கல்வியில் வேண்டும் புரட்சி ஆசிரியர் : வினோபா பாவே


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:164

தேதி:06-01-2023

புத்தகம் எண்ணிக்கை:164

புத்தகத்தின் பெயர் : கல்வியில் வேண்டும் புரட்சி 

ஆசிரியர் : வினோபா பாவே

பக்கங்கள் : 48 

விலை : 40 

பதிப்பகம் :இயல்பாகை 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


     *திட்டமிட்டு ,கட்டாயத்தின் மீது கற்பிக்கப்படும் கல்விக்குப் பதிலாக இயற்கையாக தன்னிச்சையாக கற்றல் நடைபெற வேண்டும் 

 

*இந்த நூல் மொத்தம் பத்து கட்டுரைகளை உள்ளடக்கியது 

 

*முறைப்படுத்தப்பட்ட பள்ளி கல்விக்கு தேவைக்கு மேல் மிகப் படுத்தப்பட்டுள்ளது இதன் விளைவாக நமது கல்வி முறைகள் இயற்கைக்கு மாறானதாகவும் தீமை பயப்பதாகவும் கேள்விக்குரியதாகவும் ஆகிவிட்டன 

 

*குழந்தைகளை அடைத்து வைக்கும் இடம் என்பதே பள்ளிக்கூடம் என்பதன் பொருள் ஆகிவிட்டது 

 

*ஒரு உண்மையான ஆசிரியர் கற்பிப்பது இல்லை கற்றுக் கொள்கிறார்

 

* உண்மையான வாழ்க்கையை ஒட்டியதாகவே கற்பித்தல் நடைபெற வேண்டும் 

 

*வாழ்வில் இருந்தே கற்பித்தல் நடைபெற வேண்டும் 

 

*கற்றலின் நோக்கம் விடுதலை, விடுதலை என்பதன் பொருள் பிறரிடம் இருந்து விடுபடுவது மட்டுமல்ல தன்னுடைய சொந்த மனம் ,உணர்ச்சிகள் ஆகியவற்றில் இருந்தும் விடுபடுவதாகும் 

 

*அச்சமின்மையின் என்பதன் பொருள் நாம் யாருக்கும் பயப்படக்கூடாது என்பதாகும் பிறரையும் நாம் பயமுறுத்தக் கூடாது என்பதே ஆகும் 

 

*மனிதனுக்கு மூன்று விதமான அறிவுக்கான கருவிகள் கிடைத்துள்ளன அவை இரக்கமுள்ள இதயம் வினா ,எழுப்பும் அறிவு ,பசியோடு கூடிய அறிவு 

 

*இந்தியாவில் 14 மொழிகளிலும் ஆங்கிலத்தில் உள்ள கற்பிப்பதை குறிக்கும் 'Teach 'எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான மூலச் சொல் இல்லை 

 

*ஆசிரியர் தன்னை கற்பிப்பவராக கருதக்கூடாது கற்பவராகவே கருத வேண்டும் 

 

*ஆதாரக்கல்வி என்பது ஒரு முறை அல்ல அது ஒரு கருத்து அது ஒரு எண்ணங்களின் சங்கமம் 

 

*கல்வி என்பது ஆற்றில் உள்ள நீர் போன்றது ஒவ்வொரு நாளின் அனுபவத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும் 

 

*பணம் கொடுத்து வாங்கிய அறிவு ஒருபோதும் அறிவாகாது பணத்துக்கு பெற்ற அறிவு உண்மையான அறிவை அன்பாலும் சேவையாலும் தான் பெற இயலும்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments