சுண்டெலி முதலை கதைகள் ஆசிரியர் :ச.மாடசாமி*தினம் ஒரு புத்தகம்*

நாள்:180

தேதி:22-01-2023

புத்தகம் எண்ணிக்கை:180    

புத்தகத்தின் பெயர் : சுண்டெலி முதலை கதைகள் 

ஆசிரியர் :ச.மாடசாமி 

பக்கங்கள் : 80 

விலை : 70 

பதிப்பகம் : வாசல் 


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

 

*இந்தப்புத்தகம் இரு தலைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது சுண்டலி கதைகள் ,முதலைக்கதைகள் 

 

*ஒவ்வொரு தலைப்பிலும் ஐந்து கதைகளும் ஒரு உரையாடல் கதையும் என மொத்தம் ஆறு பகுதிகளை உள்ளடக்கியது 

 

*குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் அவர்களை கவரும் வகையில் எழுத்து நடை இருக்கிறது 

 

*குழந்தைகளின் மன உணர்வை புரிந்து கொண்டு இந்த கதைகள் எழுதப்பட்டுள்ளது 

 

*கல்லூரி ,வகுப்பறை அறிவொளிஇயக்கம், மனித உரிமைகல்வி,வீட்டுக்கல்வி என்று கல்வியின் வெவ்வேறு தளங்களில் கற்பிக்கும் முறைகளை மாணவர்களுக்கு நெருக்கமாக வேண்டும் என்று புதிய முயற்சிகளை செய்து கொண்டு இருப்பவர் இந்த நூலாசிரியர் மாடசாமி அவர்கள் 

 

*சோம்பல் இல்லாத காயப்படுத்தாத உயிரோட்டமுள்ள மாணவர் மைய வகுப்பறை குழந்தையை நேசிக்கும் வகுப்பறைகளை உருவாக வேண்டுமென்பதை மீண்டும் மீண்டும் தனது செயல்பாடுகளால் பொதுவெளியில் நினைவுபடுத்துபவர் 

 

*இந்தக்கதைகளில் சுண்டலியும் முதலையும் பேசுகின்றன குறும்பு செய்கின்றன சாகசங்கள் செய்கின்றன படிக்கும் குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது 

 

* சுண்டெலி எளிய மனிதனின் அடையாளம் வெற்றி பெறுவதற்காக சில நேரங்களில் ஏமாற்றுவது போலத் தெரியும் அச்சுறுத்தல் கண்காணித்தல் கட்டாயப்படுத்துதல் திணித்தல் அதிகாரம் செலுத்துதல் பலத்தை காட்டுதல் போன்றவை இருக்கும் வரை ஏமாற்றுத்தனமும் இருக்கும் இருக்க வேண்டும் என்கிறார் 

 

*கதைகளின் மூலம் குழந்தைகளுக்கு நல்லது எது கெட்டது என உணர்த்தி அறத்தை கற்பிக்கிறோம் 

 

*கதைகளின் வழியே வாழ்வியல் அறங்களை குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்கின்றன 

 

*கதைகளைப்படிக்கும் போது நமக்கே மகிழ்வாக இருக்கிறது கண்டீப்பாக குழந்தைகளுக்கும் மகிழ்வாக இருக்கும்

 

* கதை நூல்கள் படிக்கும் போது குழந்தைகளின் சொற்களஞ்சியங்கள் பெருக்கமடைகின்றன 

 

*கண்டிப்பாக குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டிய ஒரு நல்ல கதைப்புத்தகம்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments