தெய்வம் என்பதோர் ஆசிரியர் : தொ. பரமசிவன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:168

தேதி:10-01-2023

புத்தகம் எண்ணிக்கை:168

புத்தகத்தின் பெயர் : தெய்வம் என்பதோர்

ஆசிரியர் : தொ. பரமசிவன் 

பக்கங்கள் :96 

விலை : 40 

பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம் 

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*தெய்வங்களைப் பற்றிப் பேசாமல் ஒரு பண்பாட்டிணை ஆய்வு செய்ய இயலாது என்று கூறியவர் தொ.பரமசிவன்.

 

*தெய்வங்களைப் பற்றி பேசாமல் ஒரு பண்பாட்டினை ஆய்வு செய்ய இயலாது வள்ளலார், பாரதி ,பெரியார் குறித்த கட்டுரைகள் சமகால பண்பாட்டின் இயங்குதளங்களை பின்னணியாகக் கொண்டவை 

 

*இந்நூலில் உள்ள கட்டுரைகள் தெய்வங்களைப் பற்றி கள ஆய்வு செய்து தெய்வங்கள் பற்றி எழுதியவை. 

 

*இந்நூலின் தலைப்பு "தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி" எனும் திருவாசக அடியில் இருந்து பெறப்பட்டதாகும் 

 

*மொத்தம் 15 கட்டுரைகளை உள்ளடக்கியது எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு "தமிழக ஆன்மீக வரலாற்றில் வள்ளலார்"

 

* இந்த நூலில் நாம் தெய்வமாக கொண்டாடப்படும் ஒவ்வொரு தெய்வங்கள் பற்றிய பின்னணிகளை ஆய்வு செய்து ஆதாரங்களோடு விளக்கியுள்ளார் 

 

*தமிழகத்தில் புரட்டாசி மாத வளர்பிறையில் நவராத்திரி விழா என்ற பெயரில் கோயில்களில் அம்மனை மைய மாக வைத்து பத்து நாட்களாக திருவிழா நடைபெறும்

 

* தமிழ்நாட்டு தாய்த்தெய்வம் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இலக்கியங்களில் இருந்து தான் நமக்கு கிடைக்கின்றன

 

,*சங்க இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும் தரும் குறிப்புகளின் படி குழந்தை பெற்ற தாயினை குறிக்கும் சொல்லாக செல்வி என்ற சொல்லே காணப்படுகிறது

 

* காடுகளில் செல்வி ,கடல் கெழு ,செல்லியம்மன், செல்லாண்டியம்மன் செல்லத்தம்மன் வடகால செல்வி போன்றவை எல்லாம் நமது தமிழர்களின் தாய் தெய்வம் 

 

"கன்னியாகுமரியில் உள்ள குமரி தெய்வம் தமிழர்களின் கடல் துறை தெய்வமாக தோன்றியிருக்க வேண்டும் கடல் கிரு செல்வி என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது 

 

*தமிழகத்தின் தாய் தெய்வங்களிலிருந்து தாய் தெய்வங்களில் தனித்து பேசக்கூடிய பிரிது ஒரு வகை தெலுங்கு மக்களோடு தமிழ்நாட்டுக்கு  குடி பெயர்ந்து வந்த தெய்வங்கள் ஆகும் 

 

*முத்தாலம்மன் ரேணுகாதேவி சீதலா தேவி எல்லம்மன் ஆகியவை இந்த "வகையைச் சேர்ந்ததாகும் மூத்தாயி அல்லது முத்தாயி, முத்தாட்சி அரியநாச்சி வஅரிய கிழவி ஆகிய பெயர்களில் வழங்கப்படும் தெய்வங்களை நோக்க வேண்டும் 

 

*இவற்றை வழிபடுவதற்கு குறைந்தது நான்கு ஐந்து தலைமுறைகளுக்கு இவை முற்பட்டவை எனலாம் 

 

*தமிழகத்தின் தாய் தெய்வ வழிபாடு நூற்றுக்கணக்கான பரிணாமங்களை உடையது இப்ப பரிணாமங்கள் தெய்வங்கள் வழிபடப்படும் வட்டாரத்தின் சமூக அரசியல் வரலாற்றோடு தொடர்புடையன இவ் வரலாற்று அசைவுகளை அளந்த அரியவும் எழுதிக்காட்டவும் ஆய்வாளர்களும் நூற்றுக்கணக்கில் தேவைப்படுகின்றனர்  சமூக வரலாற்றையும் பண்பாட்டு வரலாற்றினையும் கண்டு உணர்வதற்கு துணை நிற்கும் சான்றுகளில் குறிப்பிடத் தகுந்தது தாய் தெய்வ வழிபாடு ஆகும் 

 

*"தமிழ்நாட்டில் வழங்கப்படும் தாய் தெய்வங்களில் மாரியம்மன் ,பொன்னியம்மன், செல்லியம்மன் ,இசக்கியம்மன் பத்ரகாளியம்மன் போன்றவை போல குறிப்பிடத் தகுந்த ஒரு தெய்வம் உலக அம்மன் ஆகும்

 

* நெல்லை மாவட்டத்தில் பெண் மக்கள் பெயர் வழக்குகளில் உலகநாயகி என்றும் ஆண் பெயர்களில் உலகநாதன் என்றும் இப்பெயர் இன்றும் காணப்படுகிறது 

 

*முருக்கு முருகனாக வளர்ச்சி பெற்றபோது வள்ளி அவன் மனைவியாக்கப்பட்டால் சிலப்பதிகாரமே முதன் முதலில் அவளை குர மகள் என்று தெளிவாக குறிப்பிட்டு அவளை குறவர்கள் தம் குலமகள் என்று கொண்டாடுவதையும் குறிப்பிடுகின்றது பின்னர் பக்தி இயக்கத்தின் எழுச்சியின் போது சிவனுக்கு மகனாக முருகன் மாற்றப்பட்டபோது திருநாவுக்கரசர் மட்டும் முருகனின் மனைவியை வள்ளி என்ற கதையினை ஏற்றுக்கொள்கிறார் 

 

*குறவி தோல் மணந்த குமரவேல் நம் செந்தில் மேய வள்ளி மணாளன் என்ற பெயர்களால் அவர் முருகனை குறிப்பிடுகிறார் 

 

*சித்திரை மாதம் முழு நிலவு நாளன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் வீட்டு விழாக்களில் ஒன்று நயினார் நோன்பு என்று அழைக்கப்படும் சித்திரகுப்த நைனார் நோன்பு ஆகும் 

 

*தில்லை சிதம்பரம் கோயிலின் மீது வள்ளலாருக்கு இருந்த பற்று வடலூரில் தான் நிறுவிய சபைக்கு உத்திர ஞான சிதம்பரம் அதாவது வடக்கு சிதம்பரம் என்று பெயரிட வைத்தது ஆனால் வள்ளலார் கோயில் வழிபாட்டுக்கு அடிப்படையான உருவ வழிபாட்டை தான் நிறுவிய ஆன்மீக மையத்தில் நிராகரித்தார்

 

* அதற்கு கோயில் என்று பெயரிடாமல் சபை என்று பெயரிட்டதால் கோயில்களில் சமயம் சார்ந்த அடிகளுக்கு உணவளிக்கும் மரபு தமிழகத்தில் தொண்டு தொண்டு நடந்து வந்துள்ளது தில்லையிலும் அவ்வாறு உணவளிக்கப்பட்டதனை அன்னம் பாதிக்கும் தில்லை சிற்றம்பலம் என்ற அப்பர் தேவாரத்தினால் அறியலாம் வள்ளலாரும் சாதி மதம் கடந்து ஏழை எளியவர்களுக்கு உணவளித்தல் என்ற நடைமுறையை செய்தார் 

 

*வைணவ இலக்கியப் படைப்பாளிகளில் ஆண்டாள் சில தனிச்சிறப்புகளை உடையவர் ஆவார் பன்னிரு ஆழ்வார்களில் அவர் ஒருவரே பெண் என்பதோடு மற்றும் ஒரு வைணவ இலக்கிய படைப்பாளியின் மகள் என்பதும் அவர் பெற்ற சிறப்பாகும் 

 

* மாரி என்னும் தமிழ் சொல்லுக்கு மழை என்பதே பொருளாகும்

 

* மழையை கட்டுப்படுத்தும் தெய்வம் மாரியம்மன் ஆகும் 

*தமிழ் இலக்கிய பெரும் பரப்பின் பெரும் பகுதி எனை 20 ஆம் நூற்றாண்டில் தொடக்கம் வரை பக்தி இலக்கியங்களை நிறுத்தி வந்துள்ளன 

 

*அறிவு தலை எடுக்கும் போது கவிஞனின் பேச்சு ஆண் பேச்சாகவும் அன்பு பெருக்கெடுக்கும் போது பெண் பேச்சாகவும் அமைகிறது என்பது எளிமையும் ஆழமும் சேர்ந்த விளக்கமாகும் 

 

*தெய்வம் என்பதோர் என்ற நூலில் பல தெய்வங்களைப் பற்றி அதிசயத்தக்க ஆராய்ச்சி பூர்வமான தகவலை எழுதியுள்ளார். 

 

*இந்த நூலைப்படிக்க படிக்க நமது தெய்வங்களின் வரலாறு நம் கண் முன்னே தெரிகிறது

 

*ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு கடவுளுக்கும் பின்பும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உள்ளதை இந்த நூல் உணர்த்துகிறது

 

 *நாம் ஒவ்வொரு தெய்வத்தை பார்க்கும் போது அதுகுறித்து அந்த தெய்வத்தை குறித்த தகவல்களை கிராமத்தின் வழியே ஆராய்ச்சி செய்து உண்மையான தகவலை  கண்டறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது 

 

* தெய்வம் என்பதோர்  நூலை கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும்.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments