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here   

Post a Comment

0 Comments