தமிழன் என்ற கர்வம் எனக்குண்டு ஆசிரியர் : சிகரம் .சதீஷ்குமார்




*தினம் ஒரு புத்தகம்*

நாள்:161

தேதி:03-01-2023

புத்தகம் எண்ணிக்கை:161

புத்தகத்தின் பெயர் : தமிழன் என்ற கர்வம் எனக்குண்டு 

ஆசிரியர் : சிகரம் .சதீஷ்குமார் 

விலை : 50 

பக்கங்கள் : 64 

பதிப்பகம் :  மேன்மை வெளியீடு 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


*கவிதை நூலின் தலைப்பே இந்த கவிதை நூலை வாசிக்கத்தூண்டியது வாசித்த பின் யோசிக்கவும் தூண்டியது 

 

*ஆசிரியர் சதீஷ்குமார் அவர்களின் கவிதை நூலின் அட்டைப்படமே ஒரு புதுக்கவிதை 

 

இளைஞனே 

இந்த சமூகத்தில் 

முதுகைக் காட்டாதே 

பாரதி போல் 

மீசையை முறுக்கு 

முகத்தைக்காட்டு 

உன்னால் 

சமூகம் மாற்றம் 

ஏற்படுத்த முடியும்...! 

 

*மொத்தம் பத்து கவிதைகள் மற்றும் தலைப்பில்லாத இரண்டு புதுக்கவிதைகள் இன் நூலில் இருக்கிறது 

 

*10 தலைப்புகளும் ஒவ்வொரு ஹைக்கூ போல் இருக்கிறது 

     பவனி 

     வருகிறாள் 

     பவானி ....!

 

*என்னை மிகவும் வியக்க வைத்த தலைப்பு கண்ணீரால் வியர்க்க வைத்த தலைப்பு "விவசாயம் காப்போம்"

 

*மனதை மையமிட்ட சில கவிதை வரிகள் 

 

*விவசாயிகளின் துயரைச் சொல்லி கடைசியில் கண்ணீருக்கு பதிலாக ரத்தம் வரவழைத்த கவிதை 

 

இவன்தான் விவசாயி           அருங்காட்சியக மண்டையோடுகள்      அடையாளம் காட்டலாம்....!

 

* நல்ல அரசியல்வாதிகளை தேடும் இன்றைய நிலையை தோலுரித்துக் காட்டும் கவிதை 

       

       விருதுநகர் தந்த 

       விளைநிலமே 

       இனி உன்னை போல் 

       யாரைக் காண்போமோ ...?

 

*புதுக்கவிதையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி பல இளம் கவிஞர்களை உருவாக்கிய கவிப்பேரரசு பற்றி 

 

          வைரமுத்து 

          இது பெயர் அல்ல 

          தமிழுக்கு ஒரு பேறு....!

 

*தமிழர் பண்பாட்டை வீரத்தைக் காக்க இளைஞர்கள் செய்த மெரினா புரட்சியை காலக்கண்ணாடியாக பதிவு செய்துள்ளார் 

 

       சாதியும் இல்லை 

       மதமும் இல்லை 

       மனிதம் மட்டும் மகா சமுத்திரமாய்                        

       கூடி நின்றது...!

 

*தன்னுள் பாதியாக கலந்துள்ள தன் மனைவி பற்றி கவிதையில் மனைவி மீது இவர் கொண்ட ஆழ்ந்த அன்பு புலப்படுகிறது 

 

        என்னை 

       அதிகம் நேசிப்பவள் என்னாலும்                                             அதிகம் நேசிக்கப்படுபவள் ...!

 

*குழந்தை தொழிலாளியின் துயரை வெளிப்படுத்தும் கவிதை 

        நீங்கள் பற்றவைக்கும் 

        ஒவ்வொரு தீக்குச்சியும்

        தெரிகின்றதா....?

        எங்களின் முகம்...! 

 

*ஒவ்வொரு கவிதையிலும் சமூக நலனே வெளிப்படுகிறது 

 

*சமூக நலன் மிக்க கவிதைகள் படித்த மனநிறைவு 

 

*சிகரம் சதீஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் எழுத்து உலகில் இன்னும் பல சிகரம் தொட வாழ்த்துகிறேன்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments